மரவள்ளிக்கிழங்கு வடை

தேதி: March 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

மரவள்ளிக்கிழங்கு - அரைக் கிலோ
தனி மிளகாய்த் தூள் - அதை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
பூண்டு - 5
சோம்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - பொரிக்க‌ தேவையான‌ அளவு


 

கிழங்கை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
கிழங்குடன் தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு (தோலுடன் நசுக்கி போடவும்), சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்க‌ வேண்டாம்.
பிசைந்த‌ மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் வைத்து வடையாக‌ தட்டவும்.
வடையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இந்த‌ வடை சுற்றிலும் மொறுமொறுப்பாகவும் நடுவில் மிருதுவாகவும் இருக்கும் இந்த‌ வடைக்கு கறிவேப்பிலை, பூண்டு, சோம்பு தான் தனி சுவையை தரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மரவள்ளிக்கிழங்கு வடை. இப்படி ஒன்ன நான் இன்னைக்கு தான் கேள்விப்படுறேன். வடை கடைசி படம் சூப்பர். குறிப்புக்கு 5 ஸ்டார் குடுத்தாச்சி. விருப்பப்பட்டியல்ல சேர்த்தாச்சி.

உன்னை போல் பிறரை நேசி.

மரவள்ளி கிழங்கு வடை சூப்பர் டிப்ஸ், நாங்க சிப்ஸ் செய்வோம் , அடை கூட செய்வோம் வடை செய்தது இல்லை.....ட்ரை பண்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை அழகா வெளியிட்டமைக்கு நன்றி அட்மின்.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்ஸ் சிஸ். இது உண்மையாவே ரொம்ப‌ டேஸ்டியான‌ வடை. செய்தா நீங்களே சொல்வீங்க‌. இது என் அம்மாவின் கை வண்ணத்தில் உருவானது. அவங்க‌ கிட்ட‌ இருந்து நான் சுட்டுட்டேன். வடையோடு சேர்த்து குறிப்பையும்.

எல்லாம் சில‌ காலம்.....

இது ரொம்ப‌ நல்லா இருக்கும். ட்ரை பண்ணுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

Supera iruku. Puthusa oru vadai. Seiyanum

Be simple be sample

thanks rev's. கண்டிப்பா செய்து பாருங்க‌. ரொம்ப‌ பிடிக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

கப்ப கிழங்கில் வடை. புதுசாயிருக்கே :))
கிழங்கு கிடைக்கையில் செய்துப் பார்க்கிறேன்.

Recipe pudhusaa irukee... nethu kuda engaiyo ponapo indha kizangu paarthen. Ini kannil pattaa vaangi seydhuduren.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது கப்ப கிழங்கு இல்ல. மரவள்ளி கிழங்கு. இது என் அம்மாவின் பழய‌ ரெசிபி. ரொம்ப‌ நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க‌

எல்லாம் சில‌ காலம்.....

குறிப்பு பிடித்திருக்கிறது. கிழங்கு கிடைக்கும் போது சமைத்துப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

தேங்க்ஸ் இமா அம்மா. இது என் அம்மாவிடம் கற்றது. அவங்க‌ எல்லாமே ரொம்ப‌ நல்லா டேஸ்டா சமைப்பாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்ஸ் இமா அம்மா. இது என் அம்மாவிடம் கற்றது. அவங்க‌ எல்லாமே ரொம்ப‌ நல்லா டேஸ்டா சமைப்பாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....