பொடி வகைகள் தயாரிப்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது வீட்டிலேயே தயாரிக்கும் மாவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவு.
பஞ்சாப் கோதுமை = 1 1/2 கிலோ (உருண்டை)
சம்பா கோதுமை = 1/2 கிலோ
கடலைப் பருப்பு = 100 கிராம்
மக்காச்சோளம் = 100 கிராம்
சோயாபீன்ஸ் = 50 கிராம்
இவை அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் சப்பாத்தி செய்தால் ஆறிய பின்பும் கூட சப்பாத்தி மிருதுவாக இருக்கும். அதற்குக் காரணம் சம்பா கோதுமை சேர்ப்பது தான். இந்த முறையில் அரைத்து சப்பாத்தி செய்து பாருங்க. அப்புறம் நீங்க தான் கிச்சன் குயின் மாதிரி சப்பாத்தி குயின்....
நாம் கடையில் வாங்கும் சப்பாத்தி மாவில் சப்பாத்தி சாஃப்ட் ஆ வருவதற்காக என்னென்ன சேர்க்கிறாங்க தெரியுமா? சோடா சேர்ப்பாங்கன்னு சொல்றீங்களா?
அது மட்டும் இல்லீங்க.
வைக்கோலை அரைத்து தூளாக்கி சேர்க்கிறாங்க.ஒரு பிரபலமான பிராண்டில இப்படி சேர்ப்பதாக மிகவும் நம்பத்தகுந்த தகவல் எனக்கு கிடைத்துள்ளது. உங்க வீட்ல கூட அந்த பிராண்டு தான் வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.
நான் எப்பவும் கோதுமை வாங்கி அரைத்து கொள்வதே எனது வழக்கம்.

அடுத்து பச்சரிசி மாவு
புட்டு மாவு, இடியாப்ப மாவு, முறுக்கு மாவு இப்படில்லாம் கடையில் வாங்குறோம்.
ரொம்ப ஈசிங்க.
பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு, நீரை வடித்து விட்டு, ஒரு துணியில் போட்டு நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஈரம் மட்டும் உலர்ந்தால் போதும். மிஷினில் கொடுத்து புட்டு மாவு என்றால் கொஞ்சம் பரபர என்று அரைக்கணும். மாவை நன்கு வறுத்து சல்லடையில் சலித்து கப்பியை மிக்சியில் அரைத்து மீண்டும் வைத்துக் கொள்ளவும்.
இதிலே புட்டு, கொழுக்கட்டை செய்யலாம்.
இதையே நல்லா நைசா அரைத்துக் கொண்டால் இடியாப்பம் செய்யலாம்; கடலைமாவு கலந்து காராசேவு, ஓமப்பொடி செய்யலாம். உளுந்தம்மாவு கலந்து முறுக்கு செய்யலாம்.
இந்த வறுத்த பச்சரி மாவில் செய்யும் முறுக்கு நல்ல வெள்ளையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். உளுந்தம் மாவும் உளுந்தம்பருப்பை பக்குவமாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளலாம்.
அரிசிமாவு , உளுந்தம்மாவு 4: 1 என்ற கணக்கில் கலந்து உப்பு, சீரகம், எள் கலந்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரம் முறுக்கு பிழிந்து கொள்ளலாம். இது போலவே தான் காரசேவும் பிழியலாம்.
கடலைப் பருப்பை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் கடலை மாவு ரெடி. ஒரு முறை அரைத்துப் பாருங்க. அப்புறம் கடையில் வாங்கும் கடலைமாவை நீங்க ஏறெடுத்தும் பார்க்க மாட்டீங்க. சுவையில் அத்தனை வேறுபாடு தெரியும். மீதியை இருக்கவே இருக்கு ஃபிரிஜ். அதிலே பாதுகாக்கலாம். வண்டு விழாது.

உங்க வீட்டுக் குட்டீசுக்கு பாலில் கலந்து கொடுக்க என்னென்னவோ பொடிகளை வாங்குவீங்க. அதிலே என்ன சேர்த்திருக்காங்கன்னே தெரியாது.
நான் சொல்லுவதை ரெடி பண்ணிக் குடுங்க.
கேழ்வரகு = 1/4 கிலோ
பாதாம் = 50 கிராம்
பிஸ்தா = 50 கிராம்
முந்திரி = 50 கிராம்
வேர்க்கடலை = 50 கிராம் (வறுத்தது)
சுக்கு = ஒரு துண்டு
ஏலக்காய் = 10
குங்குமப்பூ = சிறிது
கேழ்வரகை வறுக்கவும். மிக்சியில் அரைக்கவும். நட்ஸ்லாம் போட்டு தனியே மிக்சியில் அரைக்கவும். அனைத்தையும் சேர்த்து சல்லடையில் சலித்து கப்பியை மீண்டும் அரைக்கவும். நைசாக அரைத்தால் நல்லது.
ஒரு கப் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைப் போட்டு, தேவையான வெல்லம் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து எடுங்கள். மிகவும் சுவையான ராகி மால்ட் ரெடி. நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
இரவு உணவுக்குப் பின் பருக ஏற்ற பானம்.
பாதாம் மற்றும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செய்து பார்த்து குட்டீசுக்கும், உங்களுக்கும் பிடிச்சுதான்னு சொல்லுங்க தோழீஸ்.
Comments
niki
கோதுமை மாவுல இப்படில்லாம் பண்ணறாங்களா:(.நாண் வெறும் கோதுமையுடன் சோயா மட்டுமே சேர்ப்பேன்.இனி நீங்கசொன்ன மாதிரியே அரைக்கிறேன்.ராகி மால்ட் மாவும் நல்லாருக்கு. கட்டாயம் அதுவும் அரைத்து பார்த்துட்டு சொல்லறேன்.மேலும் இது போல உபயோகமான பதிவு போடுங்க.
Be simple be sample
நிகிலா
அ௫மையான பதிவு.
உலர்ந்த சோயாபீன்ஸ் கடை ல கிடைக்குமா?
//அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.// இதை அனைத்தையும் தண்ணிீர் ல அலசி காய வைக்கணுமா? இல்ல சும்மா காய வைக்கணுமா?. சாரிங்௧ இத பற்றி எனக்கு ஒண்ணும் தெரியல அதான் கேட்டேன்.
ரம்யா ஜெயராமன்
ramya
சோயா பீன்ஸ் கிடைக்கும் கடைல.அப்படியே வெயிலில் காய வைங்க. ரொம்ப நாள் வண்டு பிடிக்காம இருக்க, அரைக்க ஈசியா இருக்கத்தான் வெயிலில் காய வைக்கிறது அவசியம்.
Be simple be sample
ரேவா
ஆம் ரேவா. தெரிந்த நண்பர் ஒருவர் இன்ஸ்பெக்ஷன் சென்ற போது பார்த்ததாக சொன்ன தகவல் இது.
நீங்களும் சோயா சேர்ப்பீங்களா? குட். அதில நிறைய புரோட்டீன் உள்ளதுன்னு சொல்லுவாங்க.
இனி சம்பா கோதுமையும் சேருங்க. சூப்பரா இருக்கும்.
ராகி மால்ட் குட்டீசுக்கு பிடிக்கும். வெல்லம் போட்டு செய்யுங்க ரேவா.
பதிவுக்கு நன்றி ரேவா.:)
ரம்யா
//உலர்ந்த சோயாபீன்ஸ் கடை ல கிடைக்குமா?//
கிடைக்கும் ரம்யா.
உங்களுக்காக முதல் படத்தை மாற்றி இருக்கிறேன். அதில் சோயா இருக்கு பாருங்க. வெள்ளையா பட்டாணி சைசில. அதுவே தான்.
தண்ணீரில் அலசி காய வைக்கலாம். ஆனால், நன்கு காய வேண்டும். இல்லாவிடில் வண்டு விழுந்து விடும்.
நான் அலசுவதில்லை. . கல் நீக்கி அப்படியே அரைத்து விடுவேன். என் சித்தி தண்ணீரில் அலசி காய வைப்பாங்க.
உங்க வசதிப்படி செய்யுங்க ரம்யா.
//சாரிங்௧ இத பற்றி எனக்கு ஒண்ணும் தெரியல அதான் கேட்டேன்//
இதுக்கு எதுங்குங்க சாரிலாம்.. தோழிகள் கேட்பதும் சொல்வதும் தானே அறுசுவை நட்பு.:)))
ரேவா
எங்க பாட்டி கோதுமையை தண்ணீர் தெளித்து குத்தி தீட்டி புடைப்பாங்க.
அது தேவையில்லை.
நான் சும்மா காய வைத்தே அரைக்கிறேன்.
ரம்யாவுக்கு பதில் சொன்னதுக்கு தான்க்ஸ் பா:)
1year baby
Nenga sonna ragi malto 1 year baby ku kudukalama verum milk Matum kudika matran
நிகிலா மேம்..
ராகியை வறுத்து பொடி செய்வதற்கு பதிலாக ராகி மாவு பயன்படுத்தலாமா இங்கு முழு ராகி எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை ஆதலால் தான் கேட்டேன்.இந்த ராகி மால்ட் 2 வயது குழந்தைக்கு கொடுக்கலாமா.
Sangeesid
Nenga sonna ragi malto 1 year baby ku kudukalama verum milk Matum kudika matran
கொடுக்கலாம் தோழி. அனைத்து வயதினருக்கும் ஏற்றது தான்.
வெல்லம் சேர்ப்பதால் சுவை மாறுபட்டு இருக்கும்,. ஒரு வயது குழந்தைக்கும் தாராளமாக கொடுக்கலாம்.
sirajsalaj
//ராகியை வறுத்து பொடி செய்வதற்கு பதிலாக ராகி மாவு பயன்படுத்தலாமா//
முழு ராகி கிடைக்காவிட்டால் மாவு பயன்படுத்துங்க தோழி.
அனைத்து வயதினருக்கும் ஏற்றது. தாராளமா கொடுங்க.
மேம் லாம் வேண்டாமே. பெயர் மட்டுமே போதும் தோழி. நீங்க நம்ம ஊரா..:)).
nikila akka
Akka super recipe
All mavu items
Ragi malt super
Chappathi mavu recipe very very nice
Akka soya beens and makka cholam ella market laym kitaikuma
ML
கல்யாணி
உங்களுக்கும் நெல்லையா?
நெல்லையில் ஆர்யாஸ் சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கும்.
நாகர்கோவிலில் கணேஷ் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்.
கல்யாணி, சோயாவும், மக்காச்சோளமும் இங்கே எல்லாக் கடையிலும் எளிதாகக் கிடைக்கும்.
மாவு வகைகளை நீங்களே தயாரித்து கலப்படமற்ற உண்வுக்கு மாறுங்க பா
பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி கல்யாணி:))
nikila akka
Tirunelveli than akka
Marrage aaki eppo erukira area nagerkovil
Akka neenka soltra aarya super market murugen kurichila thane eruku
Paramakalyani collage theriuma akka
Unkalukum native nellai thana akka
ML
கல்யாணி
எனக்கும் நெல்லை தான் பா.
ஆர்யாஸ் சூப்பர் மார்க்கெட் முருகன்குறிச்சியில தான் இருக்கு கல்யாணி.
அங்கே எல்லாமே கிடைக்குது. எனக்கு உமி நீக்கிய தினை அரிசி கிடைக்கவே இல்லை. போத்தீஸ் ல கூட இல்லை. ஆர்யாஸ் ல தான் கிடைச்சுது.
அது போல ரொம்ப நாளா தேடிட்டிருந்த ஒயிட் வினிகரும் அங்கே கிடைச்சுது . ஒரு விசிட் அடிச்சுப் பாருங்க கல்யாணி. :)
நாகர்கோவிலில் லின்ஸ் மற்றும் கணேஷில் எல்லாமே இருக்கும். நான் அப்பப்போ வருவது உண்டு.
நிகி
சத்தான பதிவு கொடுத்த நிகிக்கு வாழ்த்துக்கள் :) அனைத்தும் அருமை நிகி இன்னும் என்னெல்லாம் இருக்கோ எடுத்து விடுங்க எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் :) கோதுமை மாவு பிராண்ட் படித்து ஷாக் ஆய்ட்டேன் :o
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நிகிலா $ ரேவதி
நன்றி ரேவதி.
நிகிலா மிளகாய் தூள், மல்லித்தூள் இரண்டையும் அரைத்து விட்டேன், மாவு இந்த வார இறுதியில் அரைக்கணும். படத்தை மாற்றியதற்கு நன்றி. விழிப்புணர்வு தந்த உங்கள் பதிவிற்கு நன்றி.
சாம்பார் தூள் எப்படி அரைக்கணும், அதையும் நான் கடையில் தான் வாங்குகிறேன்.
ரம்யா ஜெயராமன்
Nikila
Thanks try pani pathutu solren nuts um varuthutu araikanuma
சுவா
வாழ்த்துக்கு நன்றி சுவா:)
//கோதுமை மாவு பிராண்ட் படித்து ஷாக் ஆய்ட்டேன் :o// நானும் தான் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ஆயிட்டேன்.
//இன்னும் என்னெல்லாம் இருக்கோ எடுத்து விடுங்க எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் :) // கட்டாயம் சுவா. உங்க பதிவு ஊக்கத்தை தருது.
நன்றி சுவா:)
ரம்யா
நெட்ல சாம்பார் பொடின்னு தட்டினா ஏராளமா வரும்.
நான் எங்க பாட்டிம்மா சொல்லித் தந்த முறையில் அரைக்கிறேன்.
உங்களுக்காக இதோ..
சாம்பார் பொடி
மிளகாய் வற்றல் = 1/4 கிலோ
மல்லி (தனியா) = 100 கிராம்
துவரம்பருப்பு = 75 கிராம்
கடலைப்பருப்பு = 50 கிராம்
உளுத்தம்பருப்பு = 25 கிராம்
நல்லமிளகு = 50 கிராம்
சீரகம் = 25 கிராம்
வெந்தயம் = 25 கிராம்
மஞ்சள் = 50 கிராம்
கறிவேப்பிலை = சிறிது
வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
கருத்துக்கு நன்றி ரம்யா:))
sangeesid
வேர்க்கடலை மட்டும் வறுத்தது வாங்குவேன்.
பாதாம், பிஸ்தா, முந்திரி நான் வறுக்கவில்லை தோழி.
அப்படியே அரைத்துக் கொள்ளலாம் பா ...
செய்து பார்த்து சொல்லுங்க
கட்டாயம் பிடிக்கும்:))
நிகி அக்கா,
மாவு வகைகளுக்கான டிப்ஸும் , மெதடும் ரொம்ப ஈசியா இருக்கு,
அருமையான தேவையான பதிவும் கூட........ கலக்குங்க.......
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Niki thozhi
Rompa taste health drinks en paiyan virumpi kudichan rompa rompa tnx milk la 1spoon pota udane kozha kozha nu akitu atha filter pani than kuduthen ipdithan irukuma first milk ah nalla kachitu athuku apram ragi malto potu 1nimitam kothika vaithu kuduthen kanchi mathiri kudukalama ragi malto va
சுபி
//மாவு வகைகளுக்கான டிப்ஸும் , மெதடும் ரொம்ப ஈசியா இருக்கு,
அருமையான தேவையான பதிவும் கூட........ கலக்குங்க.......//
பாராட்டுக்கு நன்றி ...
சுபி சொல்லியாச்சே......விடுவோமா? விடாம கலக்கிடுவோம் ல...:)))
sangeesid
//Rompa taste health drinks en paiyan virumpi kudichan// ரொம்ப சந்தோஷம் சங்கீ. உங்களை 'சங்கீ' ன்னு அழைக்கலாம் அல்லவா..
நீங்க செய்த முறை சரி தான். ஆனால், நான் ஃபில்டர் பண்ணுவதில்லை. கொஞ்சம் திக்கா தான் இருக்கும். திக்கா வேண்டாம்னா மாவை குறைத்து போடலாம். மாவு நன்கு அரைபட்டால் ஃபில்டர் பண்ண தேவையில்லையே.
கஞ்சி மாதிரியும் கொடுக்கலாம். குழந்தைக்கு பிடித்த மாதிரி கொடுங்க தோழி:)))
Nikila thozhi
Sangee nu sollalam .. Marupadium mix la nangu araithu sAlithu pakuren...
நிகிலா அருமையான பதிவு
நிகிலா அருமையான பதிவு. எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்ப்பேன். கோதுமை மாவில் சோயா பீன்ஸ்க்கு பதில் சோயா சேர்க்கலாமா?
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
சங்கீ
குட் அப்படியே முடிந்தவரை நன்கு அரைத்தால் ஃபில்டெர் பன்ன தேவையில்லை:)) .
தாமரை
//எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன்//
சந்தோஷம் தாமரை.:))
அவசியம் செய்து பாருங்க.
சோயா பீன்சுக்கு பதிலா சோயாவா? ரெண்டும் ஒண்ணு தானே. முதல் படத்தில் வெள்ளையா இருக்குதே அது நம்ம ஊரிலே கிடைக்கும் தாமரை. நீங்க சோயான்னு வேறு எதைச் சொல்லுறீங்க ?
மீல் மேக்கர்
மீல் மேக்கர்னா சோயா தானே நிகிலா.
நிகிலா நம்ம ஊரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
தாமரை
மீல் மேக்கர் அது சோய உருண்டை தானே.
அதில என்னவெல்லாம் சேர்த்திருக்காங்களோ? நீங்க சோயா பீன்ஸ் வாங்குங்க தாமரை.
நம்ம ஊரை ரொம்பவே மிஸ் பண்ணுறீங்களா? அப்படீனா நீங்க இப்போ இந்தியாவில் இல்லையா?
எந்த நாடு போனாலும் அது நம் நாடு போலாகுமா?:))