காத்து கருப்பு

அவசர உதவி பக்கத்து வீட்டு பையன் 10வது படிக்கிறான் திடிர் என்று சப்பிட அடம் பிடிக்கிரான் யாரிடமும் பேசுவது இல்லை 2மாதமாக இப்படி இருக்கிறான் hospital எல்லா செக்கப் பண்ணியாட்சு நல்லா இருக்கான்னு சொல்கிறார்கள் காத்து கருப்பு பிடிச்சு இருக்கும்னு சொல்றாங்க அவன்க்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யவும் என்ன பண்ணலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.
இந்த பதிவு அந்த பையன் அம்மா அனுமதியுடன் போடுகிறேன்.

Vayadhu kaaranamaaga sila pillaigal ippadi aavadhu undu. Konja naalla sariyaagidum. Bayam vendaam. Piraathanaigal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காத்து கருப்பு எல்லாம் ஒன்றும் கிடையாது. அனேகம் வயசுக் கோளாறாகத்தான் இருக்கும். அம்மா, அப்பாவோட ஏதாச்சும் சண்டை வந்திருக்கலாம். பழி வாங்கறேன் பேர்வழி என்று இப்படி இருக்காரோ என்னமோ!

இது வீட்டுல யாரிடமும் பகிர்ந்துக்க முடியாத ரகசியங்கள் இருக்கக் கூடிய வயதுதானே! கொஞ்ச நாளில் சரியாகிருவார்.

காத்தும் இல்லாம கருப்பும் இல்லாம வேற ஏதாவது அதிர்ச்சியான சம்பவங்கள்லைப் பார்த்திருந்து அதை மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கவும் கூடும். ப்ரெண்ட்ஸ் கேட்டா சொல்லக் கூடும். வீட்டு ஆட்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாங்க. பையனுக்கு அண்ணா இருந்தா அவரை விட்டு ஃப்ரெண்ட்லியா (மட்டும்) விசாரிக்க வைக்கலாம்.

//சாப்பிட அடம்// பசிச்சா நிச்சயம் சாப்பிடுவாங்க.

ஹாஸ்பிட்டல் கூட்டிப் போனது ஓகே. அயலாரிடமெல்லாம் சொல்றது... டீனேஜ் பசங்களுக்குப் பிடிக்காதுன்னு நினைக்கிறேன். இருக்கிற பிரச்சினையைக் கூட்டி வைக்கப் போறாங்க அந்த அம்மா.

உங்க அறுசுவை ஐடீ பார்க்க நிஜப் பெயராகத் தெரியுது. நெட் வரை தன் பிரச்சினை பேசப்படுறது தற்செயலாக பையனுக்குத் தெரிய வந்தா... (தெரிய வருவதற்கு நிறையவே சந்தர்ப்பம் இருக்கு. உங்க பேர்ல இருந்து அவர் ஊகிக்கலாம்.) ஹாப்பியா எடுத்துப்பார்னு நினைக்கிறீங்களா? அவங்க அம்மாவுக்கு நீங்க இப்படி தன் பையன் விஷயத்தைப் பற்றி இங்க பேசி இருக்கீங்கன்னு தெரியுமா? அவங்க கேட்கச் சொன்னாங்களா? அப்படியானால் அது வேறு.

அந்த அம்மா என்னதான் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்தாலும், இங்க போஸ்ட் போட உங்களுக்கு அவங்க அனுமதி இருந்தாலும்... பையன் தனி ஆள். அவரோட அனுமதி இல்லாமல் இப்படி பப்ளிக் போஸ்ட் போடக் கூடாது. இது தப்பு என்பது என் அபிப்பிராயம்.

ஒரு நிமிஷம் அந்தம்மா இடத்துல உங்களை வைச்சுப் பாருங்க. அது உங்க பையனாவும் போஸ்ட் போட்டது உங்க பக்கத்து வீட்டு அக்காவாவும் இருந்திருந்தா!! வெளிய சொல்ல முடியாட்டாலும் நிச்சயம் கடுப்ஸ் ஆகி இருப்பீங்க இல்ல!

சின்னவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் மனசு இருக்கு; உணர்வுகள் இருக்கு. அதை பெற்றோர் உட்பட, மற்றவங்க எல்லோரும் மதிக்கணும் என்று ரொம்பவே எதிர்பார்ப்பாங்க. அவங்க ப்ரைவசியை மதிக்கணும். அவங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடக்கிறவங்க கூடத்தான் பேச்சு வைச்சுப்பாங்க.

இந்த நிமிஷம் எனக்குத் தோணுறது என்னன்னா... இப்படி அம்மா அயலாரிடம் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் டிஸ்கஸ் பண்ணுறதுதான் பிடிக்காம பையன் இப்படி பிகேவ் பண்றாரோ! வீட்டார்தான் பிரச்சினைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அவங்க வீட்டுல அவனை பூஜை பரிகாரம் எனறு நிறையவே பண்றாங்க என் தோழி மூலம் போண்ல கவுண்சிலிங் குடுக்கிறேன் அவன் சொல்றது உலகத்துல அம்மா அப்பா யாரும் பிடிக்காது ஒரு நடிகர் மட்டும் பிடிக்கும் என்று
ம் சொல்கிறான் அவங்க அம்மா பையன் School போகவில்லை என்றாலும் பரவாயில்லை சாப்பிட்டால் போதும் என்கிறார் நான் விடுமுறைக்கு வந்து இருக்கிறேன் அவன் குணமாக வேண்டும் அது மட்டும் எங்கள் வேண்டுதல் இந்த பதிவு அவங்க அம்மா அனுமதியுடன் போடுகிறேன்

Thanks imma mam

Thanks mam

கண்டிப்பா அச்சிறுவன் வெகுவிரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். நிச்சயம் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை நம்பிக்கையோடு காத்திருங்கள்.

//இந்த பதிவு அவங்க அம்மா அனுமதியுடன் போடுகிறேன்// சாரி ஜெனி. நான் உங்களைக் குறை சொல்லணும் என்று சொல்லல கண்ணா. நீங்க உங்க ஃப்ரெண்டுக்கு உதவி செய்யத்தான் நினைக்கிறீங்க. அது எனக்கு நல்லாவே புரியுது.

நான் அந்த டீனேஜ் பையனாக இருந்தால்... நிச்சயம் எனக்கு உங்க மேல மட்டுமில்ல, உங்களுக்கு அனுமதி கொடுத்த என் அம்மாமேலயும் எனக்குக் கோபம் வரும். ;(

இப்பவும் கூட எனக்குத் தோணுறது... முக்கியமானது எதையோ அவங்க வீட்டார் மிஸ் பண்றாங்க. அது எதுன்னு கண்டுபிடிச்சா கூட பிரச்சினை சரியாகாது. பல சமயம் பெரியவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் பிரச்சினைக்குரியவரது பிரச்சினை தானாகச் சரியாகும்.

//பூஜை பரிகாரம் எனறு நிறையவே பண்றாங்க// எனக்கு என்ன சொல்றது என்று தெரியல ஜெனி. //போண்ல கவுண்சிலிங் குடுக்கிறேன்// ம். அந்தப் பையனுக்கு நன்மை செய்றதா நினைச்சுத்தான் எல்லாம் நடக்குது. ஆனால்... பொருத்தமானதைச் செய்றாங்களா என்கிறதுதான் என் சந்தேகம். அல்சருக்கு அல்சர் ட்ரீட்மண்ட்டும் கான்சருக்கு கான்சர் ட்ரீட்மண்ட்டும்தான் கொடுக்கணும். மாத்திக் கொடுத்தா சரியாகாதுல்ல!

//அவன் சொல்றது உலகத்துல அம்மா அப்பா யாரும் பிடிக்காது// இந்த ஒரு வரி, இப்போ உங்க எழுத்துல இருந்துதான் பிடிச்சேன். வீட்டார் இந்த வரியை மட்டும் முதல்ல எடுத்துட்டு யோசிச்சுப் பார்க்கணும் என்று தோணுது ஜெனி. மீதியைப் பிறகு பார்க்கலாம்.

சின்னவர் ஏன் சொல்றார் இப்படி! சும்மா எல்லாம் இப்படி ஒரு வார்த்தை வராது. யாராவது காரணமில்லாமல் அம்மா, அப்பாவைப் பிடிக்கல என்பாங்களா? மனநிலை சரியில்லாத ஒருவராக இருந்தாலும் கூட இப்படி ஒரு வார்த்தை சொல்வாரா! சொன்னால் அதில் காரணம் சிறிதாவது இராமலிராதுங்க.

சின்னவருக்குத் தன்னைச் சுற்றியுள்ள எல்லோர் மேலும் அவநம்பிக்கை வரக் காரணம் என்னவென்பதைக் கண்டுபிடிச்சு என்ன செய்யலாம்னு பார்க்கணும். கவுன்சிலிங் மட்டும் போதாது ஜெனி. சின்னவர் தொடர்ந்து அதே மக்கள் வட்டத்துடன்தான் வாழப் போகிறார். ;(

‍- இமா க்றிஸ்

பையனின் வயது என்ன‌? படிக்கும் பள்ளி இருபாலர் பயிலும் பள்ளியா?
பள்ளி உயர்னிலைப் பள்ளியா? மேல்னிலைப்பள்ளியா? ஆசிரியர்கள் ஆண்கள் மட்டுமா? அல்லது இருபாலருமா? 10 வ்து போகிறானா? அல்லது எழுதியுள்ளானா? தேர்வு முடிவிற்குக் காத்திருக்கிறானா?
உடன் பிறந்தவர்கள் உண்டா? நட்பு வட்டாரம் எப்படி, என்ன‌ மாதிரியான‌ பழக்கம்? இதுவரையில் சகஜமாகப் பழகியவர் யாராக‌ இருந்தாலும் தற்போது அவர்களிடம் இருந்து விலகி இருக்க‌ முயற்சிக்கிறாரா? அவர்கள் தொடர்பான‌ எதையுமே கேட்கவோ பார்க்கவோ மறுக்கிறாரா? அடிக்கடி இதுவரையில் யாருடனாவது அதிக‌ நேரம் தனிமையில் இருந்திருக்கிறாரா? அப்படியானால் அவருடன் இப்போது அவர் எப்படிப் பழகுகிறார்?
கணிப்பொறியில் அதிக‌ நேரம் தனிமையில் செலவழிப்பாரா?
மொபைல் போன் இருந்தால் அதைக் கண்காணிக்கவும்
எந்த‌ ஊர். நகரத்துப் பள்ளியா, கிராமமா? வசதியானவர்களா?
இந்தக் கேள்விகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம். கிறுக்குத் தனமாகவும். இப்படிக் கேட்க‌ இவர்கள் யார் என்று கூட‌ நினைக்கலாம்.
நான் முதல் பத்தியில் கேட்ட‌ கேள்விகளூக்கு பதில் இருந்தால் தான்
மீதிக்கு விடை கிடைக்கும். 14 முதல் 17 வயது இருந்தால் மிக‌ மிக‌ மென்மையாக‌ நிதானமாக‌ அணுகுதல் நல்லது, பேசும்போது குறுக்கிடாமல்
அனைத்தையும் கேட்டு முடித்தபின் சிக்கலின் தன்மையைப் பொறுத்து
மேற்கொண்டு(உண்மையை தெளிவு செய்து கொண்டு) எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் நிதானமாகத் தீர்வு காண‌ வேண்டும்.
மிகக் கடினமான‌ காரியம் தான், இறைவன் நல்லதே செய்வார் என்று நம்புவோம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்பு தோழிகளுக்கு வணக்கம் நான் அறுசுவை எட்டி பார்து பல‌ நாட்கள் ஆகி விட்டது இன்று பதிவிட‌ காரணம் உங்கள் காத்து கருப்பு தலைப்பு தான்....
என் அனுபவத்தை சொல்கிறேன்... என் அப்பா கடந்த‌ 3மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.. 2 வருடமாக‌ அவரை பார்காமல் இருந்ததால் திடீர் என்று அவருடைய‌ இழப்பு என்னை எப்படியோ மாற்றி விட்டது... அவரை அந்த‌ நிலையில் பார்க‌ முடியாமல் தவித்தேன்.. இந்த‌ உலகத்தில் எனக்கு என் அப்பா வை தவிர‌ வேறு யாரையும் அந்த‌ அளவு பிடிகாது என் அம்மா,தம்பி,கணவர், மகன்,எல்லாறும் என் அப்பவிற்கு பிறகு தான்... நான் மிகவும் மணம் வருத்ததுடன் வாழ்கை இல்லாதது போல் என்னை சுற்றி இவ்ளோ பேர் இருந்தும் நான் அனாதையாக‌ நினைக்க‌ ஆரம்பித்தேன்... யாரிடமும் பேச‌ முடியாமல் சாப்பிட‌ முடியாமல் தூங்கமுடியாமல் அவதி பட்டேன்.. என் 2வயது மகனை கூட‌ நான் மறந்து விட்டேன் நானும் சாப்பிடாமல் வீட்டில் சமைக்காமல் என் கணவரையும் அலுவலகம் செல்ல‌ விடாமல் வீட்டில் இருக்க‌ வைத்தேன்... அந்த‌ மண‌ கவலை என் உடம்பை பாதித்து இரத்தகொதிப்பில் கொன்டுபோய் விட்டது 1நாள் மருந்து எடுத்ததும் சரி ஆகி விட்டது... அன்று முதல் கவலை போய் பயம் வந்து விட்டது என்ன‌ வென்று தெரியிமா நானும் இறந்து விடுவேன் எனக்கு எதாவது நோய் வந்து விடும் படுத்து தூங்கினால் என் உயிர் எனக்கு தெரியாமல் போய் விடும் என்று தூங்காமல் என்னை பார்து கொள்வேன்.. திடீர் என்று 12 மணி ஆனது என்னங்க‌ எனக்கு நெஞ்சு வலிக்கு உடனே வண்டி எடுங்கனு என் மகனை எட்த்துட்டு ஹாஸ்பிட்டல் போனோம் முதல் நாள் நல்ல‌ கவனிப்பு icu ல‌ வைத்து... எல்லா டெஸ்ட் எடுத்து பார்தாங்க அடைப்பு இருக்கானு வரைக்கும் பார்து ஒன்னும் இல்லை எது மணம் பயம் தான் சொன்னாங்க‌...சரினு வீட்டுக்கு வந்திட்டோம்.. மறுபடியும் 2,3 நாட்கள் இரவில் அப்படியே பயந்து ஹாஸ்பிட்டல் போனோம் ஒன்றும் இல்லை என்று என் சமாதானத்துக்கு ஊசி போட்டு அனுபிடாங்க‌.. 4வது நாள் இரவு பயந்து ஹாஸ்பிட்டல் போய் நானே படுத்து கொண்டேண்.. என்னை யாரும் கவனிக்க‌ வில்லை.. duty nurse doctor ட‌ சார் அந்த‌ பொன்னு மறுபடியும் வந்திடுச்சுனு ரொம்ப‌ கேவளமா சொன்னாங்க‌ அதற்கு அப்புரம் அங்கு இருத்து எழுந்து வந்து விட்டேன்.. வெளியே வந்த‌ பிறகு அங்கு வேலை செய்யும் எல்லா நர்ஸ் டையும் நான் செத்துடுவனா என்று லூசு போல‌ கேட்டேன்.. பிறகு மண‌ தத்துவ‌ டாக்டரிடமும் காண்பித்தேன் எனக்கு உடம்பில் எந்த‌ பிரச்சனை இல்லாததால் அவர் கொடுத்த‌ மருந்து எனக்கு சேரவில்லை வெளியூர் சென்று வரலாம் என்று 15 நாட்கள் போனோம் அங்கு இதே கூத்து தான்.. பிறகு பேய் பிடித்து விட்டது என்று ஊரில் எல்லாறு கயுறு விபூதி என‌ மந்திரித்து கோயமுத்தூர் to டெல்லி பார்சல் பார்சல் ஆக‌ கொரியர் வந்தது அதை கட்டியும் கேக்கவில்லை... என் அப்பா இறப்பு எனக்கு அதிர்சியில் ஆரம்பித்து பயத்தில் நின்று கடைசியில் பேய் பிடித்ததில் வந்து நின்றது... தாய்கு தானே மகளை பற்றி தெரியும் இப்படியே இருந்தால் தன் மகளின் வாழ்கை போய்விடுமே என்று ஒரு யோசனை செய்தார் சிறு வயதில் இருந்து பழகிய‌ தோழியிடம் பேசினார்.. அவள் என்னுடன் படித்த‌ ஒரு வயது தோழி என் பக்கத்து வீடு... எனக்கும் அவளுக்கும் சிறு வயதில் இருந்து போட்டா போட்டி தான் ஆனால் நல்ல‌ ஒற்றுமையான‌ தோழிகள்.. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பெங்களூரில் இருக்கிறால்... திடிர் என்று 4நாட்கள் முன்பு போன் செய்தால் எப்படி இருக்க‌ என்று பேச்சை கொடுத்து மெதுவாக ஆரம்பித்தால் என் அப்பாவிற்கு 1வருடம் முன்பு தான் அவளுடைய‌ அப்பாவும் இறந்தார்.. அவள் அனுபவத்தை பேசி எங்கள் சிறு வயது நட்பை பேசி கடைசியில் போட்டியில் வந்து நின்றால்...நாங்கள் குடும்ப‌ நண்பர்கள் ஆதலால் எங்கள் உறவில் நல்ல‌ நட்பு... நீ எல்லாவற்றிலும் என்னை விட‌ அதிகமாக‌ இருந்தாலும் உன்னை விட‌ என் மகனை நான் நன்றாக வளர்பேன்.. என்று அவள் சொன்னால்..யேண்டி இப்படி சொல்ற‌ நு சன்டை போட்ட நீ தா உன் மகனை பார்துகரது இல்லை செத்து போய்டுவ‌ அப்புறம் எப்படி நீ நல்லா அவன‌ வளர்ப‌.. எனக்கு தான் எந்த‌ பிரச்சனையும் இல்லையே நா இன்னொரு குழந்தை கூட‌ பெத்துக்குவே உன்னால‌ முடியுமா நு கேட்டா எனக்கும் கோவம் வந்து நானும் நல்லாத‌ இருக்க‌ எனக்கும் எந்த‌ பிரச்சனையும் இல்லைனு கோவமா போன் வெச்சுட்ட‌.. அப்புரம் நைட் துங்காமல் உக்காந்துட்டு இருக்கும் போது என் மகன் அனத்தினான் தூக்கத்தில்.. அப்போ எனக்கு என்னமோ என்னை விட்டு போனது போல‌ இருந்தது உடனே என் மகனை கையில் எடுத்து வைத்து கொண்டு அழுதேன்.. அது வரை என் கன்ணுக்கு தெரியாமல் நான் மறந்து இருந்த‌ என் மகனை பார்க‌ எனக்கு பாவமா இருந்தது.. 28 வயதில் என் அப்பா என்னை விட்டு போனதிற்கு நான் இப்படி ஆகி விட்டேனே என் 2 வயது குழந்தை நிலைமை என்ன‌ என்று எனக்கு அப்போ தான் புரிந்தது என் தோழி சொன்னது போல‌ நான் குழந்தையை வளர்க‌ தவரி விட்டேன் என்று என் தவரை உணர்ந்து நான் வெளியே வந்து விட்டேன்... என்னை விட்டு போனது என் பயம்... என்னுடைய‌ பொழுது போக்கு அறுசுவை பார்பது சமைப்பது தான் அந்த‌ அறுசுவையை நான் மறந்து விட்டேன்.. இப்போ பழைய‌ படி ஆனது இரண்டு நாட்கள் அறுசுவை பார்க‌ தொடங்கி விட்டேன்... நான் நார்மல் ஆகி விட்டேன்... எந்த‌ காத்து கருப்பும் இல்லை எந்த‌ மருந்தும் குண‌ படுத்தவில்லை என்னை புரிந்த‌ என் அம்மாவும் என் தோழியும் கடமையை மறந்து இருந்த‌ என்னை என் கடமைகளை நியாபகம் படுத்தினார்கள்... அவ்வளவு தான் வேறு எந்த‌ வைத்தியமும் செய்யவில்லை..மணம் ஒரு குரங்கு அப்படினு சொல்லுவாங்க‌ அது உண்மை தான்.. நாம் கொஞ்சம் பயந்தா நம்மை கோளையாக்கி அது கட்டுபாட்டில் வைத்து படாத‌ பாடு படுத்தி விடும்..

நிச்சயமாக‌ அந்த‌ சிறுவனுக்கு காத்து கருப்பு எல்லாம் இல்லை மனதில் அவனுக்கு ஏதோ குழப்பம் பயம் அதை சரி செய்யமுடியாமல் தவிக்கிறான் மனதில் கவலை இருந்தால் யாருக்கும் பசிகாது தூக்கமும் வராது நீங்கள் அவனை பற்றி சரியாக‌ தெரிந்து கொண்டு அவர் பிரச்சனை சரிசெய்ய பாருங்கள்... அம்மா அப்பா பிடிக்க‌ வில்லை என்று சொல்கிறான் என்றால் அப்போ அவனுக்கு வீட்டில் இருக்க‌ தான் பிடிக்க‌ வில்லை.. வீட்டில் ஏதோ ஒன்று அவனை காயபடுத்தி உள்ளது.. யாருக்கு வேன்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம் பெற்ற‌ தாய்க்கு நிச்சயம் தன் குழந்தை பற்றி தெரியும்... அவர் பிரச்சனை என்னனு கண்டு பிடிக்க‌ முடியும்..அவரை சமாதானம் செய்யுங்கள்...வேறு எந்த‌ தவறான முயற்சிகளை செய்ய‌ வேண்டாம்(மருந்து, மாயம்)

16. வயது
இருபாலர் பபடிக்கும் பள்ளி
மேல்நிலைப்பள்ளி
கணினி பற்றி தெரியாது
Mobile இருக்கு
கிராமம் பள்ளி
கஷ்டபடுற குடும்பம்
பள்ளிக்கூடம் போகவில்லை
தனியா இருப்பது கிடையாது
சின்ன பசங்க கூட அதிகம் விளையாடுவான்

மேலும் சில பதிவுகள்