hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.
hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.
காயத்ரி
//எடை குறைந்தால் கரு தங்கும் என டாக்டர் கூறினார். நம்பிக்கையாக உள்ளேன்.// :-) இதுதான் உங்களிடம் மிகவும் பிடிக்கிறது. தெளிவாக இருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருக்கிறீர்கள்.
//சிவப்பு அரிசி சோறு,// இதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும். ஒரு சாதாரண அரிசி மணியையும் ஒரு சிவப்பு அரிசி மணியையும் கையில் எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றில் தவிடு இருக்கிறது. மிகச் சிறிதளவுதான். நார்ப் பொருள் சிவப்பரிசியில் அதிகம் என்றாலும் கூட அதுவும் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது. சாதத்தின் அளவைக் குறைக்காமல் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் மட்டும் எடை பெரிதாகக் குறையப் போவது இல்லை. மற்றதற்கு இது பரவாயில்லை, அவ்வளவுதான். எடுக்கும் அளவைக் கட்டாயம் கவனியுங்கள். அது குறைவாக இருக்க வேண்டும். இப்போ எடுப்பதை விட ஒரு மேசைக்கரண்டி குறைத்து எடுங்கள்.
//மரக்கறி// நிறைய மரக்கறிகளிலும் மாப்பொருள் இருக்கிறது. ஆனால் தினமும் உண்பதில்லை என்பதால் அதைப் பற்றிப் பெரிதாக யோசிக்க வேண்டியது இல்லை. கிழங்கு என்பது உருளைக் கிழங்கை மட்டும் குறிப்பதல்ல. உருளைக் கிழங்கை முழுவதாகத் தவிர்ப்பது நல்லது. மீதி கிழங்கு வகைகளைக் குறைவான அளவில் உள்ளெடுப்பது நல்லது.
//பழங்கள் உண்பேன்.// இவற்றிலும்... இனிப்புக் குறைவானவையாகத் தெரிந்து உண்ணுங்கள். உலர் பழங்கள் எடுப்பதானால், அவை உலராமலிருந்தால் ஒரு தடவையில் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு மேலே போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
//காலை ஒரு டீ மட்டும் தான்.// டீ பிரச்சினை இல்லை. அதில் சேர்க்கும் சர்க்கரையின் அளவுதான் கவனிக்கப்பட வேண்டும். முடிந்தால் சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. சேர்ப்பது ஒரு நாளைக்கு 1 கரண்டி என்றாலும் வாரத்திற்கு 7, மாதத்திற்கு 30 கரண்டிகள் ஆகி விடும். அத்தனையும் வீணாகாமல் உடலில் சேமிக்கப்படும்.
//பிஸ்கட்,// இது பொல்லாதது. :-) நீங்கள் சாப்பிடாமலிருப்பது நல்ல விஷயம். பாக்கட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் கலோரி அளவைப் படித்தால் புரியும். //நொறுக்கு தீனி மிக குறைவு.// அப்படியே தொடருங்கள். இவற்றில் மாப்பொருள், கொழுப்பு இரண்டுமே அதிகம்.
சரியானதைச் செய்கிறீர்கள். எடை குறையும் வேகத்தைக் கவனித்துப் பாருங்கள். உணவில் மாற்றம் தேவையா அல்லவா என்பது புரியும்.
- இமா க்றிஸ்
irregular periods
எனக்கும் மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை பா வருடத்தில் 2 முறை தான் வருகிறது. இதனால் உடல் மிகவும் குண்டாகிறது.வழி கூறவும் ப்ளீஸ்
santhanu
//வருடத்தில் 2 முறை தான்// நீங்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
//இதனால் உடல் மிகவும் குண்டாகிறது.// உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சிகளும் போதும். மாதவிடாய் ஒழுங்காக வர ஆரம்பித்துவிட்டால் மாதாமாதம் ஆகும் குருதி இழப்பு + அதை ஈடுகட்ட உடல் செலவிடும் சக்தி - இரண்டும் சேர எடை சரியாக இருக்கும். அது வரை எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- இமா க்றிஸ்
இம்மா அம்மா
உங்களுடைய நீண்ட அறிவுரைக்கு மிகுந்த நன்றி அம்மா.
நன்றி இம்மா அம்மா
வீட்டு வைத்தியம் எதுவும் இல்லையா
santhanu
வருடத்தில் 2 தடவை என்கிறீர்கள். மணமானவர். குழந்தைகள் பற்றி - உங்கள் பழைய இடுகைகள் நினைவுக்கு வரவில்லை.
இந்த இரண்டு தடவைகள் என்பது... ஒரு அண்ணளவான கணிப்புத்தானே! சரியாக எப்போது என்று நினைவிருந்தால் இதற்கென்று ஒரு குட்டி நோட் வைத்துக் குறித்துக் கொள்ளுங்கள். மாதா மாதம் வேறு வேறு நாள் எண்ணிக்கையில் சுழற்சி என்பது வேறு. நீங்கள் சொல்வது வேறு. பிரச்சினை என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின் வீட்டு வைத்தியமா அல்லவா என்பதை யோசிக்கலாம். நீங்கள் காட்டுவதுதான் நல்லது.
நீங்கள் சொல்லும் கணக்கை வைத்துத்தான் மருத்துவர்கள் மருந்து கொடுக்க முடியும். இனிமேல் சுழற்சி ஒழுங்காக வந்தாலும் விட்டு விட்டு வந்தாலும் எத்தனை நாட்கள், ரத்தப் போக்கு எப்படி இருந்தது என்பன உட்பட - கட்டாயம் தொடர்ந்து குறித்து வாருங்கள்.
இன்னொரு விஷயம். :-) நான் இ...மா. இ..ம்..மா அல்ல. கீழே... சிக்னேச்சரில் பெயர் தமிழில் எழுதியிருக்கிறேன். :-)
- இமா க்றிஸ்
நல்ல செய்தி
நான் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு சீரற்ற மாதவிடாய் என்பதால் 63ம் நாள் urine & blood test மூலம் doctor உறுதி செய்தார். நான் எடை குறைக்கும் முயற்சியில் இருந்ததால் எதிர் பார்க்கவே இல்லை. மிக்க சந்தோசம். ஆனால், ஸ்கேனில் மிக சிறிய புள்ளியாக உள்ளதென்று, 10 நாட்களுக்கு மருந்து தந்துள்ளார். 10வது நாள் வர சொல்லியிருக்கின்றார். கர்ப்பம் 5 வாரம் என்று blood test- HCG level மூலம் கூறினார். எனக்கு லேசாக வயிறு வலிக்கின்றது. இது ஏன்? சில நேரம் மிதமான வலி இருந்து கொண்டே இருக்கின்றதே? பயமாக இருக்கின்ற்து. தோழிகளே பதில் கூறுங்கள்.
ஹாய் தோழிகாயத்ரி
வாழ்த்துக்கள் .மிகவும் சந்தோசமாக உள்ளது.கவனம் பாதுகாப்பாகவும் இருங்க்..வெயிட் தூக்காதீங்க...
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
Congratulations kajathiri.
Congratulations kajathiri. ...kavanama irunga. .long trip poogathinga..wait thoogathinga. ..vajiru vali irunthal thopulai sutti nallenai posunga. ..nalla niraja water kudenga. ..
kanagamuthu & sarmi
உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றிகள்.......