தூங்கவைக்கும் முறை

என் குழந்தைக்கு 8 மாதம் நடக்கிறது.. அவன் எப்போதும் என்னிடம் பால் குடித்து கொண்டே தூங்கி பழகிவிட்டான். இந்த முறை சரியானதா.. இப் பழக்கத்தால் பால் மறக்க வைப்பதில் சிரமம் ஏற்படுமா? இவனை வேறு வழியில் தூங்க வைக்க முயற்சி செய்து பார்த்தேன். எதுவும் முடியவில்லை.. 1 வயது வரை பால் தரலாம் என்று உள்ளேன்.. அதன் பிறகு எப்படி தூங்கவைப்பது.. இப்போது தூக்கம் வந்தால் அழுது ஆர்பாட்டம் செய்வான்.. பால் கொடுத்தால் தூங்கி விடுவான்... இப்போதே இப்பழக்கத்தை மாற்ற வேண்டுமா.. இல்லை 1 வயதில் சரி ஆகி விடுமா.. தோழிகள் தயவுசெய்து ஆலோசனை தரவும்

En papa vum aputi than pannural.....night time la pakkathula paduka potta thoongara..ellana thoonga matara akka

Ippodhe maarrividuvadhu nalladhu. 1 vayasuku meel idhai maathuradhu siramam. Paal koduppadhai kurainga. 8 maasam... dhida unavu koduthu veetil veru yaaridamaavadhu vittu vidungal. Avan kannil padaama irunga. Avanaaga azudhuvittu thuungattum. Azugiraan ena manam iranginaal pinnaal avadhi ungalukku dhaan. Kandukkaama 1 vaaram vidunga, vazikku varuvaan.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி.. Formula feed பன்றது இல்லை. திட உணவு தாய் பால் மட்டுமே சாப்பிடுகிறான்.. தாய் பால் கொடுப்பதையும் குறைத்தால் குழந்தைக்கு திட உணவு ஓத்துக்கொள்ளுமா என தெரியவில்லை

Ramya

இரவில் குழந்தையைப் பக்கத்தில் படுக்கவைத்தால் கண்டிப்பாக இதுதான் நடக்கும். 7 மாதங்கள் முடிந்தவுடனேயே குழந்தை இரவு முழுவதுமாக தூங்கப் பழகவேண்டும், இடையிடையே விழிக்கையில் பாலூட்டக் கூடாது என்று பீடியாட்ரீஷியன்ஸ் சொல்கிறார்கள். ஆனால் ப்ராக்டிகலாக அது எவ்வளவு தூரம் முடியுமென்று தெரியலை. முடிந்தால் முயற்சித்துப்பாருங்க.

8 மாதக் குழந்தைக்கு இனிமேல் திட உணவுகள் மெல்ல மெல்ல கொடுக்க ஆரம்பிக்கலாமே நீங்க? வெறும் தாய்ப்பால் மட்டுமென்றால் நீங்க களைச்சுப்போயிருவீங்களே...கொஞ்சம் கொஞ்சமா பழங்கள்-காய்கறி-இட்லி-சாதம் -பருப்பு என்று கொடுக்க ஆரம்பிங்க.

ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு மாதிரி.. ஒரு வயதுவரை பாலூட்டிவிட்டு பிறகு தாய்ப்பாலை மறக்க வைத்தால் சிலர் சீக்கிரம் மறந்துருவாங்க, இரவு முழுவதும் உறங்கவும் செய்வாங்க. ஆனால் சில குழந்தைகள் இரவில் விழித்து அழலாம், அழாமல் தண்ணீர் குடித்துவிட்டு தூங்கிடலாம். எல்லாமே அந்தந்த நேரத்தில்தான் தெரியும். இது தான் இப்படித்தான்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு குழந்தையும் ஓரொரு சர்ப்ரைஸ் பேக்கேஜ்!! நேரம் வரவரத்தான் பேக்கேஜ்-உள்ளே என்னவெல்லாம் ஆச்சரியங்கள் காத்திருக்கு என்று தெரியும். அதனால உங்களுக்கு முடியலைன்னா இரவில் முழுக்க பாலூட்டாமல் இருக்க பழக்கலாம், அல்லது சமாளிக்க முடியும்னா இப்படியே தொடருங்க. சீக்க்க்க்க்க்கிரமா வளர்ந்துருவாங்க, அப்புறம் நீங்களே கூப்பிட்டாக் கூட பக்கத்தில படுத்து தூங்கமாட்டாங்க. :)

அன்புடன்,
மகி

என் 2வது குழந்தையும், என் தங்கையின் குழந்தையும் இப்படி தான் இருந்தார்கள். நாம் தானே பழக்கினோம், நாம் நினைத்தால் கண்டிப்பாக‌ நிறுத்தவைக்கவும் முடியும். ஆனால் பக்கத்தில் படுத்து தூங்கும் வரை பால் குடிக்கும் குழந்தைகளை, இந்த‌ குழந்தைகள் வளர‌ வளர‌ நிறுத்த‌ வைப்பது சற்று சிரமமே. அதனால் இப்பொழுதே சற்று எழும்பி இருந்து குடுக்கவும், இடையிடையே தூங்கும் வரை குடுப்பதை குறைக்கவும் பழக்குங்கள், பழகிக்கொள்ளுங்கள்.
அப்படியே தூங்குவதால் செரிமானம் ஆக‌, சிறிது தோலில் போட்டு படுக்கவைபது நல்லது. தலையை சற்று உயர்ந்தவாறு படுக்க‌ வைத்து குடுக்கவும். தூங்குவதற்கு 10 நிமிடம் முன்பே பால் குடுத்து நிருத்திவிட்டு, கண்ணு அயரும் சமையம் மெதுவாக‌ கதைகளோ, பாட்டோ அல்லது தோலில் போட்டு தட்டித், தடவியோ எப்டியாவது தூங்கவைக்க‌ முயற்சி செய்யுங்கள் அன்புத் தோழி..

நன்றி மஹி & நிஷா.. திட உணவு கொடுக்கிறேன்.. நேற்றில்இருந்து அப்படியே தூங்க வைக்க முயற்சி செய்றேன்.. சில சமயம் முடிந்தது..ஒரு முறை கூட தானே துங்காமல் இருந்தான்.. இப்போது கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.. பார்க்கலாம்

Ramya

Vidaama muyarchi panradhula dhaan evvalvu sikiram jeyikiromgradhu irukku :) konjam paavam paarthaalum velaiku aagàdhu. Yosikama kandukama irunga azudhaalum marravargalidam vittu samadhaanam pannunga. Thuunga late aanaalum paravaalla. Oru vaaram... adhiga patcham 2 vaaram... nichayam thuunga pazagiduvaar.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முயற்சி செய்து பார்கிறேன்

Ramya

தோழிகளே எனக்கும் எப்படி தூங்க வைப்பது?சமாளிப்பது எனக் கூறுங்கள்..

எனக்கு இரண்டு பசங்க.பெரியவன் 3,3/4வயது,சின்னவன் 7மாதம்.பெரியவன் இரண்டு மாதமாக ஸ்கூல் போகின்றான்.நானே தனியாகத்தான் இரண்டு பேரையும் பார்த்துக் கொள்கிறேன்.பெரியவன் எல்.கே.ஜி போகிறான்.முழு நேரம்.வீட்டில் எல்லாமே நான்தான் பார்த்துக்கணும்.கணவருக்கு சிப்ட் வேலை.ஒரு வாரம் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்க காலையில் மட்டும்.மீதி எல்லா நாட்களும் நான்தான் கூட்டிட்டு போவேன்.ரெண்டு பேரையும்.ஸ்கூல் 10 நிமிடம் வாக்கிங் தான்.காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி போய் விட்டுட்டு வர 9.05 ஆயிடும்.மறுபடியும் லஞ்ச் செய்து 11.50க்கு போய் ஊட்டி விட்டு 1.10க்கு வீட்டிற்கு வருவேன்.மாலையில் 3.30க்கு போய் 4.10க்கு வருவேன்.சின்னவரை தூக்கிக் கொண்டே போயிட்டு வருவேன்.இதற்கிடையில் வீட்டில் வேலைகளையும் சின்னவரை குளிக்க வைப்பது,பால் அமர்த்துவது,தூங்க வைப்பது,அவனையும் பார்த்துக் கொள்கிறேன்.இதெல்லாம் கஷ்டமாக தெரியவில்லை.

சின்னவன் தான் எப்படி சமாளிப்பது தெரியவில்லை.என் தம்பி ஒரு வாரம் இருக்கும்போது சின்னவனை வீட்டில் விட்டு ஸ்கூல் போவேன்.நான் வரும்போது தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விடுவான்.இப்பொழுதும் அதே பழக்கமாக இருக்கின்றான்.முன்பு பால் அமர்த்தும்போதே தூங்கி விடுவான் இப்பொழுது தொட்டிலில் 20 நிமிடம் ஆட்டினால் தான் தூங்குகிறான்.அப்படித் தூங்கினாலும் உடனே சில நேரம் குப்புறப்படுத்துக்கொள்கிறான்.குப்புறப்படுத்து தவழ்ந்து முன்னாடி வந்துவிடுகிறான்.ஒரேயொரு தடவை தலை கீழே வந்துவிட்டது தொட்டிலிலிருந்து பெரியவன் பார்த்து தூக்கி விட்டேன்.இப்பொழுதெல்லாம் தொட்டிலில் படுக்க வைத்தாலும் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இது தான் எனக்கு பெரிய கஷ்டமாக உள்ளது.

இவனுக்கு கேழ்வரகு,செரலாக் கொடுக்க முடியவில்லை.ஸ்கூலிலிருந்து வந்ததும் அழுது தூங்கி விடுகிறான்.அவன் எழும்போது என்னால் ஊட்ட முடியவில்லை ஸ்கூல் போய்விடுகிறோம்.மதியம் ஸ்கூலிலிருந்து வந்ததும் தூங்குகிறான்.அப்புறம் எழுவது லேட்டாகின்றது.

1.ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறான் என்ன செய்வது?

2.இரவில் பக்கத்தில் தூங்க வைப்பேன் எழுந்திருக்க முடியாததால் படுத்துக் கொண்டே பால் 3 அ 4 தடவை அமர்த்துகிறேன்.பால் பற்றக்குறையால் லேக்டோஜன் கொடுக்கிறேன்.இரவில் பால் கொடுப்பதை எப்படி குறைப்பது?

3.கிச்சனுக்கு சிலநேரம் போனால் அழுகிறான் எப்படி சமாளிப்பது?
4.எப்படி நேரத்தை சரியாக உபயோகிப்பது?நாங்கள் மட்டும்தான் யாருமில்லை.

5.சின்னவரை இந்த விதவிதமான பழக்கத்திலிருந்து எப்படி மாற்றுவது?குப்புறப்படுப்பது.

6.சின்னவனுக்கு எப்படி ஊட்டி வது?

7.டைம் மேனேஜ்மெண்ட்டும் சொல்லுங்கள்....

8.பெரியவன் சேட்டை தான்.சிலநேரம் அடிக்கிறேன்.எனக்கும் சனிக்கிழமை களில் உடம்பு கை கால் வலிக்கின்றது.

தோழிகளே பதில் கூறுங்கள்....சாரி நிறைய கேள்விகள்........

அன்பு தோழி. தேவி

அவசர அவசரமா தட்டுறீங்க. 'தேவி ரொம்ப டென்ஷன்ல இருக்காங்க,' என்று நேற்றே நினைச்சேன். :-)

'எதையும் நிதானமா பண்ணுவேன்,' என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கங்க. //டைம் மேனேஜ்மெண்ட்// கொஞ்ச நாளைக்கு அறுசுவை தோழிகளுக்கு பதில் சொல்றேன் என்று வராதீங்க. (இமா வந்து திருத்த வைக்க மாட்டேன்.) :-)) உண்மையாவே இதுல கொஞ்சம் டைம் மிஞ்சும்.

//எனக்கும் சனிக்கிழமை களில் உடம்பு கை கால் வலிக்கின்றது.// :-) சனிக்கிழமை மட்டுமா!! :-) தினமும் உங்கள் ஓய்வு சரியாக இருக்க வேண்டும். தாய்மை ஒரு நாள் லீவு எடுக்கிற வேலை இல்லை. சனி கூட நீங்க வேலைகளைத் தவிர்க்க முடியாது இல்ல!

//இதெல்லாம் கஷ்டமாக தெரியவில்லை.// ம். அது நல்லது. எனக்கு நீங்கள் சொன்ன நிறைய விஷயங்கள் தெளிவில்லாமலிருக்கிறது. புரிந்தவற்றுக்கு மட்டும் சில யோசனைகள் சொல்கிறேன்.

//1.ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறான் என்ன செய்வது?// & //3.கிச்சனுக்கு சிலநேரம் போனால் அழுகிறான் எப்படி சமாளிப்பது?// & //6.சின்னவனுக்கு எப்படி ஊட்டி வது?// ப்ராம், பௌன்ஸர் இப்படி எதுவும் இல்லையா! குழந்தையை நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே எப்பொழுதும் வைத்துக் கொள்ளலாம். சின்னவருக்கும் இடம் மாறுவதும் உங்கள் அருகாமையும் பிடிக்கும்.

//8.பெரியவன் சேட்டை தான்.சிலநேரம் அடிக்கிறேன்.// ;( வேறு பராக்குக்கு மாற்ற வேண்டுமே தவிர அடிக்கக் கூடாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்