கண் பரிசோதனை

வணக்கம் தோழிகளே என்னுடைய மகளுக்கு 41/2 வயது ஆகிறது. நேற்று என் மகள் பள்ளியில் கண் பரிசோதனை செய்தார்கள்.
Test report is
Right eye -6/12P
Left eye -6/15 P
Weight -15 kg
Under weight <3
3 D vision eye sight - normal என்று உள்ளது .
என்ன காரணத்திற்காக மறுபடியும் இந்த மாதம் கடைசியில் மறுபடியும் வர சொல்லி இருக்கிரார்கள். அவளுக்கு பிரச்சினை உள்ளதா? Normal eye range எவ்வளவு இருக்க வேண்டும் ?

பதில் தருங்கள் தோழிகளே. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. கண்ணாடி அணிய வேண்டுமா.

பயம் வேண்டாம். உங்கள் மகள் தொலைவில் அல்லது அருகில் உள்ள எதெனும் தெரிய வில்லை என்று இது வரை சொல்லி இருக்காளா. இல்லை தலைவலி கண் எரிச்சல் போன்ற தொந்தரவு இருகிறதா.. இவை இல்லாத பட்சதில் கவலை வேண்டாம். நல்ல கண் மருத்துவரை பாருங்கள். சத்து குறைபாடு கூட இருக்கலாம். மருத்துவரை பார்க்கும் முன் எதற்கு பயம்.

Ramya

//என்ன காரணத்திற்காக மறுபடியும் இந்த மாதம் கடைசியில் மறுபடியும் வர சொல்லி இருக்கிரார்கள். // தெரியாது. இங்கும் இப்படி கண் பரிசோதனைகள் செய்வார்கள். எல்லொருக்குமே கண்ணாடி கொடுப்பது இல்லை. பாடசாலைக்குக் குழந்தைகள் பற்றிய குறிப்பு வரும்... முன் வரிசையில் அல்லது வகுப்பின் நடுவில் உட்கார வைக்கச் சொல்வார்கள். ஒரு பையனுக்கு வினாக்களை சற்றுப் பெரிய எழுத்தில் மாற்றிக் கொடுக்கச் சொன்னார்கள். பிறகு ஒரு மாக்னிஃபையிங் ஷீட் கொடுத்தார்கள். அதைப் புத்தகத்தின் மேல் வைத்துப் படித்தால் அவர் ஒழுங்காகப் படித்தார். ஒரு குழந்தைக்கு, பளிச்சென்ற வெள்ளைத் தாளில் கருப்பு எழுத்துகள் படிக்கச் சிரமமாக இருந்தது. பழுப்புக் காகிதங்களானால் சிரமமில்லாமல் படிப்பார்.

//எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. கண்ணாடி அணிய வேண்டுமா.// இதற்கு எதற்குக் கவலை!! ஏதாவது பிரச்சினை இருந்தால் அது சின்ன வயதிலேயே தெரிய வந்துவிட்டால் அது எவ்வளவு நல்லது தெரியுமா! ஒன்றும் இராது என்று நம்புங்க. இருந்தால்... இப்போதே தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் அமைந்ததையிட்டு சந்தோஷப்படுங்கள்.

பார்வையில் பிரச்சினை இருப்பது தன்னால் யாருக்கும் தெரிய வருவது இல்லை. இப்படி தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டால் குழந்தை வகுப்பில் போர்ட் தெரியாமலிருக்க, அது தெரியாமல் டீச்சர், 'ஏன் ஒழுங்கா பாடம் எழுதல?' என்று திட்டலாம். படிக்கிறதுக்கு நேரம் எடுக்கும்; சரியா படிக்க முடியாமலிருக்கும்.

கண்ணாடி போடச் சொன்னாங்க என்றால் நீங்க அப்செட் ஆகாம அணிந்துகொள்ள குழந்தையை என்கரேஜ் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

பதில் அளிததற்கு நன்றி தோழிகளே, அவள் இதற்கு முன்பு தலைவலி, கண் எரிச்சல் என்று சொன்னதில்லை. அவளால் தூரத்தில் உள்ளதையும் அருகில் உள்ளதையும் படிக்க முடிகிறது . இதே test report Google search செய்து பார்த்ததில் கிட்ட பார்வை குறைபாடு என்று போட்டு இருந்தது. இந்த வயதில் 17 கிலோ எடை இருக்க வேண்டும் என்று doctor கூறினார்கள். அதனால் தான் இந்த பிரசினையோ என்று மனது குழம்புகிறது.

மேலும் சில பதிவுகள்