என் குழந்தை

என் வயிற்றில் உண்டான முதல் கருவே!
உன்னை என்
வயிற்றுக்குள்ளேயே அரவணைத்து,
உன் குறும்புகளை ரசித்து மகிழ்ந்து,
உன் மெல்லிய
அடிகளையும் உதைகளையும் சுவைத்து,
உன்னை என் கையில் ஈன்றெடுக்க களைத்து,
உன் ரோஜா இதழ் முகத்தைப் பார்த்து,
என் வலிகளை எல்லாம் துடைத்து,
உன்னை என் விரல்கள் தீண்டும் போது
நான் இந்த உலகையே மறந்து,
உன்னை என் மார்போடு கட்டி அணைத்து,
உன் மென்மையான கன்னத்தில் முத்தமிட்டு,
என் கண்ணே! மணியே! என்று
உன்னை நான் கொஞ்சிய நாட்கள் இன்றும்
உன்னை ரசிக்க வைக்கிறது என் கண்ணே!!!
- திவ்யா செல்வம்

Comments
wow super oru thayin
wow super oru
thayin santhosathin
karanangal,
kuzhanthaikalin
ninaivugale
wow super oru thayin
wow super oru
thayin santhosathin
karanangal,
kuzhanthaikalin
ninaivugal,
aravanaipukale
திவ்யா செல்வம்
:-) கவிதையைத் தயாராக வைத்துக்கொண்டுதான், 'எப்படி வெளியிடுவது?' என்று விபரம் கேட்டீர்களா? :-)
அனுபவத்தை அழகாக வார்த்தையில் வடித்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.
- இமா க்றிஸ்
இம்மா அம்மா மற்றும் சார்லஸ்
இம்மா அம்மா மற்றும் சார்லஸ் இருவருக்கும் என் நன்றிகள்.
இம்மா அம்மா நீங்கள் சொன்னதால் தான் என்னால் கவிதையை அனுப்ப முடந்தது. உங்களுக்கு என் அன்பான நன்றிகள். இன்னும் என் கவிதை தொடரும்......
திவ்யா செல்வம்
:-) உங்களால எனக்கு ஒரு உதவி ஆகணும். செய்வீங்க என்று நம்புறேன். இதற்கு முன்னால் நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. பரவாயில்லை. இங்க போடுறதை மிஸ் பண்ண மாட்டீங்க. நிச்சயம் உங்கள் கண்ணில் படும். அம்மா, மேடம் எதுவும் வேண்டாம். இனிமேல் என் பெயரை எழுதும் போது இமா அல்லது imma என்று சரியாக எழுதினீர்களானால் சந்தோஷப்படுவேன். :-) தமிழ்ல இமாவுக்கு நடுவில் 'ம்' வேண்டாம்.
- இமா க்றிஸ்
திவ்யா
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க, குழந்தையின் வரவை...
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் சுபி *
subi
Subi thank u..
nandri mam
nice kavithai mam
china vayasula pethavagada valikira mathiri nadichom epa valikatha mathiri nadikir