hayfever

ஹாய் friends என் கணவருக்கு hayfever இதுக்கு யாருக்கேனும் வீட்டில் செய்யகூடிய வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள் pls

நீங்க‌ எங்கே வசிக்கிறீர்கள்? உங்கள் ப்ரொஃபைலில் தேடினேன், காணோம். உங்கள் கணவர் என்ன‌ வேலை பார்க்கிறார்? வீட்டில் செல்லப் பிராணிகள் இருக்கின்றனவா? உங்கள் சுற்றாடலில் பூக்கும் மரங்கள் என்னென்ன‌ இருக்கின்றன‌?

வீட்டு வைத்தியம் என்று சொல்லத் தெரியாது. காரணிகளைக் கண்டு தவிர்ப்பது சிகிச்சையோடு கூடவே கவனிக்க‌ வேண்டிய‌ முக்கியமான‌ விடயம்.

இரண்டு நாட்கள் முன்பு இங்கு வானொலியில் கேட்ட ஒரு விடயம் சுவாரசியமாக‌ இருந்தது; சிந்திக்கவும் வைத்தது. செடிகள் அதிகம் உள்ள‌ இடங்களுக்கு (இலங்கை, இந்தியாவைப் பொறுத்த‌ வரை, தெருப் புழுதி) போய்வந்ததும் தலையைக் கழுவட்டுமாம். சரியாக‌ இருக்கும் என்று தோன்றியது. ஊரில் திரப்படம் பார்த்துவிட்டு வந்தால் இரண்டு நாட்களுக்கு என் கூந்தலில் சிகரெட் வாசனை வீசும். முடி அழுக்குகளைச் சுலபமாகப் பிடித்து வைக்கும்.

இன்னொன்றும் சொன்னார்கள்... துணிகளை வெயிலில் உலரப் போடாமல் ட்ரையரில் அல்லது வீட்டினுள்ளே வெயில் படும் இடத்தில் உலரவிடட்டுமாம். ஆடையில் காற்றிலுள்ள‌ தூசு & மகரந்தம் படியாமல் இருக்கும்.

தலையணையை நன்றாகத் தட்டிப் போடுங்கள்; அடிக்கடி உறை மாற்றுங்கள். மெத்தையை அடிக்கடி வெயில் படும் இடத்தில் உலரவைத்து எடுங்கள்.

நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் பதில் சொல்வது சிரமமாக‌ இருக்கிறது. :) தெருவில் புல் வெட்டுபவர் அருகே செல்ல‌ நேர்ந்தால் மூக்கைத் துணியால் மூடிக்கொண்டு கடப்பது அவசியம். பொதுவாகப் புல் வெட்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. மறுநாள் கூட‌ அந்த‌ இடங்களில் புல் வாசனை காற்றில் இருக்கும்.

வீட்டில் எந்தப் பொருளிலாவது பூஞ்சணம் வளர்வதாகக் கண்டால் உடனே அதை ஒரு பையில் சுற்றிக் கட்டி பத்திரமாக‌ நீக்கிவிடுங்கள். எலுமிச்சை வகைப் பழங்களிலும் சில‌ சமயம் பாணிலும் இப்படி வளரும். வித்துக்கள் காற்றில் கலந்தால் சிரமம்.

வீட்டில் வேலைகள் செய்த‌ பின்னாலும் கடைகளுக்குப் போய் வந்தாலும் கைகளைக் கழுவிக் கொள்வது நல்லது.

ஹேய் ஃபீவர் என்றாலும் குறிப்பாக‌ இன்ன‌ பிரச்சினையால் அவதிப்படுகிறார் என்பீர்களானால் அதற்கு மட்டுமான‌ குறிப்புகளைச் சொல்லலாம். ஏற்கனவே இங்கு நிறைய‌ வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன‌. சொன்னால் தேடிக் கொடுக்கப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி நாங்க குவைத்தில் இருக்கிறோம் என்கணவருக்கு குறிப்பாக வெயில் காலதில் தான் அதிகமாக முக்கில் நீர்வடிகிறது தொண்டையில் வலி கண்ணில் நீர்வடிகிறது.என் கணவர் electrician வெட்டவெளியில் தான் வேலை எங்கள் வீட்டில் செல்லபிராணிகள் இல்லை வீட்டின் அருகில் மரம் ஒன்று இருகிறது நாங்கள் கதவை திறப்பதே இல்லை.துணிகளை கூட வீட்டின் உள் தான் காயபோடுகிரேன். pls எனக்கு help பண்ணுங்க ரொம்ப கஷ்டபடுறங்க எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு.

மேடம் இன்னும் ஒரு பிரச்சினை நான் லென்ஸ் ரொம்ப நாட்களாக use panuran.ஆனால் சில நாளாக லென்ஸ் போட்டால் கண் எரிகிறது left கண்ணில் பார்வை சிறிது மங்களாக தெரிகிறது கண்ணும் சற்று சிவப்பாக இருகிறது நான் இப்போது கண்ணாடி மட்டும் தான் போடுகிரேன் ஆனாலும் சரியாகவில்லை இதற்கு எதவது வீட்டு குறிப்பு இருந்தால் சொல்லுங்க pls

இமா அம்மா கிட்ட கேட்டதுக்கு நா பதில் சொல்றேன்.என் தங்கையும் லென்ஸ் தான் யூஸ் பண்றாள்.அவளுக்கும் இதே பிரச்னை ஒருமுறை வந்தது. அவள் டாக்டரிடம் தான் போனாள்.என்னை பொறுத்தவரை கண்ணிற்கு எதுவும் வீட்டு வைத்தியம் செய்ய கூடாது. நீங்கள் முடிந்த அளவு டாக்டரிடம் போவதே நல்லது.நாம் சாதாரணமாக கக்கட்டி கண்வலி வந்தால் வீட்டு வைத்தியம் செய்வது வேறு நீங்கள் லென்ஸ் யூஸ் பண்ணும் போது செய்வது வேறு. அப்புறம் உங்கள் கணவரின் பிரச்சனைக்கு அவரை தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பவராக இருந்தால் நல்லெண்ணெய் யூஸ் பண்ண சொல்லுங்கள் கண்டிப்பா சரியாகும்.என் தம்பிக்கு சிறுவயதில் இருந்தே வெயில் காலத்தில் மட்டும் சளி பிடித்த மாதிரி நீர் வடியும். இதை தெரிந்தவர் ஒருவர் சொல்லி தலைக்கு தேய்க்கவும் இப்பொழுது அந்த பிரச்சனை இல்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப தேங்க்ஸ் அபி மேடம்

//வெட்டவெளியில் தான் வேலை// நேசல் ட்ராப்ஸ் எடுத்தால் நின்றுவிடும். ஆன்டிஹிஸ்டமைனும் உதவும். வீட்டு வைத்தியம் என்று கேட்டால் பதில் என்னிடம் இல்லை. அபி சொன்னதை முயற்சி செய்து பாருங்கள்.

கண் பிரச்சினைக்கு... பார்வை குறைவாக‌ இருக்கிறது என்கிறீர்கள், மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. சரியாகும் வரை லென்ஸ்ஸை விட்டுவிட்டு கண்ணாடியைப் பாவியுங்கள்.

உங்களிருவர் பிரச்சினைக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றேதானோ என்றும் தோன்றுகிறது. சரியாகச் சொல்ல‌ முடியாது. சுற்றாடலிலுள்ள‌ எதுவோ ஒன்று ஒவ்வாமையைக் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

romba thanks imma madam

அம்மா என் கணவருக்கு hayfever நல்லா ஆயிடிச்சி.என்னோட கண் தான் சரிஆகவில்லை hospital போயிட்டு வந்தேன் ஆனாலும் 2௦நாள் கழித்து தான் appointment,விளகெண்ணையை கண்ணுக்கு போட்டால் சரியாகும் என்று நான் நெட்டில் பார்த்தேன் pls யாராவது சொல்லுங்க விளகெண்ணையை போடலாமா ரொம்ப கஷ்டமா இருக்கு வேற எதாவது குறிப்பு இருந்தால் சொல்லுங்க pls

சந்தோஷம் பா. நல்லெண்ணெய் தேய்த்து பார்த்தீங்களா? அல்லது வேறு ஏதாவதா? எப்படியோ குணமானால் சந்தோஷம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

விளக்கெண்ணெய் விட்டு பாருங்கள். ஒரு ஸ்பூன் சீரகத்தை பொடி செய்து கொஞ்சம் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி 2 , 3 நாட்களுக்கு தேய்த்து ஒரு அரை மணி நேரம் ஊற விட்டு அப்புறம் தலைத் தேய்த்து குளியுங்கள்.2,3 நாட்களில் மாற்றம் தெரியும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்