அவசரம் ப்ளீஸ் உதவிபண்ணுங்க......

ஹாய் நான் மணிமலர்... எனக்கு பீரியட் நார்மல் தான்... NOV 6 ம் தேதி தான் பீரியட் வந்தது. 5 நாட்கள் இருந்தது. ஆனால் இப்போது கடந்த 3 நாட்களாக தலைசுற்றல், வாந்தி வருவது போல் இருக்கிறது. வயிற்றை பிறட்டுவது போல் உள்ளது. பசிக்கிறது ஆனால் சாப்பிட முடியவில்லை.. சாப்பிட்டால் நெஞ்செல்லாம் எரிவது போல் உள்ளது.. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் தலை சுற்றுகிறது... காய்ச்சல் வருவது போல் உடம்பெல்லாம் கொஞ்சம் சூடாக உள்ளது....இந்த 3 நாட்களில் குறைந்தது 3 முறை Toilet சென்றுவிட்டேன். இன்று காலை வாந்தி வருவது போல் இருந்தது என்று வாந்தி எடுக்க முயற்சி செய்தேன். உமிழ் நீர் போல வந்தது அதன் பிறகு தலைசுற்றல் சிறிது குறைந்துள்ளது. இது கர்ப்பத்திற்க்கான அறிகுறியா? இல்லை வேறு ஏதேனுமா? சொல்லுங்கள் frnds.... பீரியட் ஆன ஒரு வாரத்தில் இப்படியெல்லாம் அறிகுறி தெரியுமா? குழப்பமாக இருக்கிறது... இப்போது யூரின் டெஸ்ட் செய்து பார்க்கலாமா? plz Help me......

இது பழைய போஸ்ட் எப்படி புதிய தலைப்புல இருக்கு ..
நீங்கள் டாக்டரிடம் செல்வதே நல்லது .. இது சாதாரணம் விசயமாகவே தோணுகிறது நேரத்திற்கு சாப்பிடுங்கள் .. தேவையில்லாமல் எதையும் யோசிக்காதீங்க ..பீரியடுக்கு பிறகு அதுவும் 5 நாட்களுக்கு பிறகு கர்பமாக வாய்ப்பு குறைவுதான் ... நீங்கள் உங்களின் சேர்க்கைக்கு பிறகு மாத்திரை ஏதும் எடுக்கவில்லை எதற்கும் கர்ப்ப டெஸ்ட் எடுங்கள் .. அதில் தெரிந்துவிடும் .அப்பறம் நீங்க நிம்மதியா இருப்பீங்க ..

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நாங்க டாக்டரிடம் போனோம்... கர்ப்ப டெஸ்ட் எடுத்து பார்த்தோம்... negative தான். இது வைரஸ் பீவர் னு சொன்னாங்க.. அறுசுவைக்கு அப்போ வர முடியல. இல்லைனா அப்போவே சொல்லிருப்பேன். மறுபடியும் போன வாரம் எனக்கும் என் கணவருக்கும் வைரஸ் பீவர் வந்துச்சு. அதுக்கு 5 days க்கு பாராசிட்டமலும் 10 days க்கு விட்டமின் மாத்திரையும் தந்தாங்க. அதை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதில் இன்னும் 2 days க்கு பாராசிட்டமலும் 1week க்கு விட்டமின் மாத்திரையும் இருக்கு. ஓரிதழ் தாமரை பொடி வாங்கி வைத்திருக்கிறேன். அதை இப்போது சாப்பிடலாமா? english medicine சாப்பிடும் போது இதையும் சாப்பிடலாமா இல்லை மெடிசன் தீர்ந்ததும் ஓரிதழ் தாமரை பொடியை சாப்பிடலாமா? இதில் ஏதாவது problem வருமா?

தகவலுக்கு நன்றி ... நீங்க ஆங்கில மருந்து எடுக்கும் போது மற்றது எடுக்க வேண்டாம் .. பொதுவாவே ஒரு வகை சிகிச்சையை எடுக்கும்போது மற்றதை எடுக்ககூடாது எடுத்தால் ஏதேனும் பக்கவிளைவு வரலாம் இல்லையேல் இப்போது எடுக்கும் மருந்து வேலைசெய்யாமல் போகலாம் .. நீங்கள் மருத்துவரை மட்டும் நம்பி அவரின் ஆலோசனை படி நடப்பதே நல்லது ... அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று கண்டதையும் முயற்சிக்க வேண்டாம் ... கவலை வேண்டாம் நல்லதே நடக்கும் ..நீங்கள் சொல்லும் அந்த பொடி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. மன்னிக்கவும் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

hi mam... தங்களின் தகவலை படித்தேன்... நன்றி. காய்ச்சல் மருந்து தீர்ந்தஉடன் நாட்டுமருந்து எடுத்துக்கொள்கிறோம். என் கடைசி பதிவில் ஓரிதழ் தாமரை பொடி என்று சொல்லியிருப்பேன். என் கணவருக்கு விந்து நீர் போல வருகிறது கெட்டி தன்மை இல்லை. தண்ணீர் போல் உள்ளது. ஓரிதழ் தாமரை பொடியை தேனுடன்/வென்னீருடன் கலந்து காலை இரவு உணவுக்கு முன் சாப்பிட்டால் விந்து எண்ணிக்கை உயரும் ஆண்மை பெருகும். அதுக்கு தான் அதை வாங்கினோம் sister. ஆனால் இன்னும் மிகச்சரியாக அதை பற்றி தெரியவில்லை அறுசுவை தோழிகளை கேட்டு தெரிந்துகொண்டு பின்பு பயன்படுத்தலாம் என்று யோசித்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்