குடும்ப பிரச்சனை - மன தீர்வு தேவை

வணக்கம் தோழி..!

சில நாட்களாக நானும் எனது நண்பரும் குழம்பிகொண்டுருக்கும் ஒரு குடும்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வுதனை எதிர்பார்த்து..! எவ்வளவு சீக்கிரம் தீர்வு கொடுக்க முடியுமோ கொடுங்கள் அது உயிரை கூட காப்பாற்ற உதவும்..!

எனது நண்பர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணதிற்கு பின் மும்பையில் குடியேறினர் . அவர்கள் இல்லற வாழ்க்கை நல்லவிதமாக தான் சென்றுகொண்டிருந்தது . அவள் கற்பமுற்றால் ஏனோ அதிஷ்டமின்மையால் நான்கு மாதத்தில் குழந்தையை பறிகொடுக்க நேரிட்டது.

சில மாத சிகிச்சைக்கு பின் நண்பருக்கு விடுமுறை இல்லை என்பதால் அவளை மட்டும் அவள் அம்மாவீட்டிற்கு அனுப்பி தேவையான உதவிகள் செய்தார். அடுத்த மூன்று மாதத்தில் அவனும் விடுமுறையில் ஊருக்கு வந்தான்.

காதல் மனைவி / குழந்தையையை பறிகொடுத்தவள் என்பதால் அவளுக்கு தேவையானதை கேட்பதற்கு முன்பே செய்து கொடுத்தான்..! அவன் வந்த சிலநாட்களில் மருத்துவரின் ஆலோசனை படி மீண்டும் குழைந்தைக்கு முயற்சித்தனர். அவள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையினால் Message / முகநூல் போன்றவற்றில் சுதந்திரம் கொடுத்திருந்தான்.

ஒருநாள் அவள் கைபேசியை தற்செயலாக பார்க்கும்போது சில தவறான வார்த்தைகள் கண்ணில் படவே முழுவதுமாக படிதான். ஒரு ஆண் நண்பருடம் அவள் ஊரிலிருந்து வந்ததுமுதல் மிக கேவலமான வார்த்தை பரிமாற்றங்களும் / புகைபடபரிமாற்றங்களும் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தான் .

அப்போதும் அது எல்லாம் உண்மையாக இருக்காது என எண்ணி அவளிடம் காட்டி கேட்க்கும்போது அவள் அழுதுகொண்டே என்னை மன்னித்துவிடுங்கள் / எதோ இனம் புரியாமல் தவறாக நடந்துகொண்டேன் மன்னித்துவிடுங்கள் என கூரியுள்ளல்.

எதுவும் பேசாமல் , மனிவியின் துரோகத்தை நிதைத்தும் தாம் என்ன தவறு செய்தோம் என்ற விரக்தியில் மீண்டும் மும்பைக்கு சென்றுவிட்டான்.

என்ற சிறிது நாளில் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தி வர .என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்கையை தொலைத்து நிற்கிறான். பிகு: இதுவரை அவளை திட்டவோ / அடிக்கவோ அல்லது அவள் வீட்டாரிடம் கூட அவள் நடத்தை பற்றி கூறவில்லை. துரோகத்தை நினைத்து தினம் தினம் அழுகிறான் வாழ பிடிக்க வில்லை என புழம்பி தீர்க்கிறான்.

தற்போது வேண்டிய ஆலோசனை :

அவளை மன்னித்து ஏற்கலாமா..? மீண்டும் தொடர மாட்டாள் என்று எப்படி நம்புவது..?

அல்லது விவாகரத்து செய்யலாம்..?
அனுப்பிய செய்தி / புகைப்படங்களை என்ன செய்வது ..?
ஏற்பது என்றால் எது போன்ற வாக்குதிகளை பெறுவது..?
அல்லது பிரசவத்துக்கு பின் குழந்தையை மட்டும் ஏற்று அவளை விவாகரத்து செய்யலாம..?

//உங்களிடம் தீர்வுதனை எதிர்பார்த்து..!// தீர்வு இங்கு இல்லை. அவர்கள் இருவர் கையிலும்தான் இருக்கிறது.

இதற்காகப் போய் ஒரு ஆண் இறக்க‌ நினைப்பாரா என்ன‌! அந்தப் பெண் மறுக்காமல் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். மறைக்கவில்லை; நியாயப்படுத்தவில்லை.

//எதுவும் பேசாமல் , மனிவியின் துரோகத்தை நிதைத்தும் தாம் என்ன தவறு செய்தோம் என்ற விரக்தியில் மீண்டும் மும்பைக்கு சென்றுவிட்டான்.// ஏதாவது பேசி இருக்க‌ வேண்டும். ஒன்றில் மன்னித்து திருந்த‌ இடம் கொடுக்கிற‌ மாதிரி கூட‌ அழைத்துப் போய் வைத்திருந்திருக்கலாம். அல்லது சண்டையாவது போட்டிருக்கலாம். சில‌ சமயம் பேசாமல் ஆறப் போடுவதும் நல்லதுதான்.

உங்கள் நண்பர் மனைவிக்குத் தேவைப்பட்ட‌ ஆதரவு அவரது கணவரிடமிருந்து கிடைக்காததால் ஆதரவு கிடைத்த‌ இடத்தை மனது தற்காலிகமாக‌ நாடியிருக்கிறது என்று தோன்றுகிறது.

//சிறிது நாளில் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தி வர .என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்கையை தொலைத்து நிற்கிறான்.// இன்னும் வாழ்க்கை தொலையவில்லை. உங்கள் நண்பர் முடிவெடுக்கவில்லை இன்னும். இந்தக் குழந்தையும் அவர் கொடுத்ததுதானே!

//இதுவரை அவளை திட்டவோ / அடிக்கவோ அல்லது அவள் வீட்டாரிடம் கூட அவள் நடத்தை பற்றி கூறவில்லை.// இவை எல்லாவற்றையும் விட‌ அதிகப்படியான‌ தண்டனையைக் கொடுத்திருக்கிறார்; பேசாமல் தவிர்ப்பது பெரும் தண்டனை. //துரோகத்தை நினைத்து தினம் தினம் அழுகிறான்// மன்னிப்புக் கேட்ட‌ பின்னால் துரோகம் என‌ முடியாது. இதே போல‌ அந்தப் பெண் கூட‌ தன் தவறை நினைத்து நினைத்துத் தினமும் அழக் கூடும். துரோகம் என்பதை விட‌... ஒரு சறுக்கல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

//அவளை மன்னித்து ஏற்கலாமா..?//
உங்கள் நண்பரது குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க‌ வேண்டும் என்றால்... அவர் மனைவி மனநிலை நன்றாக‌ இருப்பது முதலாவது தேவை. அது இப்போது உங்கள் நண்பர் கைகளில் உள்ளது. எதுவானாலும் அமைதியாகப் பேசித் தீர்க்கட்டும்.

நீங்கள் உங்கள் நண்பருக்கு ஆறுதலாக‌ இருங்கள். அவரும் மிகப் பெரிய‌ அளவில் அடிபட்டிருப்பார். இது நிச்சயம் பெரிய‌ அதிர்ச்சி தான். எப்படி நடந்துகொள்வது என்பதில் குழப்பம் இருக்கும். ஒன்றிரண்டு நாள் அமைதியாகச் சிந்தித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

//மீண்டும் தொடர மாட்டாள் என்று எப்படி நம்புவது..?// நம்ப‌ வேண்டாம். அன்பைச் சொரிந்தால் மீண்டும் மனம் இன்னொரு இடத்தை நாடாது இல்லையா! வேறு சிந்தனைக்கு இடம் கொடாமல் வைத்திருப்பது உங்கள் நண்பரின் கெட்டிக்கார‌த்தனம்.

//அனுப்பிய செய்தி / புகைப்படங்களை என்ன செய்வது ..?// மன்னித்தாரானால் முதலில் இவற்றை டிலீட் செய்வார். வைத்திருந்தால் பார்க்கப் பார்க்க‌ மனசு கெட்டுப் போகும். நிம்மதி குறையும்.

விவாகரத்து என்று முடிவு செய்திருந்தால்... இவற்றை ஆதாரமாகக் காட்டவென்று வைத்திருக்கலாம். ஆனால்... அந்த‌ ஒரு நோக்கத்தைத் தவிர‌ வேறு எதற்காகவும் அந்தச் செய்திகளும் புகைப்ப‌டங்களும் பயன்படுத்தப்ப‌டக் கூடாது. அந்தப் பெண்ணின் பெற்றோர், தேவையானால் சட்டத்தைச் சார்ந்தவர்கள் தவிர‌ வேறு யாருக்கும் காட்டுவது சரியல்ல‌.

//ஏற்பது என்றால் எது போன்ற வாக்குதிகளை பெறுவது..?// மணவாழ்க்கை கொடுத்துப் பெறுவது. தனியே பெறுவது மட்டும் அல்ல‌. இவர் முடிந்தால் எப்பொழுதும் பிரியாமல், பிரியமாய் இருப்பார் என்று வாக்குக் கொடுக்கட்டும். நடந்தும் காட்டட்டும். அந்தப் பெண் தானாக‌ வாக்குக் கொடுக்காமல் திருந்தி நடப்பார்.

//அல்லது பிரசவத்துக்கு பின் குழந்தையை மட்டும் ஏற்று அவளை விவாகரத்து செய்யலாம..?// ஆனால்... குழந்தை பிறக்கும் வரை தாய் சந்தோஷமாக‌ இருக்க‌ வேண்டும். உங்கள் நண்பர் மனைவியை மன்னித்ததாக‌... எதுவுமே நடக்காதது போல் சமுதாயத்தின் முன் நடிக்க‌ வேண்டும். மனைவியை நன்றாகக் கவனித்துக் கொள்ள‌ வேண்டும். நண்பரால் முடியுமா? பிறகு குழந்தையை எப்படிப் பராமரிப்பார்! அத்தனை நாள் அமைதியாக‌ இருந்துவிட்டு திடீரென்று சொன்னால் யார் நம்புவார்கள்!!!!

மன்னித்து ஏற்றுக் கொண்டால்... தொடர்ந்து வரும் காலங்களில் இந்தப் பேச்சை எடுக்காமல் மறந்துவிடுவது ஆரோக்கியமான‌ விடயமாக‌ இருக்கும்.. இந்த‌ ஒரு வரி உங்கள் நண்பருக்கு மட்டுமல்ல‌, உங்களுக்கும் சேர்த்துச் சொல்கிறேன்.

தீர்வு சொல்லவில்லை; எனக்குத் தோன்றியதைத் தட்டினேன். உங்கள் நண்பருக்குத் தான் உண்மை நிலை தெரியும். அவர் யோசித்து முடிவு எடுக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

தோழி # இமா அவர்களுக்கு மிக்க நன்றி ! கடவுள் உங்களுக்கு எல்லா கிருபைகளையும் கொடுக்கட்டும்..! என்ன செய்வதறியாது திகைத்த நேரத்தில் உங்கள் ஆலோசனை சற்று ஆறுதல் தான்..!

1. நண்பர் பெரிதுபடுத்தாமல் ஊருக்கு சென்றதன் காரணம் அவள் குடும்ப சூழ்நிலை அவள் பெற்றோர் அவள் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அடுத்துள்ள தங்கையின்/ தம்பியின் வாழ்கையை எண்ணி.

2. அவர் என்னிடம் திரும்ப திரும்ப கேட்க்கும் கேள்வி ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்து கொள்ளமுடியுமா ? காரணம் பெண்ணின் பெற்றோரே பொறாமை படும் அளவிற்கு இருவரும் வாழ்ந்தார்கள்.வெறும் மூன்று மாதம் பிரிவுக்கே இப்படி என்றால்.?

3.நண்பராக கண்டு பிடுக்கும் வரை அவள் அந்த உறவை தொடர்ந்திருக்கிறாள். அவளை மன்னிக்க / மறக்க தாயாராக இருக்கும்போதும் இந்த ஒரு செயல் மட்டுமே அவரை உறுத்துகிறது.

மேலும் பின் வரும் காலங்களில் இதை நியாபக படுத்தினாலோ அல்லது சேர்ந்து வாழும் போது நியாபகம் வந்து துளைதாலோ இருவரின் நிலை என்னவாகும்.

கண்டு பிடித்தவுடன் தெரியாம செஞ்சிட்டேன் ந‌ மன்னிச்சிடுங்க என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரியாக்கிவிடுமா என்ன..?

அவள் நண்பரிடம் பகிர்ந்த புகைப்படங்கள் செய்திகள் நாளை வெளியே தெரிய வரும் நிலையில் எவ்வாறு இதை அணுகுவது ? அல்லது அவன் மீது ஏதேனும் தண்டனை அல்லது அவனை எதாவது செய்ய இயலுமா?

அவள் குடும்பத்தினருக்கு இந்த செயல் தெரியாத காரணத்தினால் மனோதத்துவ நிபுணரிடம் கூட தற்போது கூட்டி செல்ல இயலாது.

கடேசியாக! எனது ஆசை இருவரும் சேர்ந்து பழயபடி வாழவேண்டும் அதற்க்கு என்ன வழி..?

cooking

எனக்கு உங்கள் நண்பர் உங்களிடம் பகிர்ந்ததே தப்பாக தெரியுது .மனைவி நடத்தை பற்றிய விடயம் இன்னொரு ஆணிடம் பகிர்வது தவறு .2 பேரும் பேசி அல்லது கன்சல்டிங் போய் முடிவெடுப்பதுதான் நல்லது .

இப்போது நீங்கள் படித்ததை விட‌ முன்பு அதிகம் எழுதியிருந்தேன். :‍) திரும்ப‌ வந்து கிட்டத்தட்ட‌ பாதி அளவு டிலீட் பண்ணீட்டேன். 'பெரும்பாலும் கேள்வி கேட்கிற‌ ஆளுக்கு எதிர்மாறாகத்தான் என் பதில் இருந்திருக்கு,' என்று மன‌‌தில் பட‌... குறைத்து விட்டேன். :-)

எனக்கும் உங்கள் தோழருக்காக‌ நீங்கள் இங்கு வந்து கேட்பதில் உடன்பாடு இல்லை. அவர் தன் மனக் கவலையை உங்களிடம் ஒரு ஆறுதலுக்காகக் கொட்டுகிறார் என்றால் அவருக்கு நம்பிக்கையான‌ நட்பாக‌ நீங்கள் இருக்க‌ வேண்டாமா! இப்போ ஆள், பெயர் தெரியாவிட்டாலும்... உலகம் முழுவதும் தெரிவது போல‌ பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தோழர் இடத்திலோ அவர் மனைவி இடத்திலோ நீங்கள் இருந்திருந்தால் அறுசுவை த்ரெட்டில் கேள்வி வந்ததைப் பற்றிச் சந்தோஷப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகம்தான்.

//கடவுள் உங்களுக்கு எல்லா கிருபைகளையும் கொடுக்கட்டும்..!// ;)) நேரம் கிடைத்தது; பதில் சொன்னேன். நல்ல‌ வேளை நீங்க‌ முழுவதும் படிக்க‌ முன்னால் எடிட் பண்ணீட்டேன். அவசரப்படாதீங்க‌. எப்பவாச்சும் என் மேல் கோபம் வரலாம். :‍)

//அவர் என்னிடம் திரும்ப திரும்ப கேட்க்கும் கேள்வி ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்து கொள்ளமுடியுமா ?// கர்ர்... இப்ப‌ திசை மாறிப் போகுது உங்கள் கேள்வி. எங்கேயோ ஆரம்பித்து பெண்களை இழுக்க‌ இமா பதில் சொன்னால்... கொடுத்த‌ ஆசீர்வாதத்தை வாபஸ் வாங்கீருவீங்கள். :‍) பெண் மனிதப் பிறவி இல்லையா!! அல்லது ஆண் எப்படியும் இருக்கலாம் என்கிறீர்களா? :‍)

சில‌ கேள்விகள்... நீங்கள் ஏன் தோழிகளைப் பதில் சொல்லக் கேட்டிருந்தீர்கள்? இங்கு உங்கள் நண்பரைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'அவர்' என்கிறீர்கள்; அந்தப் பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும் போது 'அவள்' என்கிறீர்கள். கர்ர்ர்ர்ர்

//வெறும் மூன்று மாதம் பிரிவுக்கே இப்படி என்றால்.?// நீங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுக்கப் போறீங்க‌. :) .கர்ர்ர்.. கலியாணம் கட்டுவது பிரிந்து வாழ அல்ல.

//மேலும் பின் வரும் காலங்களில் இதை நியாபக படுத்தினாலோ அல்லது சேர்ந்து வாழும் போது நியாபகம் வந்து துளைதாலோ இருவரின் நிலை என்னவாகும்.// அதை விடுங்க‌, உங்களுக்கு எல்லாக் கதையும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது அந்தப் பெண்ணுக்கு தெரிந்தால் என்னவாகும்!! ! இப்போ உங்கள் நண்பர் துரோகம் செய்ததாகத் தோன்றவில்லையா உங்களுக்கு!!!

//மன்னிச்சிடுங்க என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரியாக்கிவிடுமா என்ன..?// இல்லைதான். அதே நியாயம்தான் எல்லோருக்கும்..

//நாளை வெளியே தெரிய வரும் நிலையில் எவ்வாறு இதை அணுகுவது ? அல்லது அவன் மீது ஏதேனும் தண்டனை அல்லது அவனை எதாவது செய்ய இயலுமா?// இது உங்கள் பிரச்சினைதானா!!

//கடேசியாக! எனது ஆசை இருவரும் சேர்ந்து பழயபடி வாழவேண்டும் அதற்க்கு என்ன வழி..?// முதல் வழி நீங்கள் இந்தப் பிரச்சினையை விட்டு விலகுவது. உங்களால் நடுநிலமை வகிக்க இயலாது. உங்கள், 'அவர்' & 'அவள்' இதற்கு உதாரணம். நீங்கள் அந்தப் பெண்ணின் அண்ணாவா? அப்பாவா? மாமனாரா?உங்கள் மனம் இந்தப் பிரச்சினையில் வரும் ஆணின் சார்பாக மட்டுமே சிந்திக்கும். அவர்களைச் சேர்த்து வைக்க உதவ‌ உங்களால் இயலாது. விட்டுவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்