அலைச்சலால் சளி

என் 1வயது மகளுக்கு மூக்கில் சளி தண்ணீராய் வடிகிறது. நெஞ்சுசளி இருமல் வேற அதிகமாக இருக்கிறது.தூங்கும் போதும் இருமுகிறாள் அதனால் தூங்க முடியாமல் அவதிபட்டு அழுகிறாள். பகல் முழுக்க மூக்கு சளி இரவில் இருமல். பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. காய்ச்சல் வேற விட்டு விட்டு வருகிறது..
3நாள் வெளியூர் சென்றோம். அந்த அலைச்சலில் தான் இவ்வளவு தொந்தரவும்.
டாக்டரிடம் காண்பித்தேன். மருந்து கொடுத்தார்கள் அதன் பிறகு தான் மூக்கு வடிகிறது.
ப்ளீஸ் தோழிகளே என் மகளுக்கு சளி சரியாக ஏதேனும் ஆலோசனை கூறுங்கள்.

மூக்கில் தண்ணியாக வடிந்தால் அதை நிறுத்த முயற்சி செய்ய வேணாம் கெட்ட நீர் தான் வெளியேறும் கட்டியாக இருந்தால் மட்டும் மருந்து கொடுங்க இது எனக்கு டாக்டர் சொன்னது

மேலும் சில பதிவுகள்