பைன் கோன் நத்தார் மரம்

பைன் கோன் நத்தார் மரம்

தேதி: January 5, 2016

4
Average: 4 (6 votes)

 

பைன்கோன்களை சேகரித்து கொள்ளவும்
அடித்தளம் அமைக்க ஒரு பூந்தொட்டி அல்லது ஒரு ஃபோம்
கத்தரிக்கோல்
அட்டை
ஸ்னோ ஸ்ப்ரே
க்ளூ
ரேப்
ஒரு மொத்த குச்சி அல்லது கோல்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
நீங்கள் எடுத்துக்கொண்ட அடித்தளம் பூந்தொட்டியாக இருந்தால் மண் கொஞ்சம் நிரப்பி கோலை நடுவில் வைக்கவும். ஃபோமாக இருந்தால் நடுவே துளையிட்டு கோலை வைக்கவும்.
பூந்தொட்டி
அட்டையை கடையில் பொட்டலம் சுருட்டுவது போல் சுற்றவும். கோன் போல் வந்ததும் ரேப் ஒட்டவும்.
பேப்பர் கோன்
கோனில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியை வெட்டி நீக்கி விடவும்.
கோனை நறுக்கவும்
தயார்ப்படுத்தி வைத்துள்ள அடித்தளத்தில் இந்த அட்டையிலான கோனை மாட்டவும்.
பேப்பர் கோன்
பைன் கோனில் க்ளூ தடவி பெரிய கோன்களை முதலில் ஒட்டி விட்டு படிப்படியாக சிறிய பைன் கோன்களையும் ஒட்டவும்
பைன் கோன்
ஸ்னோ ஸ்ப்ரேயை அடிக்கவும்.
ஸ்னோ ஸ்ப்ரே
விரும்பியது போல் லைட், நட்சத்திரம் போன்றவற்றை கொண்டு சாதாரண நத்தார் மரத்தை அலங்காரம் செய்வதுபோல் செய்யவும்.
நத்தார் மரம் அலங்கரித்தல்
பைன்கோனால் செய்த அலங்கரிப்பட்ட அழகிய க்றிஸ்துமஸ் மரம் தயார்.
கிறிஸ்துமஸ் மரம்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வடி..வா இருக்கு சுரேஜினி. ஸ்னோ ஸ்ப்ரே மிச்சம் இருக்கு. ஆனால் இருக்கிற கோன்தான் போதாது. வேற வேற சைஸாக இருக்கு. டிசெம்பருக்குள் நிறைய சேர்க்கக் கிடைச்சால் கட்டாயம் செய்து பார்ப்பேன். இந்தக் குறிப்பை மாக் பண்ணி வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சூப்பராகவும் ஈசியாகவும் இருக்கு.. வாழ்த்துக்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சம!!! ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா