பாலை பற்றி சந்தேகம்

hi friends பாலை கொதிக்கவைத்தால் சத்து எல்லாம் விணாகிவிடும் என்று படித்தேன் அதைபோல பாலுடன் பேரிச்சம்பழம் syrup கலந்து குடிக்ககூடாது என்று நெட்டில் பார்தேன் இது உண்மையா யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க

உண்மைதான். சத்து மட்டுமல்ல, சுவையும் குறைந்து போகும்.
கொதிக்க வைக்கும் போது கிருமிகள் இறந்து போவதால், சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். கொதிநிலையில் அதிக நேரம் வைத்து சுண்டக் காய்ச்சினால் சத்து நிறையவே வீணாகிப் போகும்.

//பாலுடன் பேரிச்சம்பழம் syrup கலந்து குடிக்ககூடாது // இதை எங்கே கண்டீர்கள்? பேசப்படும் தலைப்பைப் பொறுத்து கருத்தும் மாறும். :-) அந்தக் 'கூடாது' என்னும் சொல்லின் அர்த்தம் 'நஞ்சு' என்பதல்ல. எழுதியவர்கள் சொன்ன அர்த்தம் வேறு எதோ ஒன்று. அந்த இடுகையைப் படிக்காததால் என்னால் விளக்கம் சொல்ல இயலவில்லை.

‍- இமா க்றிஸ்

தேங்க்ஸ் mam நான் என்னோட பையனுக்கு healthdrinks கொடுக்க மாட்டேன் அதனால் தான் பாலுடன் டேட்ஸ் syrup கலந்து கொடுக்கலாம்னு நெடட்டில் தேடிய பொழுது பார்தேன் பாலில் உள்ள கால்சியம் டேட்ஸ்ஸில் உள்ள இரும்பு சத்துகளை தடுக்கும் என்று பார்தேன்.pls இது உன்மையா யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்க.

பசும்பால் பொங்கி வரும் போதே அடுப்பை நிறுத்திடனுமா? இல்ல சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்த வேண்டுமா?. அப்படியானால் எவ்வளவு நிமிடம் கொதிக்கவிட வேண்டும். உதவுங்கள் தோழிகளே?.

உண்மையில், பால் காய்ச்சாமல் சாப்பிடக் கூடிய‌ உணவுதான்.

தயிர், மோர், பன்னீர் செய்வதானால் காய்ச்சாமல் செய்ய‌ முடியாது.

//பசும்பால் பொங்கி வரும் போதே அடுப்பை நிறுத்திடனுமா? இல்ல சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்த வேண்டுமா?// இது அவரவர் விருப்பம் & தேவையைப் பொறுத்தது.

//எவ்வளவு நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.// அதிகம் கொதிக்க வைத்தால் சத்துக்கள் கெட்டுப் போகும்.

‍- இமா க்றிஸ்

அப்டினா பழஜீஸ் அயிட்டங்களுக்கு பசும்பாலை காய்ச்சாமலே சேர்த்துக்கொள்ளலாமா?. ஆப்பிள், மாதுளை, சப்போட்டா தவிர வேறு எந்தெந்த பழங்களுக்கு பால் சேர்த்து ஜீஸ் தயாரிக்கலாம் மா?.

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு..எனக்கு இப்போ 7மாதம்ம் ஆகுது .dates syrap பாலுடன் சாப்பிடலாமா ?அப்படி முடியாது எனில் எப்படி நான் syrp சாப்பிடலாம்ம்ம்.எனக்கு உறவினர் ஒருவர் இதை தந்தார் எதன்நோடு சாப்பிடலாம்ம்ம்.

//பாலுடன் சாப்பிடலாமா?// இதைப் பற்றித் தெரியாது.

//எதன்நோடு சாப்பிடலாம்ம்ம்.// :‍)
பட்டர் தடவிய‌ ப்ரெட் / டோஸ்ட்டில் தடவிச் சாப்பிட‌ சூப்பரா இருக்கும். பால்ச்சோறு, சப்பாத்தி, ரொட்டியோடும் சாப்பிடலாம்.
பழஞ்சோறு + தேங்காய்ப்பூ + ஒரு பிஞ்ச் உப்பு + டேட் சிரப் = யம்! யம்! யம்!

‍- இமா க்றிஸ்

டேட் சிரப் பாலுடன் கலந்து தாராளமாக சாப்பிடலாம்...நான் தினமும் பாலுடன் கலந்து குடிக்கிறேன்.. கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது..

அவந்திகா

//பழஜீஸ் அயிட்டங்களுக்கு// நீங்கள் எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.

//பசும்பாலை காய்ச்சாமலே சேர்த்துக்கொள்ளலாமா?// ஆம்.

காய்ச்சுவதில் இருக்கும் ஒரு நல்ல‌ விடயம்... பால் கெட்டிருந்தால் காய்ச்சும் போது தெரிந்துவிடும்.

//எந்தெந்த பழங்களுக்கு பால் சேர்த்து ஜீஸ் தயாரிக்கலாம்// முதலில்... அது ஜீஸ் இல்லை, ஜூஸ். ;))

பழங்களை அப்படியே சாப்பிட்டால் கிடைக்கும் அளவு சத்து ஜூஸ் போட்டுக் குடிக்கும் போது கிடைப்பதில்லை. பழங்களோ காய்களோ அவற்றைத் தனியே அல்லது நீர் சேர்த்துப் பிழிந்து எடுத்தால் ஜூஸ்.

பால் சேர்த்தால்... அது ஸ்மூதி, ஜூஸ் இல்லை. //ஆப்பிள்// ஸ்மூதி தெரியும். //மாதுளை// _ சும்மா சாப்பிட்டால் கிடைக்கும் சுவை அதை அடித்துப் பிழிந்து சாப்பிடும் போது கிடைக்காது. ;( //சப்போட்டா// இதைப் பற்றியும் தெரியாது. பனானா ஸ்மூதி செய்யலாம். வேற‌... மாம்பழம், ஆவகாடோ, தர்பூசணி, சீதாப்பழம்...

விளாம்பழம், அன்னாசி, பப்பாளியிலும் போடலாம். ஆனால் க‌ர்ப்பமாக‌ இருக்கும் போது ரிஸ்க் எடுக்க‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்