வரவு செலவுத் திட்டம்

அன்பு நேயர்களே, வழக்கம் போல் என்ன எழுதலாம் என்று யோசித்து, இந்த தலைப்பு பற்றி எழுத முடிவுச் செய்தேன் காரணம், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு செலவுச் செய்வது என்று அறியாமல் எவ்வளவோ பணத்தை வீணடிக்கின்றோம். மேலும் இதனால் கூட கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமையால் குடும்பங்களில் பிரச்சனை ஏற்ப்பட்டு பிரிந்துப் போகக் கூட காரணமாகி விடுகின்றது. பொதுவாக ஆண்களை விட பெண்கள் இந்த விசயத்தில் அதிக அக்கரை காட்டுவார்கள்.பணத்தை விரயமாக்காமல் சேமித்து குடும்பத்திர்க்கு நல்லது செய்ய வேண்டும் என்று, செயல் படுத்த முனைவார்கள்.ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அவர்கள் கஷ்டப்பட்ட பணத்தை செலவு செய்து மகிழ்வதிலேயே நாட்டமுடையவர்களாக இருப்பார்கள். இது போன்ற மன நிலையுடைய கணவர்களை வாய்க்கப் பெற்ற மனைவிகளுக்குத் தான் மிகவும் பிரச்சனைகள் அதிகம், என்ன கூறினாலும் கணவரின் குணத்தை மாற்றமுடியாமல் தவிப்பார்கள்.(அதில் நானும் ஒருத்தி)ஆகவே இவ்வாறு நாம் இந்த பணவிரயத்தைப் பார்த்து தவிப்பதோடு நிறுத்திக் கொள்ளளாமலும், அவர்கள் வழியிலும் தலையிடாமல், மனைவிமார்கள் சாமார்த்தியமாக குடும்பத்தை நடத்திச் செல்ல முதல் திட்டமாக இந்த ஆலோசனை உதவும் என்ற நம்பிக்கையில் எழுதியுள்ளேன்.

குடும்ப வருமானத்திலிருந்து மாதா மாதம் எவ்வாறு வரவுச் செலவுச் செய்யலாம் என்று பாத்தோமானால்:

1.மொத்த குடும்ப வருமானத்திலிருந்து 25% வீட்டு வாடகைக்கு அல்லது வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனுக்கு செலுத்துவதாக அமைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு மேல் மீறிவிடாமல் இருக்க வேண்டும்.

2.அடுத்தது முக்கியமான ஒன்று உணவு. இதற்கு மாத வருமானத்திலிருந்து 15% எடுத்து வைத்துவிட வேண்டும்.இதில் மளிகை, தினப்படி காய்கறி செலவு, கேஸ் பில், வீட்டில் வேலை செய்பவரின் ஊதியம் போன்ற தேவைகளுக்கென்று ஒதுக்கி விடலாம்.

3.அடுத்தது மாதாந்திர கட்டணங்களான கரண்ட் பில், தொலைப்பேசி, செல்போன், கேபில், இன்டர்னெட்,மேலும் முக்கியமான கிரிடிட் கார்டுகள் போன்ற பில்களுக்கென்று வருமானத்தில் 15% எடுத்து வைத்து விட வேண்டும் அதற்க்கு மேல் போகவிடாமலும், கடன்கள் அதிகரிக்காமல் தவிர்த்து விடலாம்.

4.வாகன செலவுகளுக்கென்று 15% ஒதுக்கலாம், இதில் வண்டிகளின் பராமரிப்பு, எரிபொருள், வாகனம் வாங்கிய கடன், மற்றும் இதிலேயே பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கான மாதாந்திர கட்டணம்,போன்ற அனைத்திற்க்கும் மாதா மாதம் இந்த சதவிகிதத்திற்க்கு மேல் போக விடாமல் எடுத்து வைத்து விட வேண்டும்.

5.அடுத்தது மருத்துவ தேவைகளுக்கென்று 5% பணத்தை ஒதுக்க வேண்டும். இந்த பணத்தை தேவை ஏற்ப்பட்டால் ஒழிய தொடக் கூடாது, மாதாமாதம் எடுத்து வைத்துவிடவேண்டும்.

6.பிறகு மற்ற பொழுதுப்போக்கு போன்ற செலவுகளுக்கென்று 5% எடுத்து வைக்கவும். இதில் வெளியில் சென்று சாப்பிடுவது, சினிமா, சுற்றுலா, விருந்தினரை உபசரிப்பது,குடும்பத்தினர்களின் பிறந்த நாள், பண்டிகை போன்ற முக்கியமான விசயங்களுக்கென்று மாதா மாதம் ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

7.அடுத்தது சேமிப்பு,வருமானத்தில் மேற்கூறிய எல்லாச் செலவும் போக மிச்சம் இருப்பது 20% இருக்கும் இதில் குழந்தைகளுக்கென்று பத்து சதவீதமும், பெற்றோருக் கென்று பத்து சதவிதமும் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த சேமிப்பு பணத்தை எவ்வளவு லாபகரமாக்க வேண்டும் என்று வங்கிகளின் ஆலோசனைப்படி சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு மேற் கணட முறையில் மாத வருமானத்திலிருந்து மனைவிகள் வரவுச் செலவுச் செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்து வந்தால், பணநெருக்கடியிலிருந்து குடும்பத்தையும், எவ்வளவு செலவாளியான கணவரையும் சமாளிக்கலாம் என்று கருதுகின்றேன்.திட்டத்திலுள்ள முறைகள் படி குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வது மனைவிகளின் சாமர்த்தியத்தைப் பொருத்தது. ஆனால் அதில் நான் குறிப்பிட்டுள்ள சதவிகிதங்கள் மாறாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்திற்கு நல்லது. ஆகவே இனி வாய்பேச்சு கூடாது காரியத்தில் இறங்குங்கள்.

முதலில் ஒரு நேட்டு புத்தகத்தை எடுத்து மேற்கூறிய முறையில் உங்கள் குடும்ப வருமானத்தை குறிப்பிட்டு என்னென்னக் குடும்பச் செலவுகள் இருக்கின்றது என்று பட்டியல் போடுங்கள், அதில் புழக்கத்திலுள்ள எந்த பழக்கத்தையும் குறைக்கவோ, மாற்றவோ கூடாது. இவ்வாறு நீங்கள் போட்டுள்ள கணக்கு படி இன்றைய தேதியிலிருந்து ஒரு பத்து வருடத்திற்கு உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கும் என்று, கணக்கு போட்டு உங்கள் கணவரிடம் காட்டுங்கள். பிறகென்ன பொன் மகள் வந்தாள்....பொருள் கோடி தந்தாள்... பாட்டுதான்.

இதுப் போன்ற பிராக்டிக்கலான திட்டத்தால் கூட குடும்ப நிர்வாகத்தை மேம்படுத்தி செயல்பட்டால், குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இந்த பணத்தால்கூட பிரச்சனைகள் வராது என்பது என் கருத்து என்று கூறி முடிக்கின்றேன்.இது குறித்து மேலும் நேயர்களின் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும், கருத்துக்களையும், ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன் நன்றி.

hai how r u? madam.this is very useful to me and all the house wives to lead a very good and happy home.
thank you

ஹலோ neha நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? நான் நல்ல சுகம், நன்றி. இந்த குடும்ப வரவு செலவுத் திட்டம் தங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.நிச்சயமாக இவ்வாறு அல்லது இதைப் போன்று எளிய முறைகளை கையாளுவதால் குடும்பத்தில் வீணாக ஏற்படும் பணவிரயத்தை தடுக்கலாம், அது குடும்ப தலைவிகளின் கையில் தான் உள்ளது என்பதனால் இந்த திட்டத்தை அவர்களுக்கு வலியுருத்த விரும்பினேன்.

கணக்கு கேட்டு குடும்பம் நடத்தக் கூடாது. ஆனால் கணக்கு பார்த்து குடும்பம் நடத்த வேண்டும்.பணத்தை செலவுச் செய்யாமல் சேமிப்பதிலே நமது கவனத்தை செலுத்துவதால் குடும்பத்திற்கு எந்த பலனும் இருக்காது, அதைப் போலவே ஊதாரியாக செலவுச் செய்வதும் குடும்பத்தில் எந்த பலனையும் அளிக்காது.

ஆகவே செலவுச் செய்யும் பணம் எந்தெந்த வழிகளில் செலவழிக்கப்படுகின்றன என்பதில் அட்டவணைப் போட்டு குடும்பம் நடத்த வேண்டும்.இதனால் குடும்ப பட்ஜட்டை அனைவரும் தெரிந்துக் கொண்டு தங்களின் செலவுகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள நிச்சயமாக பயன்படும் என்பதில் சந்தேகமேயில்லை.இது குறித்து தங்களின் பதிலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

Romba nalla points manohari. Ennaku ethu migavum uthaviya irrukkum

ஹலோ birraj எப்படி இருக்கின்றீர்கள்? இந்த குறிப்பு தங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது நோக்கமும் அதுதான். நன்றி.

Hello மனோகரி Medam!
உங்களின் இந்த கருத்துக்கள் எம்மைப் போன்றவர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . எங்கள் வீட்டில் வரவு செலவு எல்லாம் என் கணவர்தான் பார்ப்பது.எப்பொழுதும் வரவை விட செலவுதான் அதிகமாக இருக்கின்றது.உங்களின் குறிப்பைஎடுத்து கொடுத்து இருக்கின்றேன்.இது போன்ற நல்ல தகவல்களை மேலும் எதிர்பார்க்கின்றேன்.நன்றி.

ஹலோ lathas எப்படி இருக்கின்றீர்கள்? இந்த ஆலோசனை உங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். எதிர் காலத்தில் குடும்ப வரவு செலவு திட்டத்தில் நீங்களும் உங்கள் கணவருடன் இணைந்து, எந்த வித பிரச்சனையும் இல்லாமல் செயல்படுவீர்கள் என்று நம்புகின்றேன். தாங்கள் எதிர்பார்கின்றபடியே மேலும் இதுப் போன்ற குடும்ப நலனுக்கேன்ற குறிப்புகளை தர முயற்சி செய்கின்றேன். நன்றி.

Hi Manohari,
I am not able to type in tamil. can you help me in that.

Thanks
Birundha

ஹலோ birraj எப்படி இருக்கின்றீர்கள்? தமிழில் அச்சடிப்பது மிகவும் சுலபமானது.இதற்காகவே அறுசுவை பக்கங்களின் கீழாக இடம் பெற்றுள்ள எழுத்துதவி என்ற இடத்தில் கிலிக் செய்தீர்களானால் தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் தோன்றும். அதில் குறிப்பிட்டுள்ள படி நீங்கள் தமிழில் எழுத நினைப்பதை எழுதி காப்பி/copy செய்து வேண்டிய இடத்தில் பேஸ்ட்/paste செய்து விடலாம்.

மேலும் முகப்பின் இறுதியில், அன்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் இதற்கான உதவியும் குறிப்பிடப்பட்டுள்ளது, பார்வையிடவும்.நன்றி.

அன்புள்ள மனோஹரி நான் நன்றாக இருக்கிறேன். நிங்கள் எப்படி இருகிறீகள். நான் எதாவது தவறாக தட்டச்சு செய்துயிருந்தால் அட்ஜுச்ட் செய்யவும். மிக்க நன்றி. மேலும் பல பயனுல்ல செய்திகளை எங்களுக்கு வழங்கவும்.

ஹலோ birraj பாராட்டுக்கள். இவ்வளவு சீக்கிரத்தில் தமிழில் தட்டச்சு செய்ய பழகி விட்டீர்களே!!!! தங்களின் ஆர்வத்தை பாராட்டுகின்றேன். நிச்சயமாக தாங்கள் கூறியிருப்பதுப் போல் தொடர்ந்து அறுசுவையில் பங்குக் கொள்கின்றேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்