யானைக் கதைகள்

சின்னவர்கள் ஒரு யானைப் பாடல் பாடுவார்கள். அது... 'கோவில் யானை வருகுது, குழந்தைகளே வாருங்கள்.' என்று ஆரம்பிக்கும் இசையோடு அசைந்து பாடும் பாடல். மீதி வரிகளை மறந்துவிட்டேன் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்கள். யானை தலையை ஆட்டி வருவது போலவும் ஒரு வரி வரும் அந்தப் பாட்டில்.

என் மூத்தவர் அதை எப்படியோ 'கோல்தானை' என்று மனதில் இருத்தியிருந்தார். பேச்சு ஒழுங்காக வராத காலத்திலும் குறும்பு அதிகம். இரண்டாவது சின்னவர் பிறந்த சமயம் நாட்டிலும் என் வீட்டிலும் கொஞ்சம் இடிபாடான காலம். அதோடு 3 மாதம் பிரசவ விடுமுறை + ஒரு நிர்ப்பந்தத்தில் அசைவம் சாப்பிட காலம் - குட்டி குஷ்புவாக இருந்தேன். ஒருநாள் பாடசாலை விட்டு வீடு வந்து படலையைத் திறந்தேன். அது கிரீச்சிட்டுத் திறக்க உள்ளே இருந்து செபா குரல் கேட்டது, 'யார் மகன் கேட்ல!' அதற்கு என் மூத்தவர் சொன்ன பதில்... "கோல்தானை வருகுது," :-)

பிறகு எப்படியோ elephant என்னும் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் முற்றத்தில் விளையாடிவர் அலறியடித்து ஓடிவந்தார். "வேலியில எலிஃபன்ட் நிக்குது," சிரித்தோம். கோபம் வந்தது சின்னவருக்கு. "அது தலையைத் தலையை ஆட்டுது," என்று ஆட்டிக் காட்டி, விடாப்பிடியாக இழுத்துப் போய்க் காட்டினார். அவர் காட்டிய இடத்தில் துருப்பிடித்த தகர வேலியில் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு கலட்டி ஓணான். (கலட்டி ஓணான் என்றால் என்னவென்று கேட்கவென்று யாருக்காவது தோன்றிவிடுமோ! அதை அப்படித்தான் சொல்லுவோம். காரணம்... அதன் விலங்கியற் பெயரைத் தெரிந்துகொண்ட பின் புரிந்தது. Calotes என்று கூகுள் செய்து பாருங்கள்.) எலிஃபன்ட், கொஞ்சம் 'எலி' போல் இருக்கும் என்று மகன் உருவகப்படுத்தி வைத்திருந்திருப்பார் போல. :-)

இப்போ சின்னதாக ஒரு செதுக்கல் விளையாட்டு....

தேவையாக இருந்தவை -
முற்றிய குண்டு காரட்
கூரான மெல்லிய கத்தி
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் தனிமை
கொஞ்சம் பொறுமை

காரட்டின் மொத்தத்தைப் பொறுத்து நீளத்தைக் கணித்துக் கொண்டு அடிப் பகுதியியிலிருந்து ஒரு துண்டு வெட்டிக் கொண்டேன்.

பிறகு கண்ணை மூடி யானைப் பொம்மை ஒன்றின் உருவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து செதுக்க ஆரம்பித்தேன். என் தனிமைக்கு எப்போழுதும் மதியம் 3 மணியோடு விடுமுறை. நேரம் மூன்றைச் சமீபிக்க, செதுக்கியது போதும் என்று இலைகளைப் பரப்பி விளையாடத் தோன்றிற்று. எப்போதாவது உதவும் என்று புகைப்படமும் எடுத்து வைத்தாயிற்று. பிறகு!! ட்ரிக்ஸியும் ட்ரேஸியுமாக யானையையும் மிச்சம் மீதியையும் உண்டு பசியாறினர். :-)

5
Average: 4.8 (6 votes)

Comments

கோயில் யானை வருகுது..இமா ஓடி வாருங்க!! :) இங்க இல்லை, ஃபேஸ்புக்ல வீடியோ லிங்க் குடுத்திருக்கேன், அந்தப் பாட்டா பாருங்க!

யானை வடிவா இருக்கு!! குட்டி குஷ்பு???!! ஓ...மை...கடவுளே! ஐ யம் ஸ்பீச்லெஸ்!!

அன்புடன்,
மகி

நான் என் தம்பி, தங்கை மூவருமே விவரம் தெரியும் வரை டொன்டங் யானை என்று தான் சொல்லுவோம். ஆனாலும் அதென்ன கோல்தானை ?
குட்டிக் குஷ்பு // ஹையோ நாங்க பார்க்காம போய்ட்டமே !!
குண்டு கேரட் யானை ரொம்ப அழகா இருக்கு!!

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ம்ம்ம்ம் காரட் ல இவளோ செதுக்க தெரிஞ்சா நீங்க ரெம்ப பெரிய கெட்டிக்காரிதான்.கதையும் அழகு.யானை ரெம்ப பாசமான அனிமல்.எப்பவுமே குடும்பத்தை கணவனை பிள்ளைகளை பிரியாது.இறந்தா கூட வருச கணக்கா அஞ்சலி செலுத்தி அழும்,அசைவம் சாப்பிடாது, இப்டியெல்லாம் படிச்ச்தில எனக்கு யானை ரெம்ம்ம்ம்ம்ம்ம உசிர்.வீட்ல சிலவ்ர் ,கிறிஸ்டல் ,மரம் எண்டு ஒரு 20 யானை இருக்கு.உங்கட காரட் யானை வாடிப்போயிடும் எண்டு கவலை.தண்ணீக்குள்ள வையுங்கோ 4 நாள் கூட இருக்கும்

உங்கள் சிற்பம் அழகாக உள்ளது அந்த யானை கேரட் தான சரியா

2 நாட்கள் முன்னால்தான் உறுப்பினர் ஆகி இருக்கிறீங்க போல இருக்கே! :-) அறுசுவைக்கு நல்வரவு. _()_ உங்க கமண்ட் பார்த்தது ரொம்ப சந்தோஷம் செந்தில். தொடர்ந்து எல்லோர் போஸ்ட்களையும் படிச்சு கமண்ட் போடுவீங்க இல்ல!

சிற்பமா! :-) சும்மா விளையாடி இருக்கிறேன். ஆமாம், கா.. ;) கேரட். முதல்ல கரட் என்று தட்டினேன். பிறகு யோசிச்சு... ஆனா யோசிக்காமக கா போட்டுட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

:-) பார்த்தேன். அது சூப்பர் ஸ்டைலி யானையா இருக்கு. :-) இப்போ... 'அசைந்து அசைந்து வருகு, ஆனந்தமாய் வாருங்கள்,' என்கிற மாதிரி வரும் என்று மெல்லிசா ஞாபகம் வருது.

அந்த லிங்கை எங்கயாவது சேவ் பண்ணி வைக்கப் போறேன். வருங்காலத்தில் உதவும். :D

ம்... இட்லி மட்டும்தான் அப்பிடி இருக்கணுமா என்ன! ;D //ஐ யம் ஸ்பீச்லெஸ்!!// ஃபோட்டோவைத் தேடப் போறேன். கிடைச்சதும் காட்டுறேன். ;D

‍- இமா க்றிஸ்

அது என்ன தலைப்பு!! ;)

நேரம் கிடைக்கும் போதெல்லாம் யூட்யூபில் யானை வீடியோதான் பார்க்கிறேன். நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் சுரேஜினி.

என்னட்ட இருந்த எல்லா யானைகளும் வரிசையா நினைவுக்கு வருது. :-)

‍- இமா க்றிஸ்

//ஹையோ நாங்க பார்க்காம போய்ட்டமே !!// காட்டுறேன். :-)

‍- இமா க்றிஸ்

இமா ரொம்ப அழகாக இருக்கு . . . . இதுக்கு ரொம்பவே பொறுமை அவசியம் . எனக்கும் இந்த ஆசை வந்திருக்கு , இன்றைக்கே இல்ல இல்ல இப்பவே முயன்று பார்க்குறன்.

இமா,

///கொஞ்சம் நிதானம், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் பொறுமை////இந்தப் பொருட்கள் எந்த‌ கடையில் கிடைக்கிறது இமா. அங்கே தானே சிக்கல். இமா போல்பொறுமை எனக்கு கிடையாதுப்பா. அழகு யாணையை கொஞ்சலாம் போல‌ அழகு இமா. பாராட்டுக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஆமம் இம்மா 2 நாட்க்கள் தன் அகுது நன்றி :)...... ஆனால் இங்கு உள்ள பதிவுகளை 1 மாதம‌ படிச்சிட்டு வரேன்..... கண்டிப்பா எல்லோர் போஸ்ட்களுக்கும் படிச்சு கமண்ட் போடுற

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. நீங்க சொன்னப் பாடலின் யூடியூப் வீடியோவில் யானை பாட்டுக்கு முந்தினப் பாடல் முடியும் போதே எங்க வீட்டு குட்டி யா யா என்பாள். பெரியவளுக்கு யானைப் பாடலில் டிங் டாங் டிங் என்று ஆடும் ஸ்டெப் ரொம்பப் பிடிக்கும் :)
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். இமாவின் கைவண்ணத்தில் காரட் யானை அழகு. \\குட்டி குஷ்பு// :)) குஷ்பு இதப் படிச்சா ரொம்ப சந்தோஷப் படுவாங்க :))))

அன்பு இமா,

அழகாக ஒரு யானை, யானை தொடர்பாக சில மலரும் நினைவுகள், நினைவுகளுடன் ஒரு பதிவு - எல்லாம் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

:-) யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வந்தேன். ;)))

நீங்க திரும்ப வர ஆரம்பிச்சிக்கிறீங்க என்பதை முன்பே அவதானித்தேன் சீதா. எனக்கு வேறு இடங்களிலும் கமண்ட் போட்டிருந்தீங்க. மிக்க நன்றி. நேரம் இடம் கொடுத்தால் தொடர்ந்து வாங்க.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

இது முழுமையாகச் செய்து முடிக்காத யானை சர்மி. யாராவது விருந்தினர் வருகைக்காகவென்றால் நேர்த்தியாகச் செய்திருப்பேன். //பொறுமை அவசியம் // மனமுண்டானால் இடமுண்டு. :-) ரசனை இருந்தால் மனம் வரும்.

சுலபமான குறிப்புகள் சிலது எடுத்துக் கொடுக்கிறேன், ட்ரை பண்ணுறீங்களா!

செண்பகாவின் காரட் கார்விங் இலை - http://www.arusuvai.com/tamil/node/29369
செண்பகாவின் வண்ணத்துப் பூச்சி - http://www.arusuvai.com/tamil/node/15148

வாஸ் செய்வது யானையை விடச் சுலபம். பிடித்தால் முயற்சி செய்து பாருங்க. -http://www.arusuvai.com/tamil/node/29685

‍- இமா க்றிஸ்

//குஷ்பு இதப் படிச்சா ரொம்ப சந்தோஷப் படுவாங்க// ;)) என்னை என்கரேஜ் பண்ணப் பார்த்த குஷ்பூஸ் நிறையப் பேர். :-) அழகா இருக்கிறதா சொல்லி ஆசை காட்டினாங்க. ;D அசைவம் விட்டதும் பழையபடி வெய்ட் இறங்கிட்டு. இனி அப்படி ஆகப்படாது என்பதில் கவனமாக இருக்கிறேன். குண்டா இருந்தப்ப பெடிக்யூர் பெரும்பாடு. வீஸிங் அதிகமா இருந்துது. எந்த ஒரு சாரி ப்ளவ்ஸும் அளவு இல்லாமல் போக வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன் ஐந்தாறு கலர்களில் புதிதாகத் தைத்து எடுத்தேன். ;( குஷ்பு வேணாம். இமாவாவே இருக்கலாம் என்று முடிவு செய்தாச்சு.

சின்னவங்களுக்கு யானை பிடிக்கும் இல்ல! இன்னொரு யானை போஸ்ட் போடலாமா என்று யோசிக்கிறேன். :-)

//வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.// ம்... எதனால் அப்படிச் சொல்லியிருப்பாங்க என்று யோசிக்கிறேன். தாவீது கதை போல இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஏதாவது கதை இருக்குமோ!

‍- இமா க்றிஸ்

:-) //யாணையை கொஞ்சலாம் போல‌ // :-) ஒரு தடவை கொஞ்சி இருக்கிறேன். அது கேரள யானைகள் மிரண்டு செய்யும் அட்டகாசங்கள் யூட்யூபில் பார்க்கும் முன்பு. இனியானால் மாட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

காரட் யானை அழகா வடிவா இருக்கே. யானையை பார்க்க பார்க்க ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல சண்டே ஆனா காலைல யானை வரும். சின்ன பசங்களாம் அது மேல உட்கார வச்சு காசு வாங்கும். இப்பவும் கோவில்ல பார்த்தா ஆசையா இருக்கும். ஆனா அதுகிட்ட போய் காசு கொடுத்துட்டு நம்ம தலைல தட்டுமே அதை நினைச்சாலே பயம் வந்திடும் இப்பவும் :).

Be simple be sample

இரண்டு பதிவு

Be simple be sample

Imma amma carrot yanai romba azhaka irukku. enakku yanai ya pakkathulaley parka koduthu vatchurukku.veetkku pakkathulayey than Kovil yanai irukkum idam. Sry eng typing.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஆஹா! பக்கதுலயே இருக்கா? லக்கி சுபி நீங்க.

‍- இமா க்றிஸ்

//தலைல தட்டுமே அதை நினைச்சாலே பயம் வந்திடும் இப்பவும். // ;)) சின்னப் பசங்களை யானையின் கீழ் போய் வர வைப்பாங்க இல்ல! கேள்விப்பட்டிருக்கேன்.

‍- இமா க்றிஸ்

உங்கள் யானை சிலையும்,அதை விட கொஞ்சம் தனிமை,கொஞ்சம் பொறுமை,சூப்பர் இமா அம்மா

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

:-) மிக்க நன்றி பாரதி. புதியவர்கள் கருத்துச் சொன்னால் கொஞ்சம் அதிகமாக உற்சாகம் வருகிறது. :-)

‍- இமா க்றிஸ்