எந்த பால் நல்லது

Toned milk (3% fat)
Doubled toned milk (1.5% fat)
Standardized Milk (4.5% fat)
Full Cream Milk (6% fat)

இதில் நமக்கு தினசரி எடுக்க எந்த மில்க் பயன்படுத்தலாம்.
இல்ல எல்லமே பயன்படுத்தலாமா ப்ளிஷ் சொல்லுங்க.
இது 1litre fat % கொடுத்துகிறேன்

நீங்கள் கொடுத்திருக்கும் கேள்வியில், பாலில் உள்ள கொழுப்பின் அளவு மட்டும் மாறியிருக்கிறது. சில தயாரிப்புகள் (பசு தன் கன்றுக்கென்று தயாரித்தை மனிதர் மீண்டும் எமக்கேற்ப மாற்றித் தயாரிக்கிறோம்.) :-) கால்சியம் அளவும் மாறி இருக்கும்.

//நமக்கு தினசரி எடுக்க எந்த மில்க் பயன்படுத்தலாம்.// காப்பி தேநீருக்கா? பாலாகவா? அல்லது தயிர் போடுவதற்கா? சிறுவருக்கா?

'நமக்கு' என்று பொதுவாக ஒன்றைக் குறிப்பிட இயலாது. அவரவர் வயது, கொலஸ்ட்ரால் லெவல் பார்த்து அதற்கேற்ப எடுப்பது நல்லது. அதற்காகத் தான் இப்படி விதம் விதமான அளவுகள் விற்பது.

//எல்லமே பயன்படுத்தலாமா// எந்தப் பிரச்சினையும் இல்லாத ஆரோக்கியமான, ஆக்டிவான ஆட்கள் எதைப் பயன்படுத்தினாலும் ஒன்றுதான். அளவோடு எடுப்பது நல்லது.

//இது 1litre fat % கொடுத்துகிறேன்// மில்லிலீட்டரில் கொடுத்தாலும், கப் அளவில் சொன்னாலும், % மாறாது. லீட்டருக்கு உள்ளதே தான் எப்பொழுதும் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா மேடம்.நான் அங்கே ஆவின் பால் அளவை கொடுத்து உள்ளேன்.என் பையன்,கணவர்,மற்றும் நான் எங்களுக்குகாக தான் கேட்கிறேன். தேநீர்காகவும்,பையனுக்கு பால் கொடுக்கிறகாகவும் கேக்கிறேன்.பையன் வயது 2 1/2 ஆகிறது.

குழந்தை பிறந்த பிறகு நான் குண்டாகதான் இருக்கிறேன் மேடம்.

அப்போ எந்த பாலும் பயன்படுத்தலாம் மேடம்.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

Please give all types of milk. Because child will live all situation.

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்