உடல் பருமன்

ஹலோ தோழிகளே

எனக்கு 2 1/2 வயதில் குழந்தை உள்ளது. நார்மல் டெலிவரி தான். நான் வயிறு கட்டவில்லை. குழந்தை பிறந்த‌ சில‌ மாதங்களுக்கு பிறகு உடல் எடை குறைந்தேன். இதில் என்ன‌ பிரச்சனை என்றால் என் உடல் தலையில் இருந்து வயிறு வரை மெலிந்தும், வயிறில் இருந்து கால் வரை குண்டாகவும் உள்ளது. தொடையும் பருமனாக‌ உள்ளது. எந்த‌ உடை போட்டாலும் வயிறு மட்டும் தனியாக‌ தெரிகிறது. நான் வேலைக்கு செல்லும் பெண் எந்த‌ உடை போட்டாலும் அசிங்கமாக‌ தெரிகிறது. இதற்க்காகவே தினமும் வேலைக்கு நடந்து செல்கிறேன் காலையில் 30 நிமிடம் மாலையில் 30 நிமிடம். இருந்தாலும் குறையவில்லை 2 வருடங்களாக‌ நடக்கிறேன் பயனில்லை. டயட்டில் இருந்தால் உடல் மட்டும் குறைகிறது. நன்றாக‌ சாப்பிட்டால் வயிறும் இடுப்பும் மட்டும் எடை போடுகிறது. போட்டோவில் எல்லாம் கர்ப்பமாக‌ உள்ளது போல் உள்ளது. என் உடல் சீராக‌ இருக்க‌ என்ன‌ செய்வது. உதவுஙள் தோழிகளே

உங்களுக்கு யாராவது பதில் சொல்லியிருப்பாங்க என்று நினைச்சேன். இமாதான் ஆரம்பிச்சு வைக்கணும் என்று இருந்திருக்கு :-)

//வயிறு கட்டவில்லை.// அதற்கும் உங்கள் பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கும் என்று நினைக்கவில்லை.

//என் உடல் தலையில் இருந்து வயிறு வரை மெலிந்தும், வயிறில் இருந்து கால் வரை குண்டாகவும் உள்ளது.// உங்கள் உறவில் யாருக்காவது இப்படியான உடல்வாகு இருந்திருக்கிறதா?
நீங்கள் சொல்வது போல இரண்டு பேரைப் பார்த்திருக்கிறேன். குழந்தை இல்லாது இருந்த போதும் அப்படித்தான் இருந்தார்கள். (ஒருவர் மெலிந்து இருந்த போது அப்படி இருக்கவில்லை.)

//இதற்காகவே தினமும் வேலைக்கு நடந்து செல்கிறேன் காலையில் 30 நிமிடம் மாலையில் 30 நிமிடம்.// அது போதாது. எந்தத் தசைகளுக்கு பயிற்சி தேவையோ அவற்றுக்குப் பயிற்சி கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.

//2 வருடங்களாக‌ நடக்கிறேன் பயனில்லை.// உண்மையில் நடை... மனிதனின் அன்றாட இயக்கங்களுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நாம் முன்னேற்றம் என்கிற பேரில் நிறையவே முடங்கிப் போய் விட்டோம். அதனால் அதைப் பெரிய உடற்பயிற்சியாக நினைக்கிறோம்.

//டயட்டில் இருந்தால் உடல் மட்டும் குறைகிறது.// டயட்டில் இருக்கும் போது நீங்கள் என்ன விதமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தீர்கள்? இல்லாத பொழுது என்ன மாதிரி உணவு எடுப்பீர்கள்? சொன்னால் ஏதாவது அபிப்பிராயம் சொல்லலாம்.

//நன்றாக‌ சாப்பிட்டால் வயிறும் இடுப்பும் மட்டும் எடை போடுகிறது.// :-) எப்பொழுதும் 'நன்றாகச்' சாப்பிடக் கூடாது. அளவுக்கு மட்டும் சாப்பிட வேண்டும். அளவு.... ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க எம் வயிறு நிறைய வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிறையும் இடம் கூட... மாப்பொருள் மாமிசம் தவிர்ந்தவற்றினால் நிறைந்தால் நல்லது.

//என் உடல் சீராக‌ இருக்க‌ என்ன‌ செய்வது.// 1. தொடர்ந்து சரியான உணவை அளவோடு மட்டும் உண்ண வேண்டும். 2. நடையை விடாமல் தொடருங்கள்.

இதற்கென்று பயிற்சிகள் நிச்சயம் இருக்கும். எனக்கு சொல்லத் தெரியவில்லை. அருகே ஜிம் இருக்குமா? அவர்களால் இதற்கு சரியான பயிற்சிகள் சொல்ல இயலும்.

//எந்த‌ உடை போட்டாலும் வயிறு மட்டும் தனியாக‌ தெரிகிறது.// தற்காலிகமாக... வயிறு & இடுப்புப் பகுதியில் பிடிக்காத உடைகளைத் தெரிந்து பயன்படுத்துங்கள். சேலை... தலைப்பை ப்ளீட் செய்யாமல் தொங்க விடலாம். ஹை ஹீல்ஸ் போடுவீங்களா? உங்க தோற்றத்தை அதுவும் கொஞ்சம் மாற்றிக் காட்டும். வயிற்றின் தோற்றத்தைச் சற்று இறுக்கமாகக் காட்டக் கூடிய உள்ளாடைகள் கிடைக்கும். கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்தலாம். வயிற்றின் சில இடங்களில் அழுத்தம் விழும் போது நீங்கள் சொன்ன தோற்றம் கிடைக்கும். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் புரியும். பிறகு சரியான அமைப்பிலான ஆடைகளைத் தெரிவது சிரமமாக இராது.

‍- இமா க்றிஸ்

Udal edai kuraika pattai, honey, hot water combination morning sapdalama.
Pattai sapiduradhunala conceive aguradhula problem varuma. Please help panunga over
Weighta iruken

தேன், பட்டை நல்ல காம்பினேஷன்.. நன்றாக குறையும்..சாப்பிடலாம்..எனக்கு குறைந்திருக்கிறது... எலுமிச்சை சாறு +உப்பு + சுடுநீர் நல்ல காம்பினேஷன்...

வெண்பூசணிக்காய் ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.. அதற்கும் எடை குறையும்.. வாக்கிங் நல்லா போங்க..

தினமும் காலை 10-15 கறிவேப்பிலை இலைகள் மென்று சாப்பிடலாம்.. முட்டைக்கோஸ், புடலங்காய், பப்பாளிக்காய் போன்ற நீர்க் காய்களை அடிக்கடி சமைத்து சாப்பிடவும்.. :-)

அவந்திகா

மேலும் சில பதிவுகள்