உறுப்பினர் பெயரை மாற்றுவது எப்படி

வணக்கம் இமா அம்மா.. முதலில் உங்களுக்கு நன்றிகள்.
உங்களால் தான் நான் தமிழில் தட்டச்சு செய்கிறேன்.. மிகவும் மகிழ்ச்சியாக‌ உள்ளது மற்றும் மிகவும் எளிமையாக‌ உள்ளது.

நான் என் பெயரை தமிழில் மாற்ற‌ விரும்புகிறேன். உதவி செய்யுங்கள்

உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன் தோழிகளே

நாங்கள் மாற்ற முடியாது பிரேமா. இப்போ நீங்கள் செய்திருப்பது போலவே தான் நானும் போட்டிருக்கிறேன். :-)

சுயவிபரத்தில் பெயரைத் தமிழில் தட்டலாம். அது உங்களையும் அட்மினையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது..

‍- இமா க்றிஸ்

அவந்திகா அவர்களது பக்கத்தில் பார்த்த‌ நினைவிருக்கிறது.அது தான் என் சந்தேகத்திற்கு காரணம்

- பிரேமா

நான் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே தமிழில் பெயர் கொடுத்தேன்.. அதனால் வந்திருக்கலாம்.. :-)

அவந்திகா

உறுப்பினராகும் போது (அப்போது எங்கோ அட்மின், 'ஆங்கிலத்தில் பெயர் கொடுத்தால் நல்லது. அறுசுவை ஆங்கிலத்திலும் வரும்.' என்று சொல்லியிருந்ததைப் படித்திருந்ததால்) ஆங்கிலப் பெயரில் உறுப்பினாராகினேன். அவந்திகா தமிழில் கொடுத்திருக்கிறாங்க. 123 என்று இலக்கத்தில் உறுப்பினரானவங்களும் இருக்கிறாங்க. :-)

‍- இமா க்றிஸ்

தகவல்களுக்கு நன்றி

- பிரேமா

அவந்திகா, உங்கள் மகனுக்கு என்ன‌ பெயர் வைத்திருக்கிறீர்கள் ?

நீங்கள் இருவரும் நலமா ?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்