கேட்காவிட்டாலும் தருவேன்

:-) "கேக்கு தா!" என்று யாரும் கேட்காவிட்டாலும் கேக் தருவேன். ;-)

எளிய இயந்திரங்கள் - இங்கு ஏழாம், எட்டாம் ஆண்டு மாணவர்களது விஞ்ஞான பாடத் தலைப்புகளில் ஒன்று. இலங்கையில் நான் கற்ற போதோ என் மகன் கற்ற போதோ இல்லாத விதமாக இருக்கிறது இங்குள்ள பாடத் திட்டம். இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப எல்லாமே மாற வேண்டி இருக்கிறது இல்லையா!

ஆனால் இந்தச் சில்லும் அச்சாணியும் மட்டும் என்றும் எங்கும் இருக்கும் என்று தோன்றுகிறது. தோற்றமும் தொழிற்பாடும் வேண்டுமானால் மாறலாம். சில்லுகள் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் இருந்திருக்கின்றன; மகாபாரத யுத்தத்தின் போதும் இருந்திருக்கின்றன; இன்றும் இருக்கின்றன. சுழலும் பூமி இருக்கும் வரை சில்லுகளும் சுழலும்.

விஞ்ஞான ஆசிரியரை நினைத்ததும் கேக்கிற்கு முதலில் நினைவு வந்தது சில்லும் அச்சாணியும்தான். :-) இவரது பிறந்தநாள் என்னுடையதற்கு முதல்நாள் வரும்.

இப்போ ஓய்வு பெற்று விட்டார் அவர். கலாநிதிப் பட்டம் பெற்றவர். முன்பு இங்குள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்திருக்கிறார். அவருக்குத் தெரியாத விடயங்களே கிடையாது. பலதும் கற்றவர்; உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். வயதின் காரணமாக விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்ட பின், சும்மா இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் பகுதி நேரம் வேலை பார்க்க நினைத்திருக்கிறார். சின்னவர்களோடு வேலை செய்யலாம் என்று தோன்றியிருக்கிறது.

அவரது வகுப்பு அத்தனை சுவாரசியமாக இருக்கும். ரசித்துக் கற்பிப்பார்; மாணவர்களும் ரசனையோடு கற்காமல் கற்பார்கள். தனியே விஞ்ஞானம் என்று மட்டுமில்லாமல் பாடத் தலைப்புடன் தொடர்பான பல விடயங்களையும் கதைகளாக எடுத்துச் சொல்லுவார். எப்படி அப்படி என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும். பாடத் திட்டம் எப்பொழுதுமே குறையில் இருந்ததில்லை. அந்ததக் காலத்திற்குள் முடித்திருப்பார். நிறைய விடயங்கள் அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். என்ன சந்தேகமானாலும் அவரிடம்தான் முதலில் கேட்கத் தோன்றும்.

இப்போ ஓய்வு பெற்றது கூட உண்மையில் ஓய்வு எடுப்பதற்காகவென்று இல்லை. :-) இன்றும் ஆசிரியர்கள் யாராவது சுகவீனமுற்றால் இவர் ரிலீவராக வருகிறார். இதைத் தவிர, Auckland Art Gallery இல் தொண்டு வேலையில் இணைந்திருக்கிறார். முதல் மூன்று மாதங்கள் அதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

இவர் போன்றவர்களோடு வேலை பார்த்த அனுபவம், எதிர்காலத்தைப் பற்றிச் சில திட்டங்களை என் மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஓய்வு + ரசிப்பு + மற்றவர்களுக்கு உபயோகம் = ஆரோக்கியமான மனம்! என் ஆசை நிறைவேறும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
~~~~~

ஒரு குட்டிக் கதை சொல்லிவிட்டு அதன் பின்பு கேக்கைப் பற்றிப் பார்க்கலாமா!

ஹாம்ஸ்டர் - வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கும் விலங்கு. அதை வாலில் பிடித்துத் தூக்கினால்... கண்கள் இரண்டும் பொத்தென்று கீழே விழுந்துவிடும். அந்த இடங்களில் இரண்டு குழிகள் மட்டும் இருக்கும். ;( ஆனால் ஒரு நல்ல விஷயம் - அந்தக் கண்களைப் பொறுக்கி மீண்டும் கட்குழியில் வைத்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும். ஆனால்... சிக்கல் என்னவென்றால்... இடது கண்ணை இடது குழியிலும் வலது கண்ணை வலது குழியிலும் சரியாக வைக்காவிட்டால் காரியம் கெட்டுவிடும். ;(

இந்தக் கதையை முதல் முதலாக கேட்க ஆரம்பிக்கும் போது சின்னதாக ஒரு சந்தேகம் வந்தது. இருந்தாலும் ஆசிரியர் முகத்தில் தெரிந்த தீவிரம்... தொடர்ந்து கேட்க வைத்தது. மாணவர்கள் எல்லோருமே வியப்பில் எல்லையில்... 'ஆ!!!' :-) ஹாம்ஸ்டரே வாயில் போகும். :-) கதை முடிந்த பின்னாலும் அவர்கள் அந்த நிலையிலிருந்து வெளியே வருவதாக இல்லை. மணி அடித்த போது ஆசிரியர் கேட்டார், "You all don't belive that story, do you!" சிலர், "ஆம்" என்றார்கள்; சிலர், "இல்லை" என்றார்கள்; சிலர் வௌவால் நிலையில் அரைக் கை உயர்த்தினார்கள். அடுத்த கேள்வி, "What does a hamster's tail look like? Does anyone know?" ;D உங்களுக்குத் தெரியும் இல்லையா! அதற்குத் தான் வாலே இல்லையே! :-) ஒவ்வொரு வருடமும் ஏழாம் ஆண்டுச் சிறார்களுக்கு இந்தக் கதையைச் சொல்லுவார். சின்னவர்களது உணர்ச்சிகள்... எப்படி இருந்தாலும் ரசிக்கலாம். :-)

[ட்ரேஸி:- என்னை ஹம்ஸ்டர் என்று நினைக்காதைங்க, வால் இருக்கிறது தெரியுதா! :-)
அப்போ படிக்கட்டுப் பகுதிக்கு பெய்ண்ட் அடித்துவிட்டுக் காபட் போட்டிருந்தோம். கொஞ்சம் தொட்டுவைக்க இருந்தது. எங்களுக்கு மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கும் குணம். :-) ஏறி மூக்கை மூக்கை ஆட்டி வாசனை பிடிக்கிறார்.]

~~~~~

சில்லும் அச்சாணியும் கேக்

கேக்கை மூடி நட்சத்திரங்கள் (ஸ்டார் நொஸில் இல - 27) வைத்தேன்.
சில்லும் அச்சாணியும் வரைந்தது, 'க்லிட்டர் ரைட்டிங் ஜெல்' கொண்டு.
பொருத்தமாக நீல நிறத்தில் மெழுகுவர்த்தி.

'மிக எளிமையாக இருக்கிறதே! வேறு ஏதாவது யோசித்துச் செய்திருக்கலாம்,' என்று உள்ளே சின்னதாக ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், இந்தக் கேக்கைப் பெற்றவர்தான் எல்லோரையும் விட கேக்கை அதிகம் ரசித்தவர். "I want my wife to see this. Am I allowed to take this home for our tea!" என்று கேட்டதும் மனது சட்டென்று இலகுவாகிற்று. அவரைத் தொடர்ந்து மீதி நட்புகளும் கேக்கை வீட்டிற்கு எடுத்துப் போகக் கேட்டார்கள்.

சின்னச் சின்னச் சந்தோஷங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது எம்மையறியாமல் எமக்கே பெரிய சந்தோஷங்களைக் கொடுத்துக் கொள்கிறோம் இல்லையா!

அந்த ஆசிரியரின் ஓய்வு எங்கள் பாடசாலைக்கு ஓர் பெரிய இழப்பு; எனக்கும் தான். ;(

5
Average: 5 (3 votes)

Comments

கேட்காவிட்டாலும் தருவேன்.

அழகான கேக். நிச்சயம் சுவையாகவும் இருக்கும்.

செபா.

அன்பு இமா,

இந்தப் பதிவில் விஞ்ஞான ஆசிரியரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதுதான் ஹைலைட்.

இப்படியெல்லாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு வேண்டிய மனப் பக்குவம் - கிடைத்தால் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

இந்தப் பதிவில் விஞ்ஞான ஆசிரியரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதுதான் ஹைலைட்.

இப்படியெல்லாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு வேண்டிய மனப் பக்குவம் - கிடைத்தால் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய்,
////கேக்கு தா என்று யாராவது கேட்காவிட்டாலும் கேக் தருவேன்/// ரசனையான‌ வாக்கியம். இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

எல்லாத்தையும் விட இமா பதிவிற்கு செபா முதல் பதிவிட்டதுதான் ஹைலைட். இங்கே சில்லுன்னு சொல்றீங்களே அது வீட்டு ஓடு உடைந்த பகுதிங்களா இமா. நாங்க சின்ன வயதில் அது வச்சு நொண்டி விளையாடுவோம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

;))))) ஹிக்... இப்ப இந்தத் தலைப்பைப் பார்த்து செபா உள்ளே வந்து ஏமாறப் போறாங்க பாருங்க. ;D

//இமா பதிவிற்கு செபா// ;) அவங்க இந்த வயதிலும் இத்தனை தட்டுறது எனக்கு பெருமை இல்லையா! :-)

செபா... ஜெயா சொல்லுறதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து இமாவின் எல்லாக் குறிப்புகளுக்கும் முதல் ஆளாகப் பதிவு கொடுக்கவும். ;D

‍- இமா க்றிஸ்

//நொண்டி// :-) நாங்க சில்லுக் கோடு அல்லது மாங்கொட்டை என்போம் ஜெயந்தி.

இங்கு சொல்லியிருக்கும் சில்லும் அச்சாணியும்... வண்டிச் சக்கரமும் அதன் அச்சும். (Simple machine - wheel and axle)

ஓடு என்றதும் சின்ன வயது விளையாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. :-) ஓட்டில் எழுத்துகள் பொறித்திருப்பார்களில்லையா! எழுத்து இருக்கும் உடந்த ஓட்டுத் துண்டை சிமெண்ட் தரையின் தேய்த்துவிட்டு கையில் வைத்தால் அச்சு மாதிரி (கண்ணாடிப் பிம்பம் தான் கிடைக்கும்.)பதியும். :-)

‍- இமா க்றிஸ்

//எல்லாத்தையும் விட இமா பதிவிற்கு செபா முதல் பதிவிட்டதுதான் ஹைலைட்//ஹையோ நான் பாராட்டும் விதமாகத்தானே எழுதினேன். இந்த வயதிலும் முதல் பதிவாக போட்டிருக்காங்களேன்னு. தாய்மொழியிலேயே என்னால் சரியாககருத்து பரிமாற்றம் செய்ய முடியலையா? சரியா போச்சுடா சாமி.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அதெல்லாம் நீங்க சரியாகத்தான் பரிமாறி இருக்கிறீங்க. இமா சும்மா செபாவை கலாய்க்கிறாங்க. கண்டுக்காதீங்க. :-)

‍- இமா க்றிஸ்

இந்த கேக் எனக்கே எனக்கு மட்டுமே... எல்லா இடத்திலும் முதலில் இந்த கேக்கை புக் பண்ணியது நானே....
என் தாத்தா இன்னமும் வேலை பார்க்கிறார்.. கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது.. ஆனால் என்னால் முடிந்த வரை நான் வேலை பார்ப்பேன் என பார்க்கிறார்..
சில்லு கேக்...:) :) :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Imma enakku cake venum

Oru problem any one help

என்ன பிரச்சினை? சொன்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

//என்னால் முடிந்த வரை நான் வேலை பார்ப்பேன்// இதுல ஒரு விஷயம் இருக்கு. ஓய்வு எடுக்கிற வயசில நாங்கள் வேலைக்குப் போக, அது ஒரு சின்ன ஆளுக்கு வேலை இல்லாமல் ஆக்கும் என்கிறது என் அபிப்பிராயம். :-) அந்த நேரம் காசுக் கஷ்டம் என்று இருந்தால் ஒழிய, நான் எங்கயாவது வொலண்டரி வேலைக்குத் தான் போவன். இல்லாட்டா செல்ஃப் எம்ப்ளொய்மண்ட்தான்.

‍- இமா க்றிஸ்

//ஓய்வு + ரசிப்பு + மற்றவர்களுக்கு உபயோகம் = ஆரோக்கியமான மனம்! என் ஆசை நிறைவேறும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.//

நல்ல‌ விடயம். உங்கள் ஆசை நிறைவேறட்டும் . மற்றவர்களுக்கு உதவுவதால் ஏற்படும் ம‌கிழ்ச்சியே உயர்ந்த‌ உண்மையான‌ மகிழ்ச்சி :))
எம‌க்கும் அது கிட்ட முயற்சிப்போம்.:))

:-) என்னை இப்போது இங்கே அழைத்து வந்தமைக்கு பெரியதொரு நன்றி நிகி. :-) இடுகையின் இறுதிப் பந்தியிலிருந்த எழுத்துப் பிழை கண்ணில் பட்டது. திருத்த முடிந்தது. :-)

//மற்றவர்களுக்கு உதவுவதால் ஏற்படும் ம‌கிழ்ச்சியே உயர்ந்த‌ உண்மையான‌ மகிழ்ச்சி// இதுவும் அவரவர் மனதைப் பொறுத்தது என்று தோன்றுகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் இது பற்றி நிறையப் பேசுவேன். எனக்குப் பிடித்திருக்கிறது.

மீண்டும் நிகிலாவுக்கு என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்