கர்ப்பகால‌ உணவு (ஆரம்ப‌ நிலை)

தோழிகளுக்கு வணக்கம்.. கர்ப்பகால‌ ஆரம்ப‌ நிலையில் இருக்கிற‌ கர்ப்பிணிகளுக்காக‌ இந்த‌ இழை..
அனுபவம் மிகுந்த‌ தோழிகள் ஆரம்ப‌ நிலை கர்ப்பிணிகளுக்கான‌ உணவுகள் குறித்து விளக்குங்கள்..
ஏனெனில் இப்போது நிறைய‌ தோழிகள் கருவுற்றிருக்கிறார்கள் (நானும் தான்).. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எந்த‌ மாதிரி உணவு, பழங்கள், பானங்கள் குடிக்கலாம் என்பன‌ போன்ற‌ குறிப்புகள் எங்களுக்கு பெரிதும் உதவும் என்ற‌ நம்பிக்கையில் இந்த‌ இழையை துவக்கியுள்ளேன்.

என்னென்ன‌ எடுத்துக்கொள்ள வேண்டும் என்னென்ன‌ தவிர்க்க‌ வேண்டும் ?

(எ.கா) மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்றவற்றை எந்த‌ மாதத்தில் இருந்து எடுத்துக்கொள்ள‌ வேண்டும்..?

குறிப்பு : இது போன்ற‌ இழை ஏற்கனவே அறுசுவையில் இருக்குமானால் அந்த‌ லிங்க்‍‍‍ _ ஐ இங்கு கொடுக்கலாம்.. ஒரு வேளை நான் தேவையில்லாமல் இழையை உருவாக்கியிருந்தால் அதற்கு மன்னிக்கவும்.. (இழைகளை சரியாக‌ தேட‌ முடியவில்லை அதனால் இந்த‌ முயற்சி)

நன்றி தோழீஸ் !!

கர்ப்பகாலத்தில் தினமும் ஒரு கீரை(மலச்சிக்கல் வராது) சாப்பிட வேண்டும்..தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடலாம்..ஜூஸாகவோ பழமாகவோ சாப்பிடலாம்..அத்திபழம் தினமும் சாப்பிடலாம்..டேட் சிரப் குடிக்கலாம்..முதல் மூன்று மாதங்களுக்கு பயணங்கள் கூடாது..சிக்கன் அவ்வளவாக சேர்க்க கூடாது..நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்..காய்கறிகள் நன்றாக சேர்க்க வேண்டும்..

மதர் ஹார்லிக்ஸ் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக உங்கள் டாக்டர் வேறு எதாவது பவுடர் கொடுத்தால் அதை சேர்த்து கொள்ளலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

http://www.arusuvai.com/tamil/node/1816 பழைய த்ரெட். ஆனால் உங்களுக்கு உதவும். செல்வியின் வலைப்பூவிலுள்ள தொடரும் உங்களுக்கு உதவக்கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி மா..

- பிரேமா

நன்றி அபி .. பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடலாமா ? அது இனிப்பு தானே அதனால் பீரியட்ஸ் வராதா ?

- பிரேமா

Hi pa detes sapdurathu nallathu athanala yentha problem kkidaiyathu... Pregnency time la varra niraya pblms dates sapduranala kuraikalam so nenga daily night 2 dates sethukonga ok va.. ... Take care

தினமும் 2, 3 சாப்பிடலாம்..

http://www.arusuvai.com/tamil/node/28142 செல்வி அம்மாவின் கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி தேன்மொழி .. இன்று முதல் தினமும் சாப்பிட‌ ஆரம்பிக்கிறேன்..

அபி, நீங்கள் கொடுத்த‌ இழையை படிக்க‌ ஆரம்பித்திருக்கிறேன்.. நன்றி ..

- பிரேமா

தோழிகளே!! கர்ப்ப ஆரம்ப‌ நிலையில் ஏகப்பட்ட‌ குழப்பங்கள்.. கர்ப்பம் உறுதி ஆனாலும் கூட நிம்மதியாக‌ இருக்க‌ முடியவில்லை..

ஒரு 15 நிமிடங்கள் முன்பு நடந்தது.. : இன்று காலை உணவு 8 மணிக்கே சாப்பிட்டு விட்டேன்.. என் தோழி இப்போது சில‌ சீடைகளை தந்தாள்.. நானும் பசிக்கிற‌ நிலையில் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டேன். (ஒரு 10 அல்லது 15 சீடைகள் இருக்கும்)

சாப்பிட்ட பிறகு தான் தெரிகிறது ஒவ்வொரு சீடையிலும் 2 அல்லது 3 எள்கள் இருந்தது.. நான் என் கர்ப்பம் பற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை அதனால் என் தோழியும் வழக்கமாக‌ தருவதை போல் ஸ்நாக்ஸ் தந்துவிட்டாள்..

எள் சாப்பிட‌ கூடாது என்று என் அம்மா சொன்னார்கள்.. தோழிகளே இதனால் என் கருவிற்கு ஏதேனும் பிரச்சனை வருமா ? மிகவும் பயமாக உள்ளது.. யாராவது உதவுங்களேன். !!

- பிரேமா

Bayapadathinga pa...na pregnant conform paninathum yellu podi vatchi dosai sapiten athuvum theriyamal nadanthathu ...nanum bayanthen appadithan ninaithen ondru rendu sapdrathala ondrum ahathu bayapadathinga bayam than enemy

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ரொம்ப‌ நன்றி ஹர்ஷா. பயம் தான் எதிரி என்று புரிகிறது ஆனால் சில‌ நேரங்களில் மனம் தடுமாறுகிறது..
உங்க‌ பதில் ரொம்ப‌ ஆறுதலா இருக்கு.. எதுக்கு இந்த‌ கேள்வி கேட்டேன்னா, எனக்கு அது சாப்பிட்டதில் இருந்து லேசாக‌ வயிறு வலிக்கிறது.. அதான் ரொம்ப‌ பயமா இருக்கு பா.. முதல் தடவை உருவானது ஒன்னும் ஆக‌ கூடாது..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்