எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...
ஷமி
//இப்பவும் அடிக்கடி யூரின் வந்துட்டே
இருக்கு பா இது எதனால என்று தெரியல வேர ஏதாவது ப்ராப்ளம்// எதற்கும் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
raji
Thanks raji
ஷமி
ஷமி,
நீங்க ஏன் பா பீரியட்ஸ் சீக்கிரம் வரனும்னு அது இதெல்லாம் சாப்பிடுறீங்க? ஒரு வேளை உங்களுக்கு கரு உருவாகி இருந்தால் நீங்க சாப்பிடுற பொருட்களால பாதிப்பு வராதா..நீங்க டாக்டர் சொன்ன மாத்திரை மட்டும் போடுங்க அதான் நல்லதுனு எனக்கு தோனுது பா.. அந்த மாத்திரை போட்டாலே போதும்.
- பிரேமா
hi prema
65 நாள் ஆகியும் Blood test எடுத்தும் பார்தேன் இல்லனு தெரிஞ்சதும் தான்
பா மாத்திரையும் அந்த பழம் லாம் சாப்டேன் பா.இதுக்கப்புரமும் கரு
தங்க வாய்ப்பு இருக்கா பா.
ஷமி
நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன். என் ப்ரண்ட்டுக்கு கூட 60 நாட்கள் மேல ஆகியும் குழந்தை கன்ஃபார்ம் ஆகல. ரொம்ப சாமியெல்லாம் வேண்டி நம்பிக்கையா இருந்து அப்புறம் 11 மாசத்துல நார்மல் டெலிவரில பிறந்தான்.. இப்ப துள்ளி குதிச்சு விளையாடுறத பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு பா. அதுக்கு தான் சொல்றேன்.. நம்பிக்கையோட இருங்க.
என்னதான் நான் சொன்னாலும் உங்க மனசுன்னு ஒன்னு இருக்கு. அதை கேட்க தான் உங்களுக்கு தோணும். எது செஞ்சாலும் யோசிச்சே செய்யுங்க பா.
- பிரேமா
hi prema
Prema. உங்க ப்ரென்டுக்கு எத்தினாவது நாள் கன்பார்ம் ஆச்சு சொல்லுங்களேன்
11 மாசத்துலியா டெலிவரி ஆச்சு.நீங்க சொன்னா மாதிரி எனக்கும் அதுபோல
நடந்தா அதவிட சந்தோஷம் எதுவும் இல்லப்பா.
ஷமி
நீங்க மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சு எத்தன நாள் ஆச்சு.
raji
ராஜி. மாத்திரை சாப்பிட்டு 5. நாள் ஆகுது பா. ஆனா இன்னும் பீரியட் வர்ல பா.
ஷமி
அப்போ நீங்க பிரேமா சொல்வதுபோல் ப்ரீயட் வர வேற எதும் ட்ரை பண்ணாதீர்கள். அவங்க சொல்றமாதிரி ஒருவேளை உங்களுக்கு குழந்தை உண்டாகி இருந்தால் என்ன பணணுவது. அதனால் நீங்க வெயிட் பண்ணி பாருங்கள்.
ஷமி
70 நாள்ல கன்ஃபார்ம் ஆச்சு.. இதுல என்ன ஒரு ஆச்சர்யம்னா, அவங்களுக்கு 11 மாசத்துல நார்மல் டெலிவரி ஆச்சு..
நீங்க நம்பிக்கையோட இருங்க பா. நீங்க மாத்திரை சாப்பிட்டு 5 நாட்கள் ஆகியும் பீரியட் வரல தானே.? கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பார்ப்போமே !! நிச்சயம் நல்ல செய்தியாக தான் இருக்கும்..
கடவுளை நல்லா வேண்டிக்கோங்க !!
- பிரேமா