மரணம்

மரணம் ஏன் ஏற்படுகிறது.கடவுள் என்பவர் உண்டா உலகில்

உண்மையை (கிண்டலாக) சொல்லணும்னா மரணம் இருந்தால்தான் அடுத்து உயிருக்கு பூமியில் இடம் உண்டு. கடவுளும் மின்சாரமும் ஒண்ணு . காண‌ முடியாது. கையை வச்சி பார்த்தால் உணர‌ முடியும்.
ஏனிந்த‌ தீடீர் கேள்வி?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

நான் என்னுடைய அம்மாவை இழந்து விட்டேன்.அதிலிருந்து மீள முடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

நீங்கள் முன்பு ஒரு தடவை பதிவு போட்டு இருந்த போதும் இந்த தனி இழை போட்ட போதும் பார்த்தேன். இரண்டு நிமிடம் பார்ப்பேன். ஆறுதல் சொல்ல தோன்றும்.
ஆனாலும் ஏதும் தவறாக சொல்லி விடுவேனோ என்று விலகி சென்று விடுவேன். ஏனெனில் தீ சுடும் என்பதுக்கும் சூடு வாங்கியவரது அனுபவத்துக்கும் வித்தியாசம் உண்டு.
முகநூலிலும் யாரோ ஒருவர் தனது நண்பியின் தாயார் இறந்ததை பகிர்ந்திருந்த போதும் உங்கள் ஞாபகம் வந்தது.

சகோதரி கவலையை குறைக்க முயலுங்கள்.வீட்டிலுள்ள மற்றையவர்களுடன் கூடியளவு நேரத்தை செலவழியுங்கள். பிறப்பு என்று ஒன்று உண்டெனில் இறப்பு என்பதும் உண்டு. காலம் தன் ஓட்டத்தில் உங்கள் கவலைகளை தீர்த்து வைக்கும் . தங்களது தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

இயன்ற வரை முயல்கிறேன்.இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் என் அம்மாவின் நினைவில் தவிக்கிறேன்.உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

மன்னிக்கவும். தங்களது சூழ்நிலை எனக்கு தெரியாது. அம்மா அப்பா மரணம் மட்டுமல்ல‌ யாரோட‌ மரண்மும் தவிர்க்க‌ முடியாது. என் அம்மாவிற்கு கேன்சர். மரண வலியில் உள்ளார். என்னால் உங்கள் வலியை உணர‌ முடிகிறது. பொதுவாக‌ இறக்கும் உயிருக்கு கல்யாண‌ வயதில் பிள்ளைங்க‌ இருந்தாலோ அ மிக‌ சிறிய‌ வயதில் இருந்தாலோ பரிதாபம் கொள்வேன்.மத்தபடி யாராக‌ இருந்தாலும் அவர் கடவுளிடம் செல்கிறார். அவ்வளவே. வேற‌ வழி இல்ல‌. அனுபவிச்சுதான் தீரணும். சிலது நம்ம‌ கையில் இல்ல‌.அம்மாவை தெய்வமாக‌ நினைத்து கொண்டு உங்களுக்குன்னு கடவுள் கொடுத்த‌ வேலையை செய்ய‌ பாருங்க‌.காலபோக்கில் உங்க‌ வேதனை குறையுமே தவிர‌ மறையாது.,இதுவே உண்மை.ஏத்துகோங்க‌.நீங்க‌ வருத்தமாக‌ இருந்தால் அம்மாவிற்கு பிடிக்குமான்னு யோசிங்க‌.எனக்கு கோர்வையாக‌ சொல்ல‌ வரல‌. எல்லாம் சரி ஆகும்,

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

நீங்கள் சொல்வது உண்மை.அதற்குரிய வயதில் இறந்தால் இவ்வளவு கஷ்டம் ஏற்படாது.cancer என் அம்மாவையும் கொன்றுவிட்டது.

நான் வேலை பார்ப்பதே கேன்சருக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பெரிய‌ ஆராய்ச்சி சாப்ட்நவேர் கம்பெனி, இங்கு முன்னாடி வேலையில் ஒரு வெப்பேஜில் / கணினி திரையில் தகவல் முறையாக‌ வருதா என்பதை மட்டுமே பார்ப்பேன். அம்மாக்கு இப்டி ஆனதும் என்னென்ன‌ தகவல் என்று சற்று விளக்கமாக‌ பார்க்கிறேன் இப்போதெல்லாம். உலக‌ அளவில் கேன்சர் வருவதற்கான காரணங்கள், நோய் குணமடைவருவதற்கான் சாத்தியகூறுகள் என‌ எவ்வளவோ ஆராய்ச்சி . அப்பப்பா. கூட‌ வேலை பார்ப்பவர்களின் பெற்றோர்களின் அனுபவங்கள். நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.சாதாரண‌ லோ கிரேடு கேன்சரில் மரணம். மிக‌ கொடுமையான‌ கேன்சரிலும் பிழைத்து வாழ்கிறார்கள். நம்விதி என்னவோ அதுதான் நடக்கும். கேன்சர் ஒரு பெரிய‌ மாய‌ உலகம். காரணம் 100 இருக்கலாம். வலி மிகுந்த‌ சிகிச்சையில் நோயாளிகளை விட‌ மனபக்குவம் அடைவது அவர்களை பார்க்கும் உறவினர்களே. நான் சிறு வயதிலிருந்தே எதுக்கும் ஆசைபடமாட்டேன்.டென்சனும் ஆக‌ மாட்டேன். நான் அழுததே அம்மா ரிப்போர்ட் பார்த்துதான். மரணத்தை விட‌ மரண‌ பயமும், மரண‌ வலியும் கொடுமை.ஒரு விதத்தில் அம்மா போனதே நல்லது.கேன்சரே வரக்கூடாது, வந்தால் 2 மாசமோ 2 வருடமோ. திரும்ப‌ வரும் வாய்ப்பும் அதிகம்., ஏன் இப்ப்டி வருதுன்னு நானும் மனதிற்குள் புலம்பிருக்கேன்., நீங்களாகவே மனம் ஆறுதல் அடைந்தால்தான் உண்டு. உங்களை சுற்றியுள்ள‌ உறவினருக்காவாது எழுந்து வாருங்க‌.

எனக்குமே அந்த‌ நிலைமை. ஒவ்வொரு நாள் விடிவதற்குள் போதும்போதும்னு ஆயிடுது,

உங்களுக்காக‌ கடவுளிடம் பிராத்திற்கிறேன்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஆம்.அம்மாவிற்கு 5 chemo மட்டும் தான் கொடுத்தார்கள்.ஆபரேசன் appointment வாங்கினேன்.ஆனால் அதற்குள் என் அம்மா பிரிந்து சென்றுவிட்டார்கள்.நான் எதிர்பாரத ஒன்று.நான் கூடவே இருந்து அம்மாவை கவனித்ததால் என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை.வாழ பிடிக்காமல் வாழ்கிறேன்

நீங்கள் இழையை ஆரம்பித்த‌ அன்று என் தாயார் காலமானார். http://www.arusuvai.com/tamil/node/28918 என் அம்மாவின் படம் இருக்கிறது, பிடித்தால் பாருங்கள். :)

பிரிவு வலிக்கிறதுதான், இல்லையெனவில்லை. எனக்கு ஒரு குழந்தை போல‌ அவர். ஆனால்... அவரது வலிகள் காணாமல் போயிற்று என்பதை... மிகுந்த‌ ஆறுதலாகவே உணர்கிறேன். என் குடும்பத்தார் & அம்மாவின் அனைத்து நட்புகளும் இதையே சொல்கிறார்கள். நேற்று இறுதியாக‌ கடைசி நொடி வரை அருகே இருந்து ஒர் ராணி மாதிரி அவரை வழிய‌னுப்பி வைத்தோம். சந்தோஷமாக‌ இருக்கிறது; பெருமையாக‌ இருக்கிறது. அம்மாவின் இடத்திலிருந்திருந்தால் அந்தச் சிரமத்தைப் பொறுமையோடு தாங்க‌ என்னால் முடிந்திருக்குமாவெனத் தெரியாது. கிட்டத்தட்ட‌... கான்சர் போல்தான் இதுவும். சிகிச்சைகளே சிரமமாக‌ இருந்தது. அவருக்குக் கொடுத்த‌ கெடு இரண்டு வாரங்கள் என்பது அவருக்கே தெரிந்திருக்க‌, எட்டு மாதங்களைப் பொறுமையாகக் கடத்தியிருக்கிறார்.

மரணம்... அமைதியான‌, வலிகளற்ற‌, நிரந்தர‌ ஓய்வு. அது... நல்லதே! இனியாவது நிம்மதியாக‌ இருக்கட்டும்.

என் குழந்தையையும் முன்பு தொலைத்திருகிறேன். தோன்றுவதெல்லாம்... அதற்கு அந்தச் சமயம் ஓய்வு தேவைப்பட்டிருக்கிறது. நல்லதுதான். அமைதியாக‌ உறங்கட்டும்.

//கடவுள் என்பவர் உண்டா உலகில்// இல்லை. உலகில் இல்லாமல் வேறு எங்கோ இருக்க வேண்டும். :‍) அறுசுவையில் ஆன்மீகம் பேசக் கூடாது தெரியுமா! ;D

விஞ்ஞான‌ ரீதியாகப் பார்த்தால்... மரணம் அவசியம் தான். என் பையன் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கேட்ட‌ சந்தேகம் நினைவுக்கு வருகிறது. ;) எல்லோரும் உயிரோடு இருந்தால் எப்படி சுவாசிப்போம்! காற்று வெளி முழுவதும் கார்பன்டைஆக்சைட் தானே இருக்கும்! ;D நடக்கக் கூட‌ இடம் இராது உலகில். ;)
~~~~~~~~~~~~

நாம் இயல்பாக‌, மகிழ்ச்சியாக‌ இருப்பதைத்தான் எம் தாய்மார் விரும்புவார்கள். அதற்காகவாவது இயல்புநிலைக்கு வர‌ முயற்சியுங்கள். மனம் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் வரை எடுக்கும் என்கிறார்கள். ஒவ்வொருவரைப் பொறுத்தது இது. சிலருக்கு மூன்று நாட்கள்; சிலருக்கு மூன்று வருடங்கள் கூட‌ ஆகலாம். விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள், பேசலாம். (கீழே மெய்ல் ஐடீ சில‌ நாட்களுக்கு இருக்கும்.) உங்களுக்கு என்னால் முடிந்த‌ ஆறுதல் கொடுப்பேன். உங்கள் தாயாரின் ஆன்ம‌ இளைப்பாற்றிக்காக‌ என் பிரார்த்தனைகள்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொல்வது உண்மை.அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் நான் இல்லை.மருத்துவர் 10 ஆண்டுகள் நான் உயிருக்கு உத்திரவாதம் என்று கூறினார்.ஆனால் சிகிச்சை தொடங்கிய 3 மாதங்களில் அம்மா பிரிந்துவிட்டார்.என்னால் தாங்க முடியவில்லை.என் தம்பி பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்.அவனை நினைத்து இன்னும் மனம் வலிக்கிறது

மேலும் சில பதிவுகள்