சிசேரியன்

சிசேரியன் பன்னிய தோழிகளின் கவனத்திற்காக என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு சிசேரியன் செய்து இரண்டு வருடம் முடிய போகிறது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழலில் எனக்கு ஒரு கருச்சிதைவு ஏற்பட்டது.
சிசேரியன் செய்த ஆறு மாதங்கள் முடிந்ததும் நான் எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை..
ஒரு வருடம் கழித்து என்னால் முடிந்த சின்ன சின்ன உடற்பயிற்சி செய்து என் வயிறை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தேன்.
தற்போது ஏற்பட்ட கருச்சிதைவு காரணமாக ஸ்கேன் பார்க்க சென்றேன். அப்பொழுது எனக்கு ஹெர்னியா(Umbilical hernia) இருக்கு என்று டாக்டர் கூறினார். இதற்கு சர்ஜரி அவசியம் என்றுகூறினார்.ஆனால் என் குழந்தையை நான் தான் பார்த்து கொள்கிறேன்..
இதனால் இன்னொரு குழந்தை பெற்று விட்டு சர்ஜரி பன்னலாமா? என்று மருத்துவரிடம் கேட்டேன்.
டாக்டர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்..
அதனால் தோழிகளே இதுபோன்ற ஒரு சூழல் வரவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
முடிந்த வரை சின்ன சின்ன உடற்பயிற்சி செய்துவயிற்று சதை குறைத்து விடுங்கள்..
கருத்தடை சாதனங்கள் உபயோக படுத்தி கொள்ளுங்கள். கருச்சிதைவு D and C பன்னாமல் பார்த்து கொள்ளுங்கள்..
1000த்தில் இரண்டு பெண்களுக்கு இப்படி நடக்கின்றது. இதை பற்றி தெரிந்து முன் எச்சரிக்கையுடன் இருங்கள்..

//கருச்சிதைவு D and C// இவற்றால் ஹேணியா வருவதில்லை.
//சின்ன சின்ன உடற்பயிற்சி செய்துவயிற்று சதை குறைத்து விடுங்கள்..// ஹேர்னியாவுக்கும் வயிற்றுச் சதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை கண்ணா. ஹேணியாவுக்கும் சிசேரியனுக்கும் கூட‌ தொடர்பு இல்லை. ஹேணியாவுக்கும் இங்கு பலரும் பேசும் 'சுகப் பிரசவத்துக்கும்' வேண்டுமானால் தொடர்பு இருக்கிறது எனலாம்.

ஹேணியா... குடல் தொடர்பானது ‍ குடல் இறக்கம் என்பார்கள் தமிழில். தொப்புள் பகுதியில் குடல் இறங்கியிருந்தால் அது Umbilical hernia.

//முன் எச்சரிக்கையுடன் இருங்கள்..// எப்படி முன்னெச்சரிக்கை எடுப்பது!!
//இதுபோன்ற ஒரு சூழல் வரவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்.// எப்படி!!

பெண்களுக்குக் கர்ப்ப‌ காலத்தில்தான் பெரும்பாலும் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறது. அப்போது தான் வயிற்றின் உள்ளே அழுத்தம் ஏற்படுகிறது. கர்ப்பம் ஆகாமலே ஆண்களுக்கும் இந்தப் பிரச்சினை வருகிறது. அவர்கள் எப்படி முன்னெச்சரிக்கையாக‌ இருப்பார்கள் என்பதை யோசிக்காமல் இருக்க‌ முடியவில்லை. ;) பாரம் சுமந்து / இழுத்து வேலை செய்தாலும் ஹேணியா வரலாம். குழந்தைகளுக்கும் Umbilical hernia இருப்பது உண்டு. இரட்டைக் குழந்தைகளைத் தாங்கியிருப்போர்க்கு வரலாம். பிரசவம் சிக்கலாக‌ இருப்பவர்களுக்கும் வரலாம். இவை எதுவும் இல்லாமலும் குடலிறக்கம் வரலாம்.

ஹேர்னியா வந்தால் கூட‌ பல‌ வருடங்கள் வரை சிலரால் சத்திர‌ சிகிச்சைக்குப் போகாமல் சமாளிக்க‌ முடிகிறது. அன்றாடக் காரியங்களைக் கவனிப்பதில் சிரமங்கள் வரும் போதுதான் பெரும்பாலானோர் சத்திரசிகிச்சைக்குப் போகிறார்கள்.

உங்களுக்குப் பிரச்சினை பெரிதாக‌ இல்லை. மருத்துவர் சொல்லியிராவிட்டால் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்க‌ நியாயம் இல்லை அல்லவா? அதிகம் யோசித்துக் குழம்ப‌ வேண்டாம். ஈஸியாக‌ எடுங்க‌. இது பாரதூரமான‌ பிரச்சினை இல்லை கண்ணா. பிரச்சினையாக‌ இருந்திருந்தால் சத்திர சிகிச்சைக்கு முன் கர்ப்பம் வேண்டாம் என்றிருப்பார்கள். நீங்கள் இப்போது பயந்திருக்கிறீர்கள். மற்றப்படி... யோசிக்க‌ எதுவும் இல்லை.

//இன்னொரு குழந்தை பெற்று விட்டு சர்ஜரி பன்னலாமா? என்று மருத்துவரிடம் கேட்டேன். டாக்டர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.// இதுவே சொல்கிறது உங்களுக்குப் பிரச்சினை பெரிதாக‌ இல்லையென்பதை. நீங்கள் யோசிக்காமல் சாதாரணமாக‌ இருப்பது போல‌ இருக்கலாம்.

நான் விடயம் தெரியாமல் சொல்லவில்லை. எனக்கு Umbilical hernia இருந்தது. டாக்டர் சொல்லாமலே எனக்குத் தெரிந்திருந்தது. எனக்கு மட்டுமல்ல‌ என்னை உற்றுப் பார்க்கும் யாருக்கும் தெரிகிற‌ அளவு பெரிதாக‌ இருந்தது. அப்படியிருந்தும் ஒன்பது வருடங்கள் கழித்து தான் சத்திரசிகிச்சைக்குப் போனேன். அது வரை அப்பப்போ சிரமமாக‌ இருந்தாலும் சமாளிக்க‌ முடிந்திருந்தது. வேலைக்கு நடந்து போவது சிரமமானதன் பின்புதான் சத்திர‌ சிகிச்சைக்குப் போனேன். திரும்ப‌ வரலாம் என்பதும் தெரியும்.

இது தவிர்க்க‌ முடிகிற‌ விடயம் என்று எனக்குத் தோன்றவில்லை. வந்தால் கவனமாக‌ இருக்கலாம்; சிரமம் குறைவாக‌ இருக்கும். சிரமமாக‌ இருந்தால் பின்போடாமல் சத்திரசிகிச்சைக்குப் போவது நல்லது.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிவு எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.. நான் உண்மையில் ரொம்ப பயந்து விட்டேன்.
9வருடம் கழித்துநீங்கள் சர்ஜரி பண்ணியிருக்கேங்க. எனக்கு இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றார் டாக்டர்.
எனக்கு இப்பொழுது ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. எனக்கு சர்ஜரி நடந்தால் என் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று கவலையாக இருந்தேன். அவள் நான் ஊட்டி விட்டால் மட்டும் தான் உண்ணுவாள். இப்பொழுது ஒரு தெளிவு வந்துள்ளது. இதனால் ஏதும் பிரச்சினை வருமோ என்று யோசித்து கொண்டு இருந்தேன்.
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.. நிறைய பிரச்சினைகளை நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள்.
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு என் நன்றிகள்..
எனக்கு இவை அனைத்தும் விளக்கம் இல்லை. எனக்கு உதவி தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.

//எனக்கு இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றார் டாக்டர்.// நீங்களாக‌ உணரும் நிலைக்கு வராத‌ வரைக்கும் பயம் வேண்டாம்.

//எனக்கு சர்ஜரி நடந்தால் என் குழந்தையை யார் பார்ப்பார்கள்// டாக்டர் இன்னொரு குழந்தை கிடைத்த‌ பின் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். பிறகு என்ன‌?

//ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.. நிறைய பிரச்சினைகளை நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள்.// ;)))))) உலகத்தில் பிரச்சினை இல்லாத‌ மனிதர் யார் இருக்கிறார்கள்! வசதிகள் குறைவாக‌ இருந்த‌ காலம் அது. ஆனால் நான் எப்பொழுதும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுப் பயந்ததில்லை. மருத்துவர்களை நம்பினேன். நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.

உங்களுக்கு ஆரோக்கியம் பற்றி என்ன‌ சந்தேகம் வந்தாலும் நீங்களாக‌ எதையும் ஊகிக்காமல், மற்றவர்களிடம் கேட்காமல் ஒழுங்காக‌ சரியான‌ மருத்துவரிடம் மட்டும் அபிப்பிராயம் கேளுங்கள். உற்றார், உறவினர் இனபந்துக்களிடம் ஒரு ஆறுதலுக்காகப் பரிமாறிக் கொள்ளும் விடயங்கள், பெரும்பாலும் நினைத்ததற்கு மாறாக‌ கவலையையே உண்டு பண்ணும்.

‍- இமா க்றிஸ்

உற்றார், உறவினர் இனபந்துக்களிடம் ஒரு ஆறுதலுக்காகப் பரிமாறிக் கொள்ளும் விடயங்கள், பெரும்பாலும் நினைத்ததற்கு மாறாக‌ கவலையையே உண்டு பண்ணும்.// மிகவும் சரியாக சொன்னீர்கள். நான் யாரிடமும் இதை பற்றி கூறவில்லை.
எனக்கும் என் கணவருக்கும் மட்டும் தான் தெரியும்..
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..

மேலும் சில பதிவுகள்