பேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை

நாங்கள் புதிதாகத் துவங்க இருக்கும் பேன்ஸி மற்றும் கவரிங் நகை கடைக்கு எங்கு மலிவான, மொத்த விற்பனையில் பொருள்கள் கிடைக்கும். தெரிந்தால் கூரவும் தோழிகளே

நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க??அதற்கேற்றது போல் சொல்லதான்.

I Love my baby Livyalakshana

நான் என் மனைவிக்கு துணிக்கடை ஒன்று உருவாக்கி தரலாம் என முடிவு செய்துள்ளேன். ஆனால் புதிய மற்றும் நல்ல பெயர்கள் கிடைக்க வில்லை எனவே நீங்கள்தான் உதவ வேண்டும். நன்றி....

Ungaluku marraige a agala apparam eppadi unga wife ku thunikadai vachi tharuvinga.theliva sollunga.ungaluku wife a vara poravangaluku vachi thara poringala appadina unga familyoda kalanthu pesi mudivu pannunga.

This month 30th marriage sister

நான் ஒரு பெயர் சொல்கிறேன் நல்லா இருக்கானு சொல்லுங்கள் ....
STYLISH WOMENS TEXTILES

கலந்து பேசிட்டோம் .... அவங்கதான் நல்ல பெயர் வைக்கணும் என்று கூறினார்கள். அதான் நாணும் நல்ல பெயர் தேடுகிறேன் கிடைக்கவில்லை.....

நீங்கள் உறுப்பினாகியே 20 மணி நேரம்தான் ஆகி இருக்கிறது. அதற்குள் கேள்வியை வைத்துவிட்டுப் பதில் கிடைக்கவில்லை என்று வருந்தக் கூடாது முரளி. :‍) பலருக்கு இரவாக‌ இருக்கும் சமயம் கேள்வியை வைத்தால் பதில் தாமதமாகத் தான் கிடைக்கும். நான் இப்போதுதான் கேள்வியையே பார்க்கிறேன்.

//STYLISH WOMENS TEXTILES// மிகவும் நன்றாக‌ இருக்கிறதே! WOMEN பன்மைச் சொல். அதன் பின்னால் S வருவதாக‌ இருந்தால், 'பெண்களுக்கான‌' என்னும் அர்த்தத்தில்... WOMEN'S என்றிருந்தால் திருத்தமாக‌ இருக்கும்.

உங்கள் மனைவியின் பெயரைக் கொண்டும் வியாபாரத்திற்குப் பெயர் சூட்டலாம். பொதுவான‌ பெயராக‌ அல்லாமல் குடும்பத்திற்குச் சற்று நெருக்கமான‌ பெயராக‌ இருக்கும்.

உங்கள் மனைவியாகப் போகிறவர் அதிஷ்டசாலி. உங்களிருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

பெயர் குறித்த ஆலோசனைக் கொடுப்பதில் பலருக்கு தயக்கம் இருக்கலாம். இதற்கு முன்பு அறுசுவையில் நிறைய பேர் குழந்தைக்கு பெயர் கேட்பார்கள். இந்த எழுத்தில் தொடங்க வேண்டும், இந்த எழுத்தில் முடிய வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். அதை பார்த்து பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்குவார்கள். கடைசியில் கேள்வி கேட்டவர், யார் சொன்னதையும் எடுத்துக் கொள்ளாமல் எங்கள் பாட்டி சொன்ன பெயர், அம்மா சொன்ன பெயர், ஜோசியர் சொன்ன பெயர் என்று முற்றிலும் வேறான ஒரு பெயரை முடிவு செய்வார்கள். :-) இது பலமுறை நடந்துள்ளது. நீதி என்னவென்றால், மூன்றாவது மனிதர்களின் ஆலோசனைகளை கேட்பதைவிட குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பெயர் வையுங்கள். அதுதான் கடைசியில் நடக்கவும் செய்யும். :-)

நீங்கள் கேட்டதற்காக, என்னுடைய பங்கிற்கு சில ஆலோசனைகள். :-)

துணிக்கடையின் பெயர் மூன்று வார்த்தைகளில் வருமாறு கொடுத்தல் அவ்வளவு சிறந்தது அல்ல. நீங்கள் குறிப்பிட்ட stylish women's textile என்ற பெயரை உச்சரிப்பதில் பலருக்கும் சிரமம் இருக்கலாம். பொதுவாக கடைகளின் பெயர் இரண்டு வார்த்தைகளில் இருந்தால்தான் ஒருவர் மற்றவரிடம் சொல்லும்போது எளிதாக பெயரைக் குறிப்பிட முடியும். அது stylish textiles or women's textile என்பது போல் இரண்டு வார்த்தைகளில் இருந்தால் எளிமையாய் இருக்கும். கடை பாப்புலர் ஆனால் முதல் வார்த்தையை மட்டும் சொல்லிதான் அதிக மக்கள் குறிப்பிடுவார்கள். ஆகவே முதல் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

அடுத்த விசயம், women என்று சொல்லும்போது உங்களுடைய கஸ்டமர் வட்டத்தை நீங்கள் சுருக்குகின்றீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய டார்கெட் வெறும் women மட்டுமா என்பது தெரியவில்லை. பின்னர் குழந்தைகள், ஆண்களுக்கான ஆடைகளை உள்ளே கொண்டு வரும்போது இந்த பெயர் இடைஞ்சலாக இருக்கலாம். அதையும் முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்.

நேரடியாக பெயருக்கான ஆலோசனைகளை கொடுக்கவில்லையென்றாலும் எப்படி பெயர் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு நான் அறிந்த, பயன்படுத்தும் வழிமுறையை கூறுகின்றேன். இரண்டு வார்த்தை பெயர் என்றால் உங்களுக்கு பிடித்தமான முதல் வார்த்தைகளை ஒரு பட்டியல் இடுங்கள். மனதில் வைத்து சொல்லி பார்க்காமல், பேப்பர்ல் எழுதுங்கள். அல்லது கம்ப்யூட்டரில். உதாரணமாக, உங்களுக்கு பிடித்தமான பெயர்கள், குடும்பத்தினர் பெயர், அல்லது பொதுவான நதியா, ரம்பா, முருகன், ஆண்டவர், ப்யூட்டி, கிளியோபாட்ரா இப்படிப்பட்ட பெயர்கள், நீங்கள் பாண்டிச்சேரி என்பதால் ப்ரெஞ்ச் வார்த்தைகள்கூட பயன்படுத்தலாம். அதை ஒரு லிஸ்ட் எடுங்கள்.

அடுத்து இரண்டாம் வார்த்தைக்கு ஒரு லிஸ்ட் எடுங்கள். இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றுடன் மற்றொன்றை பொருத்திப் பாருங்கள். உங்களுக்கு பிடித்தமானதாக வருகின்ற காம்பினேசனை லிஸ்ட் எடுங்கள். பின்னர் அதில் இருந்து ஒன்றை எல்லாருடைய விருப்பத்தையும் கேட்டோ அல்லது சீட்டு குலுக்கிப் போட்டோ தேர்ந்தெடுங்கள்.

என்னுடைய சாம்பிள் லிஸ்ட்

வார்த்தை ஒன்று
-------------------
Color (any colors like Pink, Rose, Blue.. etc)
God's name (if you wish)
Human name (your choice)
Nature/season/direction (Breeze, summer, Season, Windy, Greeny.. )
Fruits name (Apple, Orange, Kiwi.. )
Character's name (Cinderella, Betty, Maharani, Queen's,Victoria, Jansi.. )
Birds name (Peacock, Nightingale, Flamingo.. )
Flowers Name(Daisy, Poppy, Rose, Lilly.. )
Crystal
Classic
Modern
Classy
Bloom
Pretty
Glamour
Luxe
Orchid
Elandra
Paris

வார்த்தை இரண்டு
-----------------------

Shop
Closet
Boutique
Park
Trends
Designs
Textile(s)
Style(s)
Dress
Centre
Fashion(s)
Corner
Threads
World
Universe
Point
Stop
Beauty
Store
Avenue
Factory
Mall
Clothing

இது ஒரு சாம்பிள்.. தேர்வு உங்கள் விருப்பம். :-) உங்களுக்கு எங்களது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Neenga sonna name STYLISH WOMENS TEXTILES super a iruku.unga marriage ku advance Congrats bro.

நன்றி அம்மா.

மேலும் சில பதிவுகள்