ரோஸ்மில்க்

நான் சமீபமாக‌ கடையில் ரோஸ்மில்க் மிக்ஸ் வாங்கினேன். பாலை நன்கு காய்ச்சி ஆற‌ வைத்து அதில் தேவையான‌ அளவு அந்த‌ பவுடரை கலந்து அத்துடன் சீனியையும் சேர்த்தேன். ப்ரிட்ஜில் வைத்தேன் ஒரு மாதிரி ஆகிவிட்டது. பால் திரிந்து போன‌ மாதிரி.. மேல் பகுதியில் சிறிய‌ துகள்கள் மாதிரி ஆகிவிட்டது..
கடையில் மிக்ஸியில் அடிப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை..

செய்முறையை விளக்குங்கள் தோழிகளே!!

இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. பால் நன்றாக இருந்ததா! மிக்ஸ் பாக் காலாவதி தேதியைக் கவனித்தீர்களா?

‍- இமா க்றிஸ்

இரண்டும் சரியாக‌ தான் இருந்தது மா.
பால் பசும்பால் தான். பாக்கெட் பால் கூட‌ இல்லை.

- பிரேமா

ரோஸ்மில்க் மிக்ஸ் என்றால் பவுடரா??....இல்லைனா ரோஸ்மில்க் சிரப் பா????நான் பால் ஆறியதும் சிரப்பை ஊற்றி பிரிட்ஜில் வைத்து குடித்திறுக்கிறேன்...சீனியெல்லாம் கலந்தது இல்லை... ஒருசிலர் பாக்கெட் பாலை காய்ச்சாமல் தண்ணீர் சேர்க்காமல் ரோஸ்மில்க் செய்வாங்க...

Hope is necessary in every condition:)

தெரிந்து வைத்துக் கொள்ளலாம் என்னும் ஆர்வத்தில் இந்த இழையைத் தொடர்கிறேன் நான். :‍)

//ரோஸ்மில்க் சிரப்// பதப்படுத்தும் தேவைக்காக, ஏற்கனவே சீனி சேர்த்துக் காய்ச்சி இருப்பார்கள். அதனால் பிறகு சேர்ப்பது தேவையிராது. சிரப் என்றால் கலப்பது சுலபம்.

பிரேமா பௌடர் தான் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு வேளை முதலில் கொஞ்சம் பாலில் பௌடர் சேர்த்து அடித்துக் கொண்டு மீதிப் பாலைச் சேர்த்தால் சரியாக‌ இருக்குமோ!

‍- இமா க்றிஸ்

ஆமாம். ரமணாஸ் பிராண்ட் என்று நினைக்கிறேன். பால் ஆறியதும் பவுடரை கலந்தேன். இனிப்பு போதவில்லை. அதனால் சீனி சேர்த்தேன். ப்ரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்ததும் மேலே சிறிய‌ சிறிய‌ கட்டிகளாக‌ படர்ந்திருந்தது. குடித்து கூட‌ பார்க்கவில்லை கொட்டிவிட்டேன்.

மீதி பவுடர் இருக்கிறது அதுதான் கேட்கலாம்னு நினைச்சேன்.

- பிரேமா

//பதப்படுத்தும் தேவைக்காக, ஏற்கனவே சீனி சேர்த்துக் காய்ச்சி இருப்பார்கள். அதனால் பிறகு சேர்ப்பது தேவையிராது. சிரப் என்றால் கலப்பது சுலபம்// ரேகாவுக்கு பதில் அளித்தது போலவே, எனக்கு இனிப்பு போதாததால் சீனி சேர்த்தேன்.
நான் ஒரு ரோஸ்மில்க் பிரியை.. இனி சிரப் கிடைக்குமான்னு தேடப்போறேன்.

//ஒரு வேளை முதலில் கொஞ்சம் பாலில் பௌடர் சேர்த்து அடித்துக் கொண்டு மீதிப் பாலைச் சேர்த்தால் சரியாக‌ இருக்குமோ!// செய்து பார்க்கிறேன் மா. நன்றி

- பிரேமா

பால் காய்ச்சும் போதே பௌடரையும் சேர்த்து விடுங்கள். நன்றாக இருக்கும்.
//எனக்கு இனிப்பு போதாததால் சீனி சேர்த்தேன்//. சில சமயம் பௌடர் சேர்த்தது போதாமல் இருக்கலாம்.

நானும் இதை நினைத்தேன் ரேணு. பாலில் முன்பே கட்டி படாமல் பௌடரைக் கலந்துவிட்டு பிறகு காய்ச்சினால் சரியாக இருக்குமோ!

பாக்கட்டில் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் இருக்கவில்லையா பிரேமா?

‍- இமா க்றிஸ்

"ரேணு" எனக்கு நெருக்கமானவர்கள் அழைப்பது. தாங்கள் அழைத்தது மகிழ்ச்சி. <3 <3 <3.

மேலும் சில பதிவுகள்