Frnds enakku 1st baby cesarian.ipa na 7 month pregnant.1st baby c sectiona 2 nd baby epo c section panuvanga.due date ku ethana days ku munnala panuvanga.clear my doubt frnds
Frnds enakku 1st baby cesarian.ipa na 7 month pregnant.1st baby c sectiona 2 nd baby epo c section panuvanga.due date ku ethana days ku munnala panuvanga.clear my doubt frnds
sry sisr....cesarian kum c
sry sisr....cesarian kum c section kum ena different?
Priya shanmugam
Cesarian c section Same meaning.ena ketkurenga
சீ_செக்ஷன்
//cesarian kum c section kum ena different?// டெலிவிஷனுக்கும் டீவீக்கும், East Coast Road_ற்கும் ECR_ற்கும் உள்ள டிஃப்ரன்ஸ்தான் ப்ரியா. ஒன்று முழுமையான சொல், இரண்டாவது சுருக்கம்.
நீங்கள் //cesarian kum// என்று எழுதி இருப்பது பாதி மட்டும் தான். Caesarean section அது. அதன் சுருக்கம் C-section. (Caesarean என்பதன் முதல் எழுத்து 'C')
- இமா க்றிஸ்
தங்கம்
//1st baby c sectiona 2 nd baby epo c section panuvanga.// இரண்டாவது சீசேரியன் ஆக இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வேண்டுமா அல்லாவா என்பதை உங்கள் மருத்துவர்கள் சொல்ல வேண்டும்.
//due date ku ethana days ku munnala panuvanga.// இதுவும் உங்கள் உடல்நிலை & குழந்தையின் நிலையைப் பொறுத்தது. அவர்கள் சத்திரசிகிச்சைக்காக ஒரு தினத்தை தீர்மானம் செய்யலாம். ஆனால் பிற்பாடு மருத்துவர்கள் எதிர்பார்ப்பின்படி அமையாமல் மாறுதல்கள் இருந்தால் உடனே செய்ய வேண்டி வரலாம். அது இத்தனை நாள் / வாரம் / மாதம் முன்பாக இருக்கும் என்பது எங்களால் சொல்ல இயலாத விடயம். உங்கள் மருத்துவர் ஊகித்துச் சொல்வார். அடுத்த தடவை அவரைச் சந்திக்கும் போது பேசுங்கள். ஓரிரு வாரங்கள் முன்பாகவே பொருட்கள் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
(முதலாவது பிரசவத்திற்காக சீ செக்க்ஷன் ப்ளான் செய்து இருந்தாலும் இந்தப் பதில் பொருந்தும்.)
- இமா க்றிஸ்
imma
amma apdina...1st baby c sec pannalum 2nd baby normal aga chance iruka?? ipo mostly 1st ye normal panna matrangale? apd irukum pothu(normal) namathu udal othulaikuma? amma
ப்ரியா சண்முகம்
//1st baby c sec pannalum 2nd baby normal aga chance iruka??// :) நார்மல் 'ஆவது' இல்லை. நார்மல் என்றால் நார்மல் தான். ;) குழப்புறேனா! அதுதான் நார்மல். மற்றது எம் நலன் கருதி, எம் குழந்தையின் நலன் கருதிச் செய்வது. இத்தனை விஞ்ஞான வளர்ச்சியும் ஆனதன் பின், பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு, இழப்பு வீதம் குறையாவிட்டால் நாம் வளர்ச்சி கண்டு என்ன பயன்!
//1st ye normal panna matrangale?// ;))) 'நார்மல்' 'பண்ற' விஷயம் இல்லைங்க; ஆவது. அப்படி ஆவதால் உயிரிழப்பு ஆகாமல் தடுக்க மனிதரால் ஆக்கப்பட்டது தான் மற்றது.
//namathu udal othulaikuma?// ஒத்துழைக்காமல் இருக்கலாம் என்பது புரியுது இல்ல! அப்படி எம் உடல் காலை வாரி விடும் சமயங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காகத் தான் சிசேரியன். உங்கள் இந்தக் கேள்விக்கான பதில், ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக இருக்கும். எல்லாப் பெண்களுக்கும் ஒரே பதில் என்பதாக இராது. சிலருக்கு ஆம்; சிலருக்கு இல்லை. மீண்டும்... இதை நான் சொல்ல முடியாது. அவரவர் மருத்துவர் சொல்லலாம். 'ஆம்' என்கிற பதில் கிடைத்தவர்க்கும் கடைசி நிமிடத்தில் நிலமை மாறலாம்.
- இமா க்றிஸ்
சிசேரியன்
திடீரென்று ஒரு பயம். ;) நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களைச் சொன்னேன். அங்கு நான் எழுதியை வைத்து, 'இப்போ சிசேரியன் வேண்டாம். குழந்தை தானாகப் பிறக்க விட்டுவிடலாம்,' என்று நினைத்துவிட மாட்டீர்களே! உங்களுக்கு எது நல்லதோ அதைத் தான் டாக்டர் செய்வார். அதிகம் யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க ப்ரியா.
- இமா க்றிஸ்
imma amma
நன்றி அம்மா.1 st சிசேரியன் பண்ணதால இப்ப கண்டிப்பா சிசேரியன் சொல்லிடாங்க.due date ku 10 days ku முன்னாடி பண்ணனும்னு சொல்லிருகாங்க.
Cesarion doubt frnds
Hi friends cesarion pana 2 kulanthai matum than porakumnu solranga, 3 baby mudiyathu nu solranga, ithu unnmai ah frnds
காயத்ரி
இது என்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்.. சிசேரியன் செய்து நான்கு குழந்தைக்கு மேல் பெற்று கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்..
என் சித்திக்கு, அத்தை இருவருக்கும் மூன்று சிசேரியன்..
என் மாமியார் குடும்பத்தில் ஒருவருக்கு நான்கு ஆண் குழந்தை..அனைத்தும் சிசேரியன் தான்..
நார்மல் டெலிவரிக்கும் சிசேரியனுக்கும் வித்தியாசம் ஒன்று தான்.. நார்மல் டெலிவரி என்றால் குழந்தை பிறக்கும் வரை வலி இருக்கும்.. சிசேரியன் என்றால் குழந்தை பிறந்த பின் வலிக்கும்..