மனது குழப்பமாக உள்ளது

அனைவருக்கும் வணக்கம் , நான் அருசுவைக்கு புதிது, குழப்பத்திர்கு விடை தேடி வந்துள்ளேன்

திருமணமாகி 6 வருடம் ஆயிற்ரு , 3வருடம் பிற்கு குழந்தை பிறந்து 11 மாதம் ஆயிற்ரு, குழந்தைய‌ அம்மா வீட்டில் விட்ருக்கேன் நான் வேலைக்கு செல்வதால்,
இங்கு நானும் கண்வர் மட்டும் உள்ளோம், கண்வர் என்னிடம் சந்தோஷமாக இல்லை, என்னுடைய‌ வயது 25 , அவருடயது 40 இது தான் கார்ணமா?

முதலில் வயது மறைத்து திருமணம் நடந்து விட‌ , நான் பின்னாலில் தெரிந்து கேட்டு 2 நாட்கள் பிரச்சனை ,ஆதை அவர் நான் பார்துகொள்வேன் என சொல்ல நானும் இத‌ அம்மா வீட்டில் சொன்னால் தம்பி அப்பா எல்லாம் ஃபீல் பன்னுவாங்கன்னு விட்டுட்ட ,

இப்ப இருக்கற தா பாத்தா ,( நா ஒரு பொம்ம‌ மாதிரி தா தோனுது ) காலையில் சாப்பாடு செஞ்சு , ஆபிஷ் , நைட் வீட்டு வேல‌ , டின்னர் , வாரம் ஒரு முறை baby ya saturday night yeduthuttu vanthuttu monday morning kondu poai vidara varai yenakku intha kavalai illai , appram intha 5 natkaL konjamavathu kanavar kitta keadaikkara santhosam kedaikkala , baby treatement yeduthu poarantha appa doctors 10 to 18 contact la irrukka sonnanga , antha time la 10 to 18 la 5 days irruppom apram avvolothan , na baby porantha nalla santhosama irupparunnu neanacha, aana ippa vara apdi illai , yennoda aasagala na yepdi soldrathu , apdium oru nal nana keatta peasama padunnu sollittanga, na yennavea romba manasula keavalama thittitu paduthutta , apram ma k soldranga, na coimabtore la irrunthu inga friends husband torchel pathi sollumpothellam ippadium irrukkumannu thonuthu , itharku valiyea illaya, ippadium irruppangala, night bed la thirumbi padukkumpothu kal avanga bed la neetiruntha thittaranga, thottu kooda peasa viduvathillai , bike la kai vaikka pidi illai thoal meathu vaithu kai valikkuthunnu , thodaai meal vacha athukkum thittu , theriyama vachuttannu sonna athukku theriyama kooda vaikka koodathunnnnu soldranga , yen age feeling yartta soldrathu (

imaam ma & indhu akka yellarukkum aaruthal vidai soldra neenga yenakkum vidai solluveengannu nambi soldra

// ) காலையில் சாப்பாடு செஞ்சு , ஆபிஷ் , நைட் வீட்டு வேல‌ , டின்னர் ,// இந்த‌ மாதிரி நிறைய‌ பேர் இருக்காங்க‌ பா. நானும் தான். இதை சலிப்பா பார்க்காம‌ இது நம்மளோட‌ கடமைன்னு நினைச்சு போய்ட்டே இருப்போம். ஈஸியா இருக்கும்.
//வாரம் ஒரு முறை baby ya saturday night yeduthuttu vanthuttu monday morning kondu poai vidara varai yenakku intha kavalai illai , // குழந்தை இருக்குற‌ வரை அந்த‌ கவலை தெரியாது. உங்கள் அம்மா அல்லது மாமியை வீட்டில் சில‌ காலம் வைத்திருக்க‌ முடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால் அருகில் எதாவது நம்பத்தகுந்த‌ டே கேர் இருந்தா அங்க‌ காலைல‌ விட்டுட்டு ஈவ்னிங் பிக் அப் பண்ணிக்கலாம். என்ன‌ தான் கஷ்டம் இருந்தாலும் குழந்தை நம்மோட‌ இருந்தா அந்த‌ கஷ்டம் காணாம‌ போய்டும்.
//baby treatement yeduthu poarantha appa doctors 10 to 18 contact la irrukka sonnanga , antha time la 10 to 18 la 5 days irruppom apram avvolothan , na baby porantha nalla santhosama irupparunnu neanacha, aana ippa vara apdi illai , // நமக்கும் குழந்தை வேணுங்குறதுக்காக‌ அப்படி நாம‌ மெனகிட்டுருப்போம்.
ஆணாகிய‌ அவருக்கு நிறைய‌ பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஏதேனும் பிரச்சனையா இருக்கலாம்; உடலளவில் / மனதளவில். தொழில் சம்பந்தமாக‌ / பணப்பிரச்சனை / எதிர்காலத்தை பற்றிய‌ கவலை / இனம்புரியாத‌ பயம் இவற்றில் ஏதேனும் ஒன்றாக‌ இருக்கலாம்.
//bike la kai vaikka pidi illai thoal meathu vaithu kai valikkuthunnu , thodaai meal vacha athukkum thittu , theriyama vachuttannu sonna athukku theriyama kooda vaikka koodathunnnnu soldranga // அப்ப‌ ஹேண்டில் பார் வைக்க‌ சொல்லுங்க‌.
//yennoda aasagala na yepdi soldrathu , apdium oru nal nana keatta peasama padunnu sollittanga, // இதில் உங்கள் வேதனை புரிகிறது. அவருக்கு பிடித்த‌ மாதிரி நடந்துகொள்ளுங்கள். பிடித்த‌ மாதிரி உடை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் உடனே வேலைகளை முடித்து சமைத்து, குளித்து அழகாக‌ அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணவருக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பிடிக்கும்.
ஒரு வேளை அவருக்கு பிடிக்காத‌ மாதிரி நீங்கள் எதாவது தவறு செய்திருக்கிறீர்களா என்று யோசியுங்கள். அவரிடமும் பொறுமையாக‌ கேட்டுபாருங்கள்.
கொஞ்ச‌ நாளைக்கு நான் சொன்னமாதிரி நடந்துக்கோங்க‌ அவர்கிட்ட‌ பர்சனால‌ எதும் பேசாம‌ டெய்லி அவருக்கான‌ கடமைகளை செய்து கொடுத்துவிட்டு ஒவ்வொரு முயற்சியாக‌ செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். என்னால் வெளிப்படையாக‌ சில‌ விஷயங்களை சொல்ல‌ முடியாது. சூசகமாக‌ சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.

*இன்னும் நிறைய‌ வழிகள் உள்ளது ஆனால் அதை சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை

- பிரேமா

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

நீங்கள் உங்கள் கணவரிடம் நேரடியாக பேசி பாருங்கள்.. பேசினால் பிரச்சினை மனவருத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது..

வயதை பற்றி இனி யோசிக்க ஒன்றும் இல்லை..அதை விட்டு விடுங்கள்.. வயதை பற்றி உங்களுக்கு உறுத்தல் வேண்டாம்..

உங்களுக்கு சின்ன வயது தான்.. நீங்களும் உங்கள் கணவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்..நீங்கள் உங்கள் கணவரிடம் பொறுமையாக கேளுங்கள்..
ஏன் என்னை சீண்ட மாட்டேன்றீங்க? காரணம் சொல்லுங்கள் என்னிடம் என்று கேட்டு பாருங்கள்..

நீங்கள் கவலையாக இருந்து உங்களை வறுத்திக் கொள்ளாமல் தீர்வு காண என்ன வழி என்று பாருங்கள்..
நீங்கள் உங்கள் கணவரின் சம்மதத்துடன் தான் வேலைக்கு செல்கிறீர்களா? இப்படி ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம்..

பேசி பாருங்கள்.. குழந்தையையும் உங்களுடன் வைத்து கொள்ள முடியுமா என்று பாருங்கள்..

:‍) நேற்று கேள்வியைப் படித்த‌ போது உறங்கப் போகும் நேரம். இப்போதான் திரும்ப‌ அறுசுவைக்கு வர‌ முடிந்தது. நீங்கள் இருவரும் வந்து பதில் சொல்லி இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். அது நடந்திருக்கிறது. என் வேலையைக் குறைத்திருக்கிறீர்கள். :‍) நன்றி.

‍- இமா க்றிஸ்

//குழந்தைய‌ அம்மா வீட்டில் விட்ருக்கேன்// குழந்தையை உங்களோடு வைத்துக் கொள்ள‌ முடியாதா! வீட்டில் குழந்தை இருந்தால் உங்கள் இருவருக்கும் இடையே உறவு வலுவடையலாம்.

//கண்வர் என்னிடம் சந்தோஷமாக இல்லை,// நீங்களும் சந்தோஷமாக‌ இல்லை, அல்லவா!

//என்னுடைய‌ வயது 25 , அவருடயது 40 இது தான் கார்ணமா?// இப்படி ஒப்பிட்டுப் பார்க்கும் 'உங்கள் மனது' காரணமாக‌ இருக்கலாம். //நான் பின்னாலில் தெரிந்து கேட்டு 2 நாட்கள் பிரச்சனை// இதுவும் கூட‌ அவர் உங்களோடு சந்தோஷமாக‌ இருப்பதற்குத் தடையாக‌ இருக்கலாம். நீங்கள் வயது வித்தியாசத்தைப் பெரிதாக‌ நினைக்கிறீர்கள், வருந்துகிறீர்கள் என்பது குற்ற‌ உணர்வைக் கொடுக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் நடவடிக்கைகள் மூலம் நீங்கள் தான் பிரச்சினையைச் சரிசெய்தாக‌ வேண்டும்.

//na coimabtore la irrunthu inga friends husband torchel pathi sollumpothellam ippadium irrukkumannu thonuthu// என்ன‌ சொல்றீங்கன்னு புரியல‌. ஆனால் யாரோடும் உங்கள் நிலையை ஒப்பிட‌ வேண்டாம். //itharku valiyea illaya,// சுயபரிதாபம் வேண்டாம். என்ன செய்வது என்பதை மட்டும் சிந்தியுங்கள். இந்த நிலை இப்படியே தொடரும் என்பது இல்லை. பெண்களுக்கு வயதோடு ஹோர்மோன் மாற்றங்களுடன் உடலுறவில் ஈடுபாடு குறைவது சாதாரணம். உங்கள் கணவர் போக்கும் மாறாது என்பது அல்ல. மாறலாம். சில வருடங்கள் கடந்த பின் நிலமை மாறி இருக்கும். இதற்கா அத்தனை கவலைப்பட்டோம் என்று நினைப்பீர்கள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வெகு பிரியமாக இருப்பீர்கள்.

//yen age feeling yartta soldrathu// உங்கள் மருத்துவரிடம் அல்லது ஒரு கவுன்சிலரிடம்! மருத்துவத்திற்கு வெளியே சில‌ உபயோகமான‌ தகவல்கள் கிடைக்கலாம். இதுவும் நீங்கள் எந்த‌ மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எம் கலாச்சாரம் சில‌ விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கு இடம் கொடுக்காது. நாம் சொல்ல‌ முடியாது. அவர்கள் சொல்லலாம். அவர்கள் கொடுக்கும் சில அறிவுரைகள் எம் மக்களுக்கு நடைமுறைப்படுத்தச் சிரமமானவையாக இருக்கக் கூடும்.

//ippadium irruppangala,// இது அவரது குறை அல்ல‌, வேண்டுமென்று உங்களை ஒதுக்குவதாகவும் கொள்ள‌ வேண்டாம்.

http://www.arusuvai.com/tamil/node/34204 ஏற்கனவே படித்திருப்பீர்கள். தொடர்ந்து படித்து வாருங்கள். சில விடயங்கள் புரியும்.

‍- இமா க்றிஸ்

PAAPPAVA YENKOOODA VAIKKA MUDIYATHA NILAMAI , YENNODA AMMA APPAVAUM THAMBIYAYUM VITTUTTU VARAMATTANGA PORULATHARAM ORU KARANAM , MAAMIYAR OORLA VIVSAYAM AVANGA AMMAVA PAATHUTTU IRRUKKANGA,

AVARODA VIRUPATHUKKU THA NA VEALAIKKEA POARA , CONSIVE AH IRRUTHA SAMAYATHILLUM NA ATHA AVANUKKU HELP AH IRRUKKUM NENACHU THA IPPAVA VARA YELLA PANDRA ,

PREAMAKKA NEENGAL MUYARCHI SEIYYA SOLLRATHU YENNODA ROTTINE AANA VEALAI , OFFICE LA IRRUTHU VANTHA DINNER READY PANNI KULICHUTTU THA YEPPAVUM SAPDRATHU.

ILLA AKKA WIFE NDRA MURAYIL ONNUMEA SOLLA KOODATHA / SAPTTU KULIKKA VEANANNU SONNA ATHARKKUM KOVAM, AVANGA DRESS ALUKKA IRRUKKU NU WASH PANNA ATHUKKUM KOVAM , SARI WASH PANNAMA VITTA ORU SAMAYAM AVANGALEY WEAKLY WASH PANNIKIRANGA,

INDU AKKA NA MANASU VITTU PEASA BAYAMA IRRUKKU

NEATHU AVARODA DRESS ORRUKKU POATTU POITTU VANTHATHU NEATHU LEAVE NALA YELLA WASH PANNA AVANGA COMPANY KU POITTANGA AFT VANTHU VELILLA POGA SHART IRON PANNITTU IRON BOX YEDUTHU VACHUTTANGA , APRAM FANT KEATTANGA WASH PANNITTA NU SONNATHUKKU AVVLO KOVAM PADARANGA , NA YETHUKKU OVVORU VISAYATHUKKUM KOVAM NU KEATTU PROBLEN NALLA ADI VANGANATHU THA MICHAM

IMMA MA AGE PROBLEM MARRIAGE AAI 4 MONTHS LA THERUNCHU PRACHANNANA VERUM YENKITTA IRRUNTHU AZHUKAI MATTUM THA MA , APPRAM ONE YEAR APPARAM BABY ILLANU TREATMENT KU POI KUTTIMMA POARANTHA

YENAKKU AMMA VEETLAUM NIMMATHI ILLA , ANGA APPA KASU KASU NU KEAKARANAGA RENDU PAKKAMUM NIMATHI ILLA

KADAVUL KITTA KALAILLA IRRUNTHU SEEKIRAM YENNA KOOPTUNGANAGA NA VARUM POTHU PAAVAIUM YEDUTHU VARANNU THA PRAY PANNA , YENAKKU SUTHAMA AMMA VEEDU M ILLA , HUSBAND OH DA ANBU ARAVANAIPPUM ILLA , AZUHGAI MATTUM THA IRRUKKU

AMMA NEARAYA PATHUTTA PERIOD TIME STOMAK PAIN KU THITTU UNAKKU MATTUM THA INTHA PAIN AH OORLA KATTU VELA SEIVANGA VEIYLLA NINNU MASAMA IRRUKKUM POATHU KOODA AVVOLO VEALA SEIVANGA NU SOLLI SOLLI THITTU , VANDILLA IRRUNTHU KEELA VIZHUTTA HIPE LA ADI PATTATHU KONJA NAL VEETALA KAI VAITHIYAM PAATHA MUDIYALA NANE HOSPITAL POALAMNNU NEANACHA ORU VARTHA SOLLALAM NU SONNA CHINNA VISAYATHUKKU HOSPITAAL NU THITTU , NANAUM PAIN KILLER VANGI VACHU TTU SOLLAMA POATUUTTU VEALAIYA PATHUKKARAMMA

NA PAAPA PORATHA ITHELLAM SARI AAYIDUMNNU NEANACHA , ANA INNUM THODARKIRATHU,
KASTTAPATTU SAPDRA AVASIYAM ILLA , OORLA YELLA SETTLE THA , INGA SAMBARIKKA MUDIYALLANALUM ORRLLA POI UKKATHU SAPDALAM

NA YARKITTAUM SOLLARATHU ILLA , IPPA UNGA KITTA SOLLI MANASUILLA IRRUKKARATHU KOMJAM KAMII AAKUTHU

MUDIVEY ILLA MA POAGUTHU AKKA , BAYAMA IRRUKKU YETHAVATHU NADANTHURUMMONNU,

SOCIETY MEALA UM BAYAM IRRUKKU , NAMMA PROBLEM VELILLA THERUCHA YELLAM THAPPA NEANAIPPANGA NNU NEATHU MATUM ILLA ADI VANGUMPOTHU YELLAM ULLAYEA IRUTHU VALLIKKU AZHUTHU AMATHIYA IRRUTHUKKURA

YEANA YENNODA THU MIDDLE CLASS FAMILY , NA SANDA POATTUTU POANA AMMA VEETU SIDE YELLA PERIYA FAMILYA IRRUKKANGA YELLARUM YENNA NINAIPANGANNU , NALU SUVARUKKEY VACHUTTU IRRUKKA

UNGAKITTA SOLDRA MUGAM THERIYATHA NANBARGAL ,

AVANGA AMMATTA SONNA AVANGA NAN AVAN KITTA KEAKRANNANGA , APPRAM AVANGA YETHUVUM PEASA MATTAKIRANGA,

YELLORUM MAHA PARAVALLA NNU AMMATTA SOLDRANGANNU AMMA YENKITTA SOLLI SANTHOSAPADARANGA , NA ATHUKKELLAM THAKUTHIYEA ILLA , SANTHOSAMA ILLA , MANATHU RANAMA THA IRRUKKU , YOSICHA KANNULA IRRUNTHU THANI MATTUM NALLA VARUTHU

//AVANUKKU HELP AH IRRUKKUM NENACHU// புரியவில்லை!

//SAPTTU KULIKKA VEANANNU SONNA// இதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. அவங்க‌ குழந்தையில்லை இல்லையா! நீங்கள் கரிசனம் என்பீர்கள், அவருக்குக்குக் கோபம் வரலாம்.

//SARI WASH PANNAMA VITTA// சரியா! சாரியா! நல்லது தானே! விட்டுருங்க‌.
நீங்க‌ துணி கழுவுறதைப் பற்றி எழுதினது முழுவதும்... நன்றாகவே புரிகிறது. :‍) இதே காரியங்களை மணமான‌ புதிதில் (20 எனக்கு, இது 36 வருஷத்துக்கு முந்திய‌ கதை. இப்போதைய‌ பெண்களுக்கு... புரிதல் அதிகம் என்று நினைக்கிறேன்.) நானும் செய்து திட்டு வாங்கியிருக்கிறேன். :‍) க்றிஸ் எப்பவும் அவங்க‌ துணியை அவங்களே கழுவுறதைத்தான் விரும்புறாங்க‌. விட்டுருங்க‌. அவங்க‌ துணி அவங்க‌ கழுவிப் பழகி இருப்பார். அதனால் தான் இப்படி. மற்றது... உங்களுக்கு அழுக்கு என்று தோன்றலாம்; பாவித்த‌ ஆளுக்கு அது சுத்தம் என்பது தெரிந்திருக்கும். மனதில் இன்ன‌ விஷயத்துக்கு இன்ன‌ துணி என்று தயாராக‌ இருந்து கடைசி நேரம் அதை நீங்க‌ குழப்பி வைச்சிருக்கிறீங்க‌ என்கிறது தெரிஞ்சால் மூட் அவுட் ஆகவே செய்யும். இதில் தவறு எதையும் என்னால் காண‌ இயலவில்லை. என் துணியை என்னைக் கேட்காமல் இன்னொருவர் கழுவினால்... எனக்கும் இப்படித் தான் தோன்றும். நனைக்கும் முன்னால் ஒரு வார்த்தை கேட்டுட்டு பண்ணுங்க‌

//NA YETHUKKU OVVORU VISAYATHUKKUM KOVAM NU KEATTU// ம்... அவங்களைக் கேட்காதீங்க‌. உங்களையே கேட்டுக்கங்க‌. ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு ஏற்றமாதிரி உங்களை மாற்றி நடக்கப் பாருங்கள்.

//KADAVUL KITTA KALAILLA IRRUNTHU SEEKIRAM YENNA KOOPTUNGANAGA// நீங்க‌ உங்க‌ பிரச்சினையை மட்டும் யோசிக்கிறீங்க‌. ஒரு குழந்தைக்கு அம்மா நீங்க‌.

//NA VARUM POTHU PAAVAIUM YEDUTHU VARANNU THA PRAY PANNA // சரியாப் புரியல‌. ஆனா... உலகத்துல‌ இருக்கிற‌ யாரு பிரச்சினை எதுவும் இல்லாதவங்கன்னு நினைக்கிறீங்க‌? எல்லாருக்கும் இருக்கு, எனக்கும் இருக்கு. அறுசுவைல‌ வந்து சொல்லல‌. அதனால‌ உங்களுக்குத் தெரியாது. ஆனா கஷ்டங்கள் வரதால‌ நான் பாவம் பண்ணின‌ ஆள் இல்லை. //AZUHGAI MATTUM THA IRRUKKU// வரும், அழணும், பிறகு அதில‌ இருந்து வெளியே வரப் பார்க்கணும். அதுக்குள்ளேயே புதைஞ்சு போகக் கூடாது. அழுகை மட்டும் இல்லை; உங்களுக்கு உள்ளே ஒரு தைரியமான‌ மனமும் இருக்கு. அதை அடையாளம் கண்டு இதில‌ இருந்து வெளியே வரப் பயன்படுத்திக்கங்க‌.

உங்கள் அம்மாவைப் பற்றி.... அவர்கள் வயதுக்கு உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வது சிரமமாக‌ இருக்கிறதோ என்னவோ! அம்மாவுக்கு என்ன‌ வயது? பெண்கள்... வயதோடு ஹோர்மோன் மாற்றங்கள்... அவர்களை எப்படி இயங்க‌ வைக்கும் என்பது, சொல்ல‌ முடியாது. கோபிப்பது வெகு சாதாரணம் அந்தச் சமயம். அவர்களைத் தவறாக‌ நினைக்க‌ என்னால் முடியவில்லை. மகளாக‌, அவரது சிரமத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவரும் பாவம் தான்.

வீட்டு வைத்தியம் என்று இராமல் அப்போதே மருத்துவரிடம் போயிருக்க‌ வேண்டும். விரைவாகக் குணமாகி இருக்கும். இன்னும் ஒன்று... பெய்ன் கில்லர்... நீங்களாக‌ எடுக்கக் கூடியவை பெரிய‌ வலியைச் சரி செய்யப் போதியதாக‌ இராமலிருக்கலாம். அல்லாமல் வீரியமானவற்றை நீங்களாக‌ வாங்கிப் போட்டால் உங்கள் வயிற்றைக் கெடுத்துக் கொள்வீர்கள். பிறகு அது இன்னொரு பிரச்சினை சேர்ந்துகொள்ளும்.

//PAAPA PORATHA ITHELLAM SARI AAYIDUMNNU NEANACHA // வாழ்க்கையில் ஒவ்வொரு சமயமும் ஒரு பிரச்சினை நிச்சயம் இருக்கும் கண்ணா. குழந்தையைப் பாடசாலையில் சேர்ப்பது, குழந்தையின் உடல்நலம், படிப்பு, பலது இருக்கிறது பார்க்க‌.

//MANASUILLA IRRUKKARATHU KOMJAM KAMII AAKUTHU// நல்லது. வெளியே கொட்டினால் பாரம் குறையும். விரைவில் உங்கள் பிரச்சினைகள் தீரும். மனம் தளரக் கூடாது.

எந்தப் பகுதியை யாருக்குத் தட்டியிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. படிக்கச் சிரமமாக‌ இருந்தது. அடுத்த‌ தடவை சிம்பிள் கேஸில் தட்டினால் கண்ணுக்குச் சிரமமாக‌ இராது.

‍- இமா க்றிஸ்

//BAYAMA IRRUKKU YETHAVATHU NADANTHURUMMONNU,// ஒன்றும் ஆகாது. தைரியமாக‌ இருங்க‌.

//NAMMA PROBLEM VELILLA THERUCHA YELLAM THAPPA NEANAIPPANGA// மற்றவங்களைப் பற்றி யோசிக்காதீங்க‌. முன்பு அடி வாங்குறதைப் பற்றி நீங்க‌ சொல்லி இருக்கல‌. கூடுமான‌ வரை பிரச்சினையான‌ விஷயங்களைப் பண்ணாதீங்க‌. ஒரு தடவை பிரச்சினையானால் இன்னொரு முறை அது ஆகாமல் எச்சரிக்கையாக‌ இருக்கலாம் இல்லையா!

//YELLARUM YENNA NINAIPANGANNU// யாரும் நினைக்கிறதைப் பற்றி யோசிக்க‌ வேணாம். உங்களுக்கு உங்கள் வீட்டாரிடமிருந்து சப்போர்ட் கிடைக்காது என்கிறது தான் யோசிக்க‌ வேண்டிய‌ விஷயம். பெரிதாக்காமல் சமாளிக்கப் பாருங்கள். காலம் மாறும். உங்கள் வாழ்க்கை உங்கள் இஷ்டம் போல் மாறும்.

//UNGAKITTA SOLDRA MUGAM THERIYATHA NANBARGAL// :‍) உண்மைதான், இது வசதி இல்லையா! நீங்கள் உங்கள் உண்மைப் பெயரில் அறுசுவையில் உறுப்பினராகவில்லை என்று நம்புகிறேன்.

//AVANGA AMMATTA SONNA AVANGA NAN AVAN KITTA KEAKRANNANGA// புரியலயே!

//NA ATHUKKELLAM THAKUTHIYEA ILLA// இது வேண்டாத‌ எண்ணம். உங்கள் பிரச்சினைகள் சிலதுக்கு மட்டும் தான் நீங்கள் காரணம். இப்படி நினைக்கக் கூடாது. //SANTHOSAMA ILLA// கிடைக்காததை நினைத்து ஏங்க‌ வேண்டாம். வேறு பிடித்த‌ விடயங்கள் இல்லையா! அவற்றில் மனதைச் செலுத்துங்கள். //MANATHU RANAMA THA IRRUKKU// திரும்பத் திரும்ப‌ அதையே நினைக்க‌, பேச‌, ரணம் ஆறுவதற்குப் பதில் பெரிதாகும். மனதை வேறு விடயங்களிலும் ஈடுபடுத்தப் பாருங்கள். //YOSICHA KANNULA IRRUNTHU THANI MATTUM NALLA VARUTHU// ;) சீரியஸா படிச்சுட்டு இருந்தேன். சிரிக்க‌ வைச்சுட்டீங்க‌. :‍) கண்ணுல‌ இருந்து தண்ணி மட்டும் தானே வரும்! வேற‌ என்ன‌ வரணும்!

கதை எழுதுவீங்களா? இல்லாட்டலும் எழுத‌ முயற்சி செய்யலாம். கவிதைகள் எழுதுங்க‌. இவை மனப் பாரம் குறைய‌ நல்ல‌ வழிகள். உங்களுக்குத் திருப்தியா இருந்தால் அறுசுவைக்கு அனுப்பலாம். கிடைக்கிற‌ கமண்ட்ஸ் உங்க‌ மனசை வேற‌ வழிக்குத் திருப்பிரும்.

¬¬¬¬
நினைவா அடுத்த‌ போஸ்ட் சிம்பிள் கேஸ்ல‌ தட்டுங்க‌. ஃபோன்ல‌ படிக்கிறவங்களுக்கு எனக்கு இருப்பதை விடச் சிரமமாக‌ இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

//AVANUKKU HELP AH IRRUKKUM NENACHU// புரியவில்லை! : kalyanam mudithu 2vathu mathathilirunthu vealaikku poara amma avanga solli tha avrukku yennoda salary oru support ah irrukkum nu , anan pappa consive anappa poaga veanannu thonuchu avrtta sonna anna poaga sonnanga sari amma veettula money support illa athana delivery nanga pathom athanala vealaikku poana amma

/SAPTTU KULIKKA VEANANNU SONNA// இதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. அவங்க‌ குழந்தையில்லை இல்லையா! நீங்கள் கரிசனம் என்பீர்கள், அவருக்குக்குக் கோபம் வரலாம். // sari mma na ini sollala ,

dress problem / ini avanga sonna wash pannikkalammnu yeduthukkura amma

//NA YETHUKKU OVVORU VISAYATHUKKUM KOVAM NU KEATTU// ம்... அவங்களைக் கேட்காதீங்க‌. உங்களையே கேட்டுக்கங்க‌. ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு ஏற்றமாதிரி உங்களை மாற்றி நடக்கப் பாருங்கள். // amma na avangala ithuvum keakkalanna veetla na oru ooma tha amma , varuvanga sapduvanga mobile yeduthuthuttu bedrroom ku poavanga , innum ithu maravillai , en aasai , en peachu , en visayam ethuvum avrukku theavai illai

ஒரு குழந்தைக்கு அம்மா நீங்க‌. // avallukkum intha prachana varummonnu tha yenga rendu pearaum kadavul kitta koopda soldra

உங்கள் அம்மாவைப் பற்றி..// amma ku below 50 tha ma , kaal vali ullathu , paappava pathukarathukku matham 4000-/- apram weekly kondu poi vidum pothu antha varathirku thevayana fruits , eggs, things vangi kudukkara avaroda sammathathoda
amma veetula money problem irrukku athanala, appa treatment , amma treatment yella seichutta , necklece kammal yeallam ammaku kuduthutta analum appa yeathavathu oru prachanaya solli money keakaranga , na yeanga poava purunchukkavea matangaranga.

ithu nala yennala anga poanalum nimathiya irrukka mudiyala , yennoda alavukku meeri seiyara ,

வாழ்க்கையில் ஒவ்வொரு சமயமும் ஒரு பிரச்சினை நிச்சயம் இருக்கும் // amma prachana time la face panna kathukkanum nu puriuthu , husband oru chinnatha siruchu kooda peasamatingaranga, avvollo valikkuthu mma , yeanakkunnu yean ponnu vanthutta aana avala kooda vachu kooda santhosa pada mudiyala

yellam irrukku yenakku husband, amma , appa, thambi, yennoda ponnu , anan yenakkunnu yarum illa

மேலும் சில பதிவுகள்