எந்த முடிவு எடுப்பது

நான் 11 மாத‌ பெண்ணின் தாய், நாங்க‌ எங்களோட‌ பொண்ண அம்மா கிட்ட விட்டுட்டு பணிக்கு செல்கிறென் , நாணும் கண்வரும் தனியாகா தான் ( கண்வரின் பணியினால்) இருக்கிறோம் ,
அத்தை ஊரில் விவசாயம் பார்கிறார், அதோடு திருமணம் ஆன4 ஆண்டுகலில் 6மாத‌ கைக்குழந்தையுடன் வந்த‌ கண்வனை இழந்த‌ மகள் (ஒரு அரசாங்க‌ வேலயில் உள்ளார் அத்தை வீட்டிலே தான் உள்ளார் ) மற்றும் பேத்தி (ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாஅர் ), மற்ரும் அத்தையின் உடல்நிலை வலுவ்ற்ரு இருக்கும் அவரின் தாய், இவை அனைத்தையும் பார்க்கும் பெரிய‌ பொறுப்பில் உள்ளார்.

அம்மா, அப்பா தம்பி என் என்னுடைய குடும்பம் , திருமணமாண 3 மாதங்களில் இருந்து பணிக்கு செல்கிறேன் கண்வரி முழு சம்மதத்துடன், அவரின் அலோசனைப்படியும்,

மருத்துவ‌ மனை உதவியுடன் தான் தாய்மை அடைந்து , எங்களின் மகளை கைகளில் ஏந்தினோம் , சவாலானா தருனத்திலும் கண்வரின் அன்பு அரவனைப்பும் இப்பவும் அப்படியே , அவர் என்னுடய‌ அம்மாவின் குடும்ப‌ தேவையையும் (பணவிசயத்தை மற்றும் உடல்நிலை சார்ந்த‌ செலவுகலை) பூர்த்தி செய்தார் ( அப்பா வார‌ வருமானம் , தம்பி மாத‌ வருமானம் , (இது 2
ஆண்டாக‌ தான் )அம்மாவிடம் எங்களுடய‌ பெண் இருப்பதால் அவருக்கு ஒரு தொகை கொடுக்கிரோம் மாதம் குழந்தயயின் அத்த்யவசிய‌ பொருட்களோடு)

திருமணம் முட்டிந்து 5வருடம் அகிறது, திரும்ணம் ஆன புதியதில் என் வருமான்ம் அம்மாவின் வீட்டில் குறய‌ கடன் பிரச்னை அப்பாவின் வேலையில்லாததால் , அதனால் என்னிடம் கேட்க‌ நான் அவரிட‌ சொன்னேன் அவர் பண்ம் என்னால் முடியாது செயின் குடுக்கா சொன்னார் நானும் அவ்வாறு செய்தேன், முடிந்தது நு இருந்த‌ அப்ற்மா 3 மாசம் 4 மாசம் ஒருக்கா எதோ ஒரு ப்ரச்சனைன்னு பணம் கேப்பாங்க‌ நானும் அவரிடம் சொல்லுவேன் அவங்க‌ குடுப்பாங்க‌ , குழந்தை பிறந்த‌ பின்பும் நீட்டிபதால் அவ்ர் என்னை 7வது மாததிலுருந்து பணிக்கு செல்ல‌ சொன்னார் , நான் 8 து மாததிலிருந்து செல்கிரேன் , அவர் தான் உங்க‌ அம்மானால வேலைக்கு போக கஷ்டம் அதனால‌ பாப்பாவ‌ பாத்துகட்டும் அதுக்கு ஒரு தொக‌ குடுத்துக்கலாம்னு

2மாதங்களாக நாட்கள் ஓடிக்கொண்டிருகிறது , ஆனால் மாதத் தொகை குடுத்தும் அப்ப அப்ப‌ எதோ ஒரு பிரச்சன நு இன்னும் 2 நகைகல குடுத்தா, கண்வட் கிட்ட‌ சொல்லிட்டு தான் அவ்ங்க‌ தா பாப்பா அங்க‌ இருக்கா பண்ம் நால ச்ண்டப்போட்டு இருப்பாங்கன்னு அதனால குடுதுருன்னு , நாணும் அப்பாவிடன் வேறு ஒருத்தங்களா இருந்த‌ இப்படி இருக்க மாட்டாங்க‌ , இனியாவது கேக்காதிங்கன்னு சொன்னா ( இது முதல்ல இருந்தே சொல்லிடு தா இருக்கா) நான் பாப்பவ‌ பாக்க‌ போகும்போதெல்லாம் அப்பா ஒரு 100 வா இருந்தா குடுன்னு கேப்பாங்க‌ முதலிலும் அப்போது என்கிட்ட‌ இருந்தா குடுப்ப‌ , இப்ப‌ atm கண்வ்ர் வாங்கி கிட்டாங்க‌ ( அவ்ர் நீ குடுத்தன்னா அவ்ங்களுக்கு தொக்காயிடும் அவ்ங்க‌ அப்போதக்கு பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சா போதும்னு இருக்காங்கா , நா இப்ப‌ எனக்கு வேன்டி உன்ன‌ வேலைக்கு போகா சொல்லல , என்னால உங்க குடும்ப‌ தேவய‌ இன்னும் பூர்தி பன்ன‌ முடியது , அதுக்கு நீ போ சொன்னாரு ,

அப்பாவினால் : தண்னி அடிப்பாங்க‌ அப்பா , அதனால ஒழுங்கா வேலக்கு போகருதுல்ல‌ , அதனால் வருமான்ம் கம்மியகறதால் இப்டி பிரச்சன

இப்ப‌ பாப்ப‌ அங்க‌ இவ்ங்களோட‌ டெய்லியும் சண்டைக்கு இடயில இருக்கா, என்க்கு ரொம்ம‌ கஷ்டமா இருக்கு நான் வளர்த‌ சூழழ் ல என் பொண்னு இருக்க கூடாதுன்னு இருந்த‌ , ( நான் அப்பாவின் குடியினால் இதே போன் சண்டயின் மத்தியில் வளர்ந்தே ) காசும் குடுத்துட்டு பாப்பாவ‌ விட்டு விலகியும் ரொம்ப‌ கஷ்டமா இருக்கு,நேற்ரு தான் அம்மா வீட்டிற்கு போனேன் அங்கு நடந்த‌ சண்டையினால் என்னுட‌ ய பசி மற்றும் என் பெண்னை நினைத்து மன‌ வலி மட்டுமே மிச்சம்

அவ்ர் வேலைக்கு போக‌ சொல்ல்றார், நா வேலைக்கு போல , அம்மா அப்பா கு காசு கேட்டா நா குடுக்கல , பாப்பாவ‌ நானெ பாத்துக்கறன்னு சொன்னா , அவங்க‌ உங்க‌ வீட்டுல பிரச்சன் இருந்துட்டே தா இருக்கும் , நீ வீட்ல இருந்தாலும் பண்ம் கேப்பாங்கன்னு சொன்னாரு ( அதுவும் உண்மை குழந்தை பிறந்து அம்மா வீட்டில் இருந்த் போதும் கூட‌ அப்பா வேலயில்லனு வீட்டுல இருந்துட்டாரு , அம்மாவும் வீட்டுல , அப்பவும் நாங்க‌ தா காசு குடுத்துட்டு தா இருந்தோம் )

டே கே ர் ல விட‌ பயமும் உள்ளது , அம்மா பாப்பாவ‌ நல்லா பாத்துக்கறாங்க‌, ஒரு சிலது நா இப்டி பன்னிங்கன்னு சொல்லுவ‌,

இப்ப‌ என்ன‌ முடிவு என் பொண்ணுக்கு சிறந்தது.எனக்கும்

மனது பாராமா உள்ளது

உங்கள் நிலை என்ன என்பது புரிந்து விட்டது..
உங்கள் குழந்தை உங்களிடம் தான் வளர வேண்டும்.இதில் நீங்கள் யோசிக்க ஒன்றும் இல்லை..

தம்பி வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்.. இனி அம்மா தம்பி அவர்களை பார்த்து கொள்வார்கள்..

நீங்கள் வேலையை விட்டாலும் வீட்டில் பணம் கேட்பார்கள் என்று பயப்படுவது நியாயம் இல்லை.. நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..பெண் குழந்தை பெற்ற நீங்கள் உங்கள் நகைகளை குழந்தைக்காக வைத்து கொள்ளுங்கள்..

இப்படி மனதை காயப்படுத்தி நிம்மதி இல்லாமல் இருப்பது நல்லது அல்ல.அன்பான கணவர் அழகான குழந்தை என்று உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்..

உங்கள் அம்மாவை தம்பி பார்த்து கொள்வார்(பார்த்து கொள்ளவில்லை என்றால் விட்டு விடுங்கள்).
கிடைக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்கள்..

உங்கள் அம்மா அப்பாவிடம் என்ன சண்டை?என்ன பிரச்சனை என்று கேட்காமல் இருப்பதே நல்லது.
எத்தனை காலம் இப்படி உழைத்து கொடுப்பீர்கள்? கொஞ்ச நாள் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள்.. எல்லாம் சரியாக வரும்..

அன்பு மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள்.. மகிழ்ச்சியுடன் வாழ்க்கை ஆரம்பம் ஆகட்டும்..

நானும் இப்படித்தான் என் குடும்பத்திற்காக அக்கா மாமா business சேருங்க சொல்லி பணம் வாங்கி கொடுத்து பிரச்சனையில் மாட்டி கொண்டேன் ..மேலும் சித்தி மற்றும் உறவினர்களுக்கும் பணம் கொடுத்துள்ளோம் ..இதனால் இப்போதைக்கு எங்களுக்கு சண்டை வந்து விடும் .. உறவினர்கள் அம்மாவாக இருந்தாலு. நம் குடும்பத்திற்கு நம் வாழ்க்கைக்கு அப்புறம் எல்லாம் ..பார்த்து கொள்ளுங்கள் ..பழக்கத்தை நிறுத்துங்கள் பின் கஷ்டமாயிடும்ப ...னான் நிறைய பட்டுட்டேன்...
சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம்னு நால் செவுத்துக்குள்ள இருபார்வைகளுக்கு தெரிவதில்லை ..பந்தம் பாசம் அதெல்லாம் உணர்வு அதிகை பணம் காசு என்பது கெடுத்து விடும் ..உண்மையில் அனுபவப்பட்ட சொல்கிறேன் ..அவர்கள் தலையெழுத்தை அவர்களின் படியே நடக்கும் ...மாற்ற இயலாது...

அன்பு மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள் //அக்கா இந்த‌ வார்த்தையை என்னவர் இன்னும் கூறமறுக்கிறார், இது அவரது வார்த்தையில் வராதா வராதா என்றூ எதிர்பார்க்கிரேன் , மாமியார் வீட்டிலும் அவரது சின்னம்மா, சித்தப்பா எல்லோரும் டவுன் ல இருக்கறதுக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போனா ஆகும்ன்னு , பொண்னு பொறந்த‌ 5 வது மாததிலிருந்து ஆரம்பித்து கொண்டார்கள். அத்தயூம் ஓரு குழந்த‌ போதும் உனக்கு நு சொல்லிட்டங்க‌ ,எனக்கும் பாப்பாவ‌ பாத்துட்டு அப்றமா அவ்ள ஸ்கூல சேர்த்துட்டு போறன்னு சொன்ன அவரிடம் ஆனால் அவ்ர் , பதிலே சொல்லமாட்டங்கறார் ,

அன்பு மகளை தயங்காமல் கூட்டி வாருங்கள். // இந்த‌ வார்த்தை அழகாக இருக்குக்கா

இன்னைக்கும் போய் அவரிடம் கேட்டுபாக்கனும்

தயங்காமல் மனம் விட்டு இருவரும் பேசி முடிவு எடுங்கள்.. சின்னம்மா பெரியம்மா மாமியார் மாமனார் யாருக்கும் நம்மை வேலைக்கு போக சொல்லும் உரிமை இல்லை..

நம் வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று நமக்கு தெரியும்.. முதலில் நிம்மதி அடுத்து தான் பணம்..

நிம்மதி கிடைத்து விட்டால் பணம் பெரிதாக தெரியாது.. நீங்கள் கவலை படாமல் நல்ல முடிவு எடுங்கள்..

குழந்தை எந்த சூழலில் இருக்கிறாள் என்று புரிய வையுங்கள்.

இனி எங்கள் அம்மா அப்பா குடும்ப விஷயத்தில் நான்தலையிட மாட்டேன் என்று கணவருக்கு சொல்லி விடுங்கள்.. அதுவே போதும்..

இருவரும் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்..

அக்கா நேற்று முழுவதும் மன்றாடி விட்டேன் , இனி அவர்க்ள் பாடு நான் எதற்க்கும் எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்க வேண்டாம் , நாணும் கேக்க மாட்டேன் என்று ஆனால் பிடிவாதாமாகா இருக்கிறார்.

பெண்ணின் நிலமையும் சொன்னேன் , அவள கஷ்ட‌ படுத்தவா 3 வருட‌ வலியை அனுவவித்தோம் என்று , மனசு ரொம்ம வலிக்குது நானே பாத்துக்கற நு சொன்ன , பிடிவாதம் விடுவது போல் இல்லை

உன்னோட அப்பா யோசிக்கனும் கல்யாண்ம் பன்னி குடுத்தாங்க‌, நா நிலம தெருஞ்சு ஒவ்வொன்னும் பன்ன‌ , உபகாராம் வேண்டாம் உபத்திரியம் தராமா இருக்காலாம்னு தெரியாதா, குழந்த இருக்கற வீட்டில் டிரிங் பண்னி சண்ட‌ போடக்கூடாதுன்னு தெரிய‌ வேண்டாமான்னு, இப்ப‌ பாப்பா எடுத்துட்டு வ்ந்து நீ பாத்துக்கற மாதிரி இருந்தா அவங்க‌ யாரும் இங்க‌ வரவேண்டாம்னு சொல்ல்டு வந்துரு , என்னோட‌ ரியாக்சன் வேற மாதிரி இருக்கும்னு சொல்லாறாங்க‌, ஒரு குழந்தைய பாத்துக்க‌ முடியல‌ , காசும் குடுத்து அத‌ பாத்துக்க்றத‌ விட்டுட்டு இருந்தா எப்டி , இது வரைக்கும் என்ன‌ ஹெல்ப் கேட்ட இத கூட‌ பன்ன முடியதங்கறாங்க‌ ( நானும் காசு குடுத்து அவ்ள அங்க‌ விடுறத்துக்கு நானே பாத்துக்க்றனு சொல்லற கேக்க மாட்டகறாங்க‌),2மணி நேராமா போராட்ம் நீடித்தும் பொண்னோட பிரிவு இரவு முழுவதும் தூங்க‌ முடியவில்லை

Nega work pogalam solliyum yen intha pidivatham.amma appa kuda iruntha than athu santhosama unga mela pasama irukum.1 year kuda aagala athu kulla epadi pa nega vitenga.nega 1 st te work ku pogama nalla mudiva eduthurukalam.ipa ipad kasta pada vendam la pa.unga husband yen nega worku poganumnu compul panranga

உங்கள் முந்தைய இழையில் சொல்லப்பட்டவைகளை இங்கு கொண்டுவராமல்... சுருக்கமாக எனக்கு இப்போது தோன்றுவதைச் சொல்கிறேன் மஞ்சுளா.

//டே கே ர் ல விட‌// தேவையில்லை. அம்மாவுக்கு பணம் கொடுப்பதற்காகத்தான் வேலைக்குப் போகிறீர்கள். வேலைக்குப் போவதற்காகத்தான் குழந்தையை அம்மாவிடம் விட வேண்டிய தேவை. அதற்காகவும் பணம் கொடுக்க வேண்டும், மனவேதனைப் படவும் வேண்டும் என்றால்... பணமும் கொடுக்க வேண்டாம்; குழந்தையையும் விட வேண்டாம். சிம்பிள்!

(தப்பாக எடுக்க வேண்டாம் படிப்பவர்கள்.) எத்தனை வருடம் கொடுப்பதைத் தொடர்வீர்கள்! கொடுப்பவர் அல்லது வாங்குபவர் இருவரில் ஒருவரது மரணம் வரை!! கொடுப்பவர் உள்ளவரை வாங்குபவர் தன் போக்கை மாற்றப் போவதில்லை. உங்களையும் சேர்த்தே சொல்கிறேன்... குழந்தைக்குப் பராமரிப்புக் கொடுப்பவர் இருக்கும் வரை, நீங்களும் அனுப்பாமலிருக்கப் போவதில்லை. நடுவில் குழந்தை தான் பாவம்! பாடசாலைக்குப் போக ஆரம்பிக்கும் சமயம்... உங்களோடு வந்தால்... நீங்கள் வீட்டி இருக்கும் சமயம் எல்லாம் 'களைப்பு' எனப் போகிறீர்கள். அப்போது வேலையை விட்டால்... அம்மா வீட்டார் சமாளிக்கத் தானே வேண்டும்!!

எப்போதே செய்யப் போவதை இப்போதே செய்யலாம். மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள். கொடுப்பதை நிறுத்துங்கள்; பெறுவதையும் நிறுத்துங்கள். உங்கள் குழந்தை எப்படி உங்கள் பொறுப்போ அதுபோல அவர்கள் செலவுக்குள் வரவு வைக்கத் திட்டமிடுவதும் கடன்களைத் திருப்பத் திட்டமிடுவதும் அவர்கள் பொறுப்பு.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா சொல்வது தான் சரி.. எனக்கு இதையெல்லாம் கேள்வி படும்போது புதிதாக இருக்கிறது..

எங்கள் ஊர்பக்கம் பெண்கள் வேலைக்கு சென்றால், தன் அம்மாவிடம் குழந்தையை விட்டால் பணம் எல்லாம் கொடுக்க மாட்டோம்.. அது அவர்களுடைய பேரக் குழந்தை.. அவர்கள் அன்புடன் வளர்ப்பார்கள்..

குழந்தை பொறுப்பு அனைத்தையும் பார்த்து கொள்வார்கள்.. ஆனால் நிறைய பேர் இப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது..

காசு வாங்கி கொண்டு பார்ப்பவர்கள் எப்படி தாத்தா பாட்டி ஆக முடியும்.. அதற்கு வீட்டில் வேலை ஆள் வைத்து பார்த்து கொண்டால் போதும்..

இனியும் தாமதிக்காமல் விரைவில் உங்கள் கணவரிடம் பேசி உங்கள் குடும்பத்தை(நீங்கள், கணவர், குழந்தை) நல்லமுறையில் வழி நடத்துங்கள்..

நீங்கள் கூறுவது நன்றாகா புரிகிறது, முயற்சி செய்து கொண்டுடிருக்கிறேன் , வெற்றி அடையும் நம்பிக்கையில்

***

- பிரேமா

மேலும் சில பதிவுகள்