
தேதி: September 28, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கத்திரிக்காய் 1/4 கிலோ
சின்ன வெங்காயம் 6
நல்லெண்ணெய் 150 மில்லி
சீரகம் சிறிது
வறுக்க
வெந்தயம் 1/2ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
கடுகு 1ஸ்பூன்
மிளகு 1/4 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் 15
தனியா 1/4 கப்
வேர்கடலை 4ஸ்பூன்
எள் 2ஸ்பூன்
வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :
சின்ன வெங்காயம் 50 கிராம்
தோலுடன் பூண்டு 1
கருவேப்பிலை 1கைப்பிடி
புளி நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து ஒன்று ஒன்றாக மிக்ஸியில் பொடித்து பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.

கத்திரிக்காயை நான்காக கீறி அதில் ஸ்டஃப் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி ஸ்டஃப் செய்த கத்திரிக்காய் சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

Comments
ரேவ்ஸ்
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சுண்டி இழுக்குது ரேவ்ஸ் சூப்பர் .
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அறுசுவை
மீண்டும் முகப்பில் ரெசிபி பார்க்க மிகவும் சந்தோஷம். அட்மின் அண்ணாவிற்கு நன்றி
Be simple be sample
சுவா
ஹாய் சுவா. உங்களோடதுதான் பர்ஸ்ட் கமெண்ட். செய்து பாருங்க ரொம்ப நல்லாருக்கும். தான்க்யூ
Be simple be sample
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
பாா்க்கும் பாேதே நாக்குல நீா் ஊறுது.. சூப்பா் ரேவா ராெம்ப நாள் கழித்து அறுசுவையில் புது ரெசிபி இன்னும் பல பல ரெசிபி பாா்க்க ஐ அம் வெயிட்டிங்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவா
பார்த்தாலே எண்ணெய் பிரிந்து குழம்பு அழகா வந்திருக்கு
சூப்பர்
REVATHY - sis
Tamil la type panna mudiyala sorry sis
akka dish pakkum pothu spicy ah irrukaramathiri irrukku , na my favourite la add pannitta ,
na kandippa try pandra , pannittu yepdi vanthuchunnu soldra ,
Revs
கலக்கல் குறிப்பு. செய்துடுவோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்
தான்க்யூ ரேவ். செய்து பார்த்துட்டு சொல்லுங்க :) .நீங்களும் நிறைய குறிப்பு அனுப்புங்க
Be simple be sample
நிகி
தான்க்யூ நிகி.
Be simple be sample
மஞ்சுளா கண்ணன்
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் முயற்சி பண்ணுங்க. நாங்களும் அப்படி தங்கலிஷ் பயன்படுத்தினவங்க தான். இப்ப மாறிடுச்சு:). கண்டிப்பா செய்து பார்த்துட்டு குழம்பு எப்படி இருந்ததுன்னு சொல்லனும். நன்றி
Be simple be sample
வனி
ஆஹா. எங்கேயோ கேட்ட குரல். செய்து பார்த்துட்டு படம் காமிக்கனும் சரியா. தான்க்யூ வனி ;)
Be simple be sample
கத்தரிக்காய்
குறிப்பு சூப்பர் ரேவ்ஸ். கடைசிப் படம் நா ஊற வைக்குது.
- இமா க்றிஸ்
இமாம்மா
தான்க்யூ இமாம்மா :)
Be simple be sample