தொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன்.

ஹாய்....ரொம்ப காலத்துக்கு அப்புறம் அறுசுவைல வாரேன்.எல்லாரும் எப்படி இருக்கீங்க?.. எனக்கு ஒரு சந்தேகம்...இப்போ எனக்கு 14 வாரம் கர்பமாக உள்ளேன்.
தொப்புள் பற்ரிய சந்தேகம்... குளிக்கும்போது தொப்புளில் சோப் போட்டு லேசாக தேய்த்து குளிக்கலாமா? ஏனெனில் எனது தொப்புளில் தோல் லேசாக வருகிறது....இன்னுமொரு சந்தேகம்
இந்த தொப்புள் என்பது துவாரமாகவா இருக்கும்? இதனூடாக காற்று அல்லது வெளிச்சம் உள்ளே போகுமா? சும்மா கேட்டு தெரிந்து கொள்ளனும் போல இருந்துச்சு.....

குளிக்கலாம். உடலில் மற்ற இடங்களிலுள்ள தோல் போல்தான் இதுவும். வயிற்றில் சொரிந்து கொள்வது மட்டும் வேண்டாம். அடையாளம் வரக் கூடும்.

//தொப்புள் என்பது துவாரமாகவா இருக்கும்?// இல்லை.

//இதனூடாக காற்று அல்லது வெளிச்சம் உள்ளே போகுமா? // நிச்சயம் இல்லை.
தாயிலிருந்து குழந்தை ஊட்டம் பெற்றுக் கொள்ளும் வழி இது. அப்போது கூட நீளமாக இருந்தாலும் துவாரமுள்ள குழாய் போல இருந்திராது. பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடியை அறுத்துக் கட்டியிருப்பார்கள். ஆறும்வரை அது சீழ்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம். தேவையற்ற பகுதி விழுந்ததன் பின்னால் தொப்புள் அடையாளம் மட்டும் தங்கி விடும். குழந்தை பிறந்ததன் பின் தொப்புளுக்கு என்று எந்த உபயோகமோ செயற்பாடோ கிடையாது.

‍- இமா க்றிஸ்

ரொம்ப தாங்ஸ்..... எனக்கு மார்பகங்களில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது.... அம்மா சொல்றா அது விரிவடைகிறது அதுதான் இந்த அரிப்பு என்று.....இது நார்மல் தானே?

அம்மாவே சொல்லீட்டாங்க. இனி நான் என்ன சொல்லுறது! :-) நம்பலாம். ஏதாவது மொய்ஸ்சரைசிங் க்றீம் பூசுங்க.

‍- இமா க்றிஸ்

என் குழந்தை பிறந்து 42நாட்கள் ஆகிறது.. நேற்றிலிருந்து குழந்தை தொப்புள் பெரிதாக உருண்டையாக உள்ளது..

எல்லோரும் தொப்புள் காற்று குடித்து விட்டது என்று கூறுகிறார்கள்..

இரண்டு நாட்கள் கழித்து மருந்துவமனை செல்ல உள்ளேன்..

இருந்தாலும் இது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.. மிகவும் பயமாக உள்ளது..

//எல்லோரும் தொப்புள் காற்று குடித்து விட்டது என்று கூறுகிறார்கள்.// உடம்பில் மூக்கும் வாயும் தான் காற்றை உள்ளே எடுக்கும். தொப்புள் எப்படிக் குடிக்கும் அதற்கென்று ஓர் திறந்த அமைப்பு இல்லாமல்!

//இரண்டு நாட்கள் கழித்து மருந்துவமனை செல்ல உள்ளேன்.// உங்கள் குழந்தை அது. வலியைச் சொல்லத் தெரியாது. இரண்டு நாட்களில் உங்கள் கவனத்திற்கு வராமலே விடயம் பெரிதாகிவிட்டால்! காலம் கடத்தாமல் உடனே போவதுதான் நல்லது என்பேன்.

பயப்பட வேண்டாம். ஆனால் வைத்திருந்துவிட்டு பிறகு கவலைப்பட வேண்டாமே!

சிலருக்கு இப்படி இருந்துவிட்டுச் சரியாகிவிடுவது உண்டு. சிலருக்குத் தொடர்ந்தும் அப்படியே இருக்கும். ஹேணியாவாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம். எப்போது வரை வைத்துப் பார்க்க வேண்டும், எப்போது சிகிச்சை செய்ய உகந்த காலம் என்பதை பார்க்கும் மருத்துவர் சொல்லுவார்.

அல்லாமல் இன்ஃபெக்‌ஷன் இருப்பதனால் இப்படித் தெரிகிறது என்றால் அதை இப்போதே கவனித்தாக வேண்டும். இன்றைக்கே மருத்துவரிடம் போக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

Mam en pappa pirantu 40 days la toppul perussassu.nan hospital poi kanpiccen.doctor atuve Ulla poirum nnu sonnaga.aana 5 years aassu.ennum Ulla pogala.aana size mattum sinnata aayirukku.enakku rompa kavalaya erukku.l.k.g pogutu.enna panratunu teriyala

நாற்பது நாள் வயதாக இருந்த போது காட்டினீர்கள். அப்போதைக்கு அவர்கள் சொன்ன பதில் சரிதான்.

பிறகு எப்போதாவது இதைப் பற்றிக் காட்டி விசாரித்திருக்கிறீர்களா? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது; நிச்சயம் இன்ஃபெக்‌ஷன் இராது. அந்தப் பயம் வேண்டாம்.

பிள்ளைக்குத் தொந்தரவு இல்லாவிட்டால் & ஆடைக்கு வெளியே தெரியவில்லை என்றால் யோசிக்க எதுவும் இல்லை. உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.

இதனால் குழந்தைக்குச் சிரமங்கள் இருந்தால் கட்டாயம் சிகிச்சை எடுக்க வேண்டும்.

நான் உங்கள் இடத்திலிருந்தால் குழந்தை எதுவும் சொல்லாவிட்டாலும் சிறிய வயதில் திருத்தி விடவே பார்ப்பேன். பெண் குழந்தை. வளரும் காலத்தில் இது இடைஞ்சலாக இருப்பதாக எடுக்கலாம். அவரது தன்னம்பிக்கைக்கு இது இடையூறாக அமையலாம். அவர் நீச்சல் பழக விரும்புகிறார் அல்லது பாலே, ஜிம்னாஸ்டிக்ஸ் போல ஒன்றைப் பழக விரும்பலாம். மாடலிங் செய்யும் விருப்பம் வரலாம். இறுக்கமான ஆடைகள் தொப்புள் துருத்திக்கொண்டிருப்பதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்கலாம். லோஹிப் சேலை எல்லாம் கட்ட முடியாது.

‍- இமா க்றிஸ்

எனக்கும் ஹெர்னியா என்றோ பயமாக உள்ளது.. அம்மாவிடம் சொன்னால் மருத்துவமனைக்கு இப்போது வேண்டாம் என்கிறார்..
என் மகளால் அடிக்கடி மருத்துவமனை செல்ல இயலாத சூழ்நிலை.. அவ்வளவு சேட்டை..

மனதிற்கு தான் பாரமாக உள்ளது.. எனக்கு இருப்பது போல என் குழந்தைக்கும் ஹெர்னியாவாக இருக்குமோ என்று பயமாக உள்ளது..

குழந்தை குப்புற விழுந்தால் சரியாகி விடும் என்று மாமி கூறுகிறார்.

வெள்ளிக்கிழமை மருத்துவமனை சென்று தான் பார்க்க முடியும்..

அக்கா salphanin பவுடர் குடுத்திருப்பங்கள்ல அதை தம்பி குளிச்சதும் தொப்புள்ல வச்சு நல்ல பிரஸ் பண்ணுங்க அது தன்னால அமுங்கிடும்.

தம்பி குளிப்பாட்டினதுக்கு அப்புறம் தொப்புளை லேசான துணி வைத்து ஒத்தி எடுங்க. ஈரம் இருக்க கூடாது

- பிரேமா

மார்பகங்களில் அரிப்பதற்கு பால் சுரப்பும் ஒரு காரணம். இமா அம்மா சொன்ன மாதிரி ஏதாது மாய்சுரேசர் க்ரீம் பூசுங்க தேங்காய் எண்ணெய் சிறந்தது.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்