சோமாசா

சோமாஸா

தேதி: November 4, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மைதா - ஒரு கப்
ரவா - அரை கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
பூரணம் :
பொட்டுக்கடலை - அரை கப்
தேங்காய துருவல் - கால் கப்
பொடித்த சீனி - 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவா, சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து விட்டு 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவு
பூரணம் செய்ய பொட்டுக்கடலையை வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.. அதே வாணலியில் தேங்காய் துருவலை போட்டு வதக்கி எடுக்கவும். மிக்ஸியில் வறுத்த பொட்டுக்கடலையை போட்டு ஒன்றிரண்டாக ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அதிலே வதக்கி வைத்திருக்கும் தேங்காய் துருவலை போட்டு ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
பூரணம்
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி, தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
பூரணம்
பிசைந்து வைத்திருக்கும் மாவை நீளமாக தேய்த்துக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை மைதாவில் பிரட்டி எடுத்து பூரி கட்டையால் பூரி அளவிற்கு அப்பளமாக தேய்த்து, அதன் நடுவில் பொட்டுக்கடலை பூரணத்தை வைக்கவும்.
சோமாஸ்
அப்பளத்தை மூடி ஓரங்களை அமுக்கி விடவும். பின்னர் கூர்மையான ஓரங்களைக் கொண்ட ரோலரால் வெட்டி சரி செய்து விடவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் தயார் செய்து வைக்கவும்.
சோமாஸ்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியது, செய்து வைத்திருக்கும் சோமாஸாவை போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சோமாஸா
அனைத்து சோமாஸாக்களையும் இப்படி பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸா ரெடி.
சோமாஸா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nice

அமுத நிலா