பட்டிமன்ற சிறப்பு இழை - 4

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.
இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.
முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
பட்டிமன்ற விதிமுறைகள்:
1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.
2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107
3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.
4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

தேதி 17 ஆகிவிட்டது, பட்டி துவங்கலையா? 100ல் கலந்துக்க முடியலை. இப்ப‌ துவங்கினா 101 ல‌ கலந்துட்டு ஊருக்குபோலாம். சீக்கிரம் துவங்குங்க‌.

நடுவருக்கு ஏதோ முக்கிய வேலையாம்... அதனால் ஆரம்பிக்க இயலாமல் போனதாக சொன்னார். விரைவில் துவங்கப்படும் என்றும் இங்கே தெரிவிக்கச் சொன்னார். தாமதத்துக்கு மன்னிக்கவும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றம் என்ன ஆச்சு ரொம்ப நாளா தொடங்காமலே இருக்கே ...:) நிறையோ பேர் வெயிட்டிங்... சீக்கிரமா தொடங்குங்க ....:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களின் போட்டிகளில் பங்கெடுக்க விரும்புகிறேன்... எப்படி கலந்து கொள்வது என்று தெரியப்படுத்துங்கள்....

மேலும் சில பதிவுகள்