கவிதைப் போட்டி

<div align="center"><img src="/timages/kavi_head.jpg" alt="Kavithai Poonga" /></div>

<div class="recititle"> கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பு </div>

இந்த கவிதைப் போட்டி சம்பந்தமாக மன்றத்தில் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தோம். (<a href="http://www.arusuvai.com/tamil/node/4985?page=2" > http://www.arusuvai.com/tamil/node/4985?page=2 </a>)

பலர் அந்த அறிவிப்பு குறித்து அறிந்திராத காரணத்தால், எல்லோரும் அறியும் வண்ணம், மீண்டும் அந்த அறிவிப்பினை இங்கே தனிப் பக்கத்தில் கொடுக்கின்றோம்.

அறுசுவை நேயர்களின் கவிதை எழுதும் திறனை ஊக்குவிக்கும் வண்ணம், கவிதை பூங்கா பகுதியில் தொடர்ந்து நேயர்களின் கவிதைகளை வெளியிட்டு வருகின்றோம். அதேசமயம் படைப்புகளின் தரத்தினை உயர்த்தவும், கலந்து கொள்பவர்களின் ஆர்வத்தினை அதிகரிக்கவும், மாதம் ஒருமுறை கவிதைப் போட்டியை நடத்தவுள்ளோம். இதன்படி, ஒரு குறிப்பிட்ட தலைப்பை நேயர்களுக்கு கொடுத்து, அந்த தலைப்பிற்கு பொருத்தமான கவிதையை எழுதி கேட்டு, அதில் சிறந்த கவிதையை தேர்ந்தெடுத்து, அதற்கு சிறிய பரிசு ஒன்றையும் கொடுக்க இருக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.

அறுசுவையின் மூத்த உறுப்பினர்களைக் கொண்டு பரிசுக்கான கவிதையை தேர்ந்தெடுக்கவுள்ளோம். கவிதைகளை அனுப்பியவர் பெயர் இல்லாது, கவிதைகளை மட்டும் தேர்வாளர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களின் சராசரியை கணக்கிட்டு, பரிசு பெறும் கவிதை தேர்ந்து எடுக்கப்படும்.

இந்த முதல் போட்டிக்கான தலைப்பு <b> "திரவியம் தேடி.." </b>

கவிதைக்கான சூழல் + கரு இதுதான் : பொருள் தேடலுக்காக தாய்நாட்டைப் பிரிந்து, வெளிநாடு செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படி வெளிநாடு வந்திருக்கும் ஒருவரின் புது மனைவி, சொந்த பந்தங்களை பிரிந்து, தனக்கு பழக்கமில்லாத ஒரு புது சூழலுக்கு தள்ளப்படுகின்றாள். இங்கே ஆயிரம் வசதிகள் இருந்தும், மனதிற்குள் ஒரு வெறுமை இருப்பதை உணர்கின்றாள். அவளின் ஏக்கத்தை கவிதையாக வடிக்க வேண்டும்.

அந்த பெண்ணே தன்னுடைய ஏக்கத்தினை வெளிப்படுத்துவது போலவும் கவிதை அமைக்கலாம். அல்லது அப்படி உள்ள ஒரு பெண்ணின் ஏக்கத்தினை நீங்கள் விவரிப்பது போலவும் கவிதை அமைக்கலாம்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 21.08.2010 - இந்திய நேரம் நள்ளிரவு 12 மணி வரை. 22 ஆம் தேதி கவிதைகள் நடுவர்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.

<b>விதிமுறைகள்:</b>

1. கவிதை கொடுக்கப்பட்டுள்ள கருவிற்கு/தலைப்பிற்கு சம்பந்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

2. கவிதை அனுப்புகின்றவரின் சொந்த கவிதையாக இருக்க வேண்டும்.

3. இங்கே அனுப்பப்படும் கவிதை, சொந்த கவிதை என்றாலும், வேறு எங்கும் ஏற்கனவே வெளியாகி இருக்கக்கூடாது. இங்கே வெளியான பின்பு வேறு ஊடகங்களில் வெளியிடவும் கூடாது.

4. கவிதைகளை கீழே 'தொடர்புக்கு' என்று உள்ள பக்கத்தின் வாயிலாக எங்களுக்கு அனுப்பலாம். அல்லது arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம்.

5. கவிதைகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.

6. கவிதைகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர்/உறுப்பினர் எண் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.

7. தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுக்கும் கவிதைகளுக்கே பரிசு கொடுக்கப்படும். இதில் ஏதேனும் பிரச்சனைகள் எழுமாயின், அறுசுவை நிர்வாகத்தின் முடிவே இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளப்படும்.

8. கவிதைகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

9. தேர்வாளர்கள் வழங்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், இரண்டு கவிதைகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும். மற்றபடி, அனுப்பப்படும் அனைத்து கவிதைகளுமே அறுசுவையில் வெளியிடப்படும்.

10. கவிதை 10 வரிகளுக்கு மேல், 30 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மிகவும் சுருக்கமான கவிதைகள் அல்லது மிகவும் நீளமான கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

போட்டிக்கான கவிதையை அனுப்பும் போது "கவிதைப் போட்டிக்காக" என்று குறிப்பிட்டு அனுப்பவும். மற்ற கவிதைகளை சாதாரணமாக அனுப்பலாம்.

Comments

அருமையான தமிழ்ப்பணி.வாழ்த்துகள்.