பட்டிமன்ற தலைப்புகள் - 2

இங்கே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தோன்றும் தலைப்பை பதிவிடலாம். ஒருவரே எத்தனை தலைப்புகள் வேண்டுமானலும் தரலாம்.

பட்டிமன்றத்துக்கு நடுவராக வருபவர்கள் இங்கே உள்ள தலைப்புகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும். அந்த தலைப்பு நிச்சயமாக அவர்களே இங்கே கொடுத்ததாக இருக்க கூடாது.

பழைய பட்டிமன்ற தலைப்புகள் இழை காண, அதிலிருந்து தலைப்புகள் தேர்வு செய்ய...

http://www.arusuvai.com/tamil/node/10388

மஹாபாரத்தில் சிறந்த‌ கதாபாத்திரம் யார்?
கர்ணணா?அர்ஜூனணா?

No pains,No gains

ANANTHAGOWRI.G

உணவே மருந்து இக்காலத்தில் சாத்தியமா ? சங்கடமா ?

கல்லூரி மாணவர்கள் பகுதி நேரம் பணிக்கு செல்வது பொறுப்புணர்வா ? சுமையா?

திருமணம் முடிந்ததும் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது அவசியமா ? அநாவசியமா ?

குழந்தைகளுக்கு( முதல் & இரண்டாவது) நடுவில் போதிய இடைவெளி (3 வருடம்) தேவையானதா ? தேவையற்றதா ?

பட்டி தலைப்பு.

1) அதிக‌ தூக்கம், பகல் தூக்கம் - சுகமா? சோம்பேறித்தனமா?
தூங்கும் போது நானே யோசிச்சது.

2) தமிழில் ஆங்கில கலப்பு - அழகை குறைக்கிறதா? தவிர்க்க முடியாததா? எல்லாம் நம்ம அட்மின் அண்ணா பதிவ படிச்ச பாதிப்பு. (அறுசுவை தமிழ் ஆசிரியை நடுவராய் வந்தால் எப்படி இருக்கும்!!)

3) திருமண பந்தம் ஒரு பெண்ணுக்கு (மகிழ்ச்சி, சுதந்திரம், வாய்ப்பு, பொறுமை) இருப்பதைவிட அதிகம் - கொடுக்கிறதா? இருப்பதை பறிக்கிறதா? ஒரு டவுட்டு..

4) சேர்ந்து (குடும்பத்தினர், நண்பர், உறவினர்களுடன் நேரடியாய் பேசி) சிரிக்கிறீர்களா? தனிமையில் (முக புத்தகம், இணையம்) சிரிக்கிறீர்களா?
இக்கால சாத்தியம், அதிகம் எதில். அதே டவுட்டு...

தலைப்பு ஏற்கனவே நம் தோழிகள் கொடுத்ததாக இருந்தால், நான் கொடுத்த தலைப்புகளை ஒதுக்கி விடுங்கள்.

உன்னை போல் பிறரை நேசி.

பட்டி தலைப்பு.

இருமுறை பதிவிடபட்டு விட்டது மன்னிக்கவும்.

உன்னை போல் பிறரை நேசி.

1. சமைப்பதில் சிறந்த்வர்கள் சுவைப்பதில் சிறந்தவர்களா? இல்லையா?
2.கேட்பதில் இனிமை காதல் பாடல்களா? சோகப் பாடல்களா?

நிஷா

வயதான காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மகனுக்கு மட்டுமா ?
அல்லது
மகளும் பொறுப்பை பங்கிட்டுக் கொள்ள வேண்டுமா ?

அறுசுவையில் தமிழி டீச்சரா?!! யாருப்பா அவங்க ?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதா? பரிதாபத்துக்குரியதா? பட்டிமன்ற இணைப்பை கொடுக்கவும்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதா? பரிதாபத்துக்குரியதா?
பட்டிமன்ற இணைப்பு இருந்தால் அனுப்புங்கள்

இதன் பட்டிமன்றம் பேச்சு வேண்டும்

மேலும் சில பதிவுகள்