44 day baby

Hi mam enakku kolanthai poranthu 44 days aaguthu 2 naala paal romba kattuthu. Ippo kolanthai romba alaran kattuna paal kulanthaikku kodukkalama mam .please help me. 1 weekah paal kudikkum bothu kaala udharittu alaran ethunala mam

தாமதமாகப் பதில் சொல்கிறேன். இன்றுதான் இங்கு வந்தேன். பிறகு யாராவது தேடிப் பார்த்தால் பயன்படட்டும் என்று பதில் சொல்ல நினைக்கிறேன்.

கொஞ்சம் பாலை வெளியேற்றிவிடலாம். ப்ரிஜ்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அவசரத்துக்கு உதவலாம்.

//kattuna paal kulanthaikku kodukkalama// தாராளமாகக் கொடுக்கலாம். தாய்க்கு வேதனை என்பதைத் தவிர பால் கெட்டுப் போவதெல்லாம் இல்லை. தாய்ப்பால், தாய்க்கு வெளியே - ஃப்ரிஜ்ஜிலேயே ஐந்து நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

குழந்தைக்கு ஏற்கனவே ஏதோ உடல் உபாதை இருந்திருக்கிறது. (அது உங்கள் கவனத்திற்கு வரவில்லை.) அதனால்தான் குறைவாகப் பால் அருந்தியிருக்கிறது. அதுதான் உங்களுக்குப் பால் கட்டியதன் காரணம். கட்டிய பாலை அருந்தியதால் குழந்தைக்கு உபாதை ஏற்பட்டிருப்பதாக நீங்கள் மாறிப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்