குழந்தை உட்காரும் பருவம்

அனைவருக்கும் வணக்கம்!!
என் பெயர் #நாசியா (Naziya)
நான் இன்று தான் அறுசுவையில் சேர்ந்தேன். எனக்கு சென்ற ஆண்டு ஆகஸ்டு 11 கல்யாணம் நடந்தது. மே மாதம் 6ந் தேதி பெண் குழந்தை பிறந்தது (சிசேரியன் அறுவை சிகிச்சை)
அவளுக்கு தற்போது 6 மாதம். நான்கு கால்கள் கொண்டு அவள் தவழவில்லை. மூட்டி போட்டு 1 step வந்து கீழே விழுந்தது விடுகிறாள். ஆனால் கைகள் கொண்டு முன்னே வருகிறாள். 1 வாரத்தில் இருந்து தானே உட்கார்ந்து கொள்கிறாள். சற்று நேரம் கூட தனியாக விடமுடியவில்லை. பின்னே விழுகிறாள். பின் தலையில் அதிகம் அடி விழுகிறது. தொட்டிலில் இருந்து கூட ஒரு முறை கீழே விழுந்து அடிபட்டது. ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறையாவது அடி விழுகிறது. எதாவது ஐடியா செல்லுங்கள் பிளிஸ்.
நான் என் அனைத்து சந்தேகத்திற்கு அறுசுவையில் தேடுவது உண்டு. உதவுங்கள்.

வணக்கம்.எனக்கு 5 மாத ஆண் குழந்தை இருக்கிறான் . அவனுடைய உடம்பு இன்னும் பிறந்தப்போ இருந்த மாதிரி சாஃப்டாவே இருக்கு . அவன தூக்கும் போது ரொம்ப கொழகொழனு விறப்பு இல்லாம ஆடிட்டே இருக்கான் . தலை ஓரளவுக்கு நிக்குது இன்னும் நல்லா நிக்காம ஆடிட்டே இருக்கான்.மத்தபடி குப்புற விழுறது விளையாடுறது எல்லாமே நார்மலா இருக்கான் . உடம்பு கொஞ்சம் விறப்பாகுறதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க ப்ளீஸ்.

ப்ளீஸ் யாராச்சும் ரிப்ளே பண்ணுங்க ப்ளீஸ்

என் குழந்தைக்கு 7 மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பமாகி உள்ளது. அவன் நெஞ்சை தரையில் நகர்த்தி இடது கையை வைத்து தவழ்கிறான். ஆனால் அவனை உட்கார வைக்க முடியவில்லை. மடியில் உட்கார வைத்தாலே உட்காராமல் எழுந்து நிற்கிறான். எவ்வளவு நேரமானாலும் நிற்க மட்டுமே வைக்க சொல்கிறான். அவனை உட்கார பழக்க முடியவில்லை. இன்னும் உன் பையன் உட்காரவில்லையா என பாக்கிறவர்கள் எல்லாரும் கேட்கிறார்கள். என் கவலைக்கு யாராவது ஒரு தீர்வு கூறுங்கள் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்