பல்லுகொளுக்கட்டை

எனது குழந்தைக்கு பல்லு முளைகிறது. நான் வெளிநாட்டில் இருப்பதால் பல்லுகொல்லுக்கட்டை எப்படி செய்வது என்றும் அந்த function எப்படி கொண்டாடுவது என்றும் சொல்ல முடியுமா?

http://www.arusuvai.com/tamil/node/774 இது நாகபட்டினம் குறிப்பு.

http://www.arusuvai.com/tamil/node/20612 இது யாழ்ப்பாணத்து பல்லுக் கொழுக்கட்டை, நர்மதா தன் க்ரியேட்டிவிட்டியைக் காட்டி இருக்கிறா. ;)

எனக்கும் நர்மதா வைச்சிருக்கிற மாதிரி நிறையப் பல்லு வைக்கிறதுதான் விருப்பம். ஆனால் சிலர் நடுவில மட்டும் ரெண்டு பல்லு வைச்சால்தான் பல்லுக் கொழுக்கட்டை எண்டுவினம். வெறும் முரசில முதல் ரெண்டு பல்லும் இருக்கிற மாதிரி வடிவா இருக்கும் அது.

கொண்டாடுறது... எப்பிடி வேணுமெண்டாலும் உங்கட விருப்பம் போல கொண்டாடலாம். ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி வைப்பினம். எல்லா இடமும் பொதுவாக உள்ள விஷயம்... குட்டியருக்கு வடிவான உடுப்பு, பல்லுக் கொழுக்கட்டை & வாற சின்ன ஆக்களுக்கு ஏற்ற மாதிரி சாப்பாடு, பல்லிமிட்டாய், குட்டி சொக்லட், ஜெம் பிஸ்கட் எண்டு உங்கட விருப்பம் போல குடையில கொட்டக் கூடிய இனிப்புகளாக எடுத்து வையுங்கோ.

சின்னாக்களோட கூடவே அம்மா, அப்பாவும் வருவினம். அவைக்கும் ஏதாவது பரிமாற வேணும்.

குட்டியரை இருத்தி (சுத்தமான ஷீட் விரிக்க வேணும். ஆட்களை அதற்கு மேல நடக்க விடாதைங்கோ. ) ஒரு ஆள் குடை பிடித்துச் சுற்ற (யார் பிடிக்கிறது என்பதை வீட்டில கேளுங்கோ.) ஒவ்வொரு தட்டாக குடையில கொட்டுறது; சின்னவங்கள் சுற்றி இருந்து பொறுக்குவினம். எனக்கு கொழுக்கட்டை, உறையில்லாத மிட்டாய் எல்லாம் இப்பிடிக் கீழ கொட்டிப் பொறுக்க வைக்கிறதில உடன்பாடு இல்லை. ;( பெரிய மேசையில கொட்டிப் பொறுக்க வைச்சன். கீழ விழுந்தது எல்லாம் தூக்கிப் போட்டாச்சுது. குட்டீஸுக்கு பொறுக்கினதைச் சேர்த்து வைக்கிற மாதிரி ஆளுக்கொரு bag கொடுங்கோ. பொறுக்க வெட்கப்பட்டுக் கொண்டு நிற்கிற ஆட்களும் இருப்பினம். அவைக்கும் நினைவாக ஒரு bag நிரப்பிக் கொடுங்கோ.

கொட்டுறது யார் எண்டுறது... அதுவும் உங்கட வீட்டிலதான் கேட்கவேணும் நீங்கள். நான் முறைக்கு என்று செய்யேல்ல. சும்மா குடும்பத்தார் எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் சந்தோஷமாக இருந்தோம். யாரும் விடுபடக் கூடாது என்று, மாமா, மாமி, சித்தப்பா, பெரியப்பா என்று இருக்கிற நெருங்கின உறவுகள் எல்லோருக்கும் ஆளுக்கொரு இனிப்பு கொட்டுறது போல ரெடியாக்கி வைச்சன். குடையையும் மாறி மாறி எல்லாரும் பிடிச்சாங்கள். சின்னவருக்கு குட்டியாக ஒரு brush ;) வாங்கிக் கொடுத்து இருந்தேன். அவர் சுவாரசியமாக அதை வாயில வைச்சு விளையாடிக் கொண்டு இருந்தது நினைப்பு இருக்கு.

இனி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் (கலாச்சாரம் இல்லை எண்டாலும்) கட்டாயம் பொருத்தமாக ஒரு கேக் ஐஸ் பண்ணி வெட்ட வைப்பன் எண்டு நினைக்கிறன். கேக் இல்லாமல் என்ன கொண்டாட்டம்! ;))

‍- இமா க்றிஸ்

ஹா!!!!!!!!!!ய் தோழி இமா நீங்க பல்லுகொழுக்கட்டை பற்றி அழகா சொல்லியிருந்திங்க நீங்க குறிப்பு சொன்ன விதமே அந்த விழாவை சிறப்பிக்கிறமாதிரி இருக்கு பா.................. பல்லு கொழுக்கட்டை இதர பொருட்களோடு கொப்பி, பென்சில், ரூபா நோட்டும் சேர்த்து போடுவார்கள் முதலில் பாப்பா எதை எடுக்குதுன்னு பார்ப்பாங்க ரொம்ப சந்தோஷமான தருணம் அது. நானும் இலங்கை தான்

யாரது என்னை பல்லுக் கொழுக்கட்டை என்று கூப்பிட்டது! ;)))

//கொப்பி, பென்சில், ரூபா நோட்டு// ம்.. வேற என்ன? சொல்லுங்க, ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி வழக்கம் இருக்கும். தெரிஞ்சுகொள்ள விருப்பம். நான் முறைகள் எல்லாம் பாக்குறேல்ல, எனக்கு விருப்பமான மாதிரி நடத்தீருவன்.

//நானும் இலங்கை தான்// ;)))) அறுசுவைக்கு வந்து எல்லாருக்கும் எங்கட தமிழ் மறந்து போற மாதிரி இருக்கு. ;)) சொன்னால் அல்லது ப்ரொஃபைல் பார்த்தால்தான் தெரியுது. பாபு அண்ணா வாழ்க! ;D

‍- இமா க்றிஸ்

ஒரு விஷயத்தை கேட்டால் அதுவும் இமாவுக்கு தெரிஞ்ச விஷயமாக இருந்தால் இமா அதை விவரிக்கும் அழகிருக்கே மழலை பேச்சை கேட்பது போல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகான விளக்கம் இமா..

எங்க பக்கம் கொழுக்கட்டை செய்து கொழுக்கட்டையுடன் பேனா, ரூபாய், போட்டு பிள்ளைங்க எதை எடுப்பாங்கன்னு பார்ப்போம். வீட்டில் சொந்தங்கள் சேர்ந்திருக்கும் போது செய்வோம். இப்போலாம் எங்க சொந்தங்கள் சேர்ராங்க.
இமா நீங்கள் சொல்வதை கேட்டாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆஹா நாமளும் இப்படிலாம் செய்ய விட்டுட்டோம்னு தோணுது.

தளீ... ம். ;)))
//இப்போலாம் எங்க சொந்தங்கள் சேர்ராங்க.// ஆமாம், சந்தர்ப்பம் கிடைத்தால்தான் சேருவாங்க. நெருங்கிய உறவுகள் கூடுவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
~~~~~~~~~~~
குடை... இப்போதான் நினவுக்கு வருகிறது - பல்லுக் கொழுக்கட்டைக்கு என்று குட்..டியாக ஒரு கலர் குடை வாங்கி வைத்திருந்தேன். பிறகு நடக்க ஆரம்பித்ததும் அதைப் பிடித்துக் @கொண்டுதான் வெளியே கிளம்புவார். பழைய நினைவுகள் எல்லாம் மேலே வருகிறது. ;D

‍- இமா க்றிஸ்

பதில் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி...

ஹாய் இமா // அறுசுவைக்கு வந்து எல்லோருக்கும் எங்கட தமிழ் மறந்து போச்சே// அப்பா மதுரை இந்தியால தான் சொந்தங்ககாரங்க நிறைய பேர் இருக்காங்க.ஆகவே ரெண்டும் கலந்த கலவை நான் (*_*) யார் அந்த பாபு அண்ணா? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ........

//யார் அந்த பாபு அண்ணா?// ;)))))) admin
//ரெண்டும் கலந்த கலவை// ஆஹா!
வேறு எங்காவது சந்திக்கலாம் விஜி.

‍- இமா க்றிஸ்

எப்படியோ இன்று இந்த இழை என் கண்ணில் பட்டது. ஒரு சின்ன அப்டேட். :-)

இரண்டு பேத்திகளுக்கு பல்லுக்கொழுக்கட்டை கொட்டினோம். முன்பு நினைத்தது போல கேக் செய்யக் கிடைக்கவில்லை. ஆளாக்கு ஒவ்வொரு ஊரில் இருப்பதால் முதலாவது பிறந்தநாள் வரை தள்ளிப் போட்டதில் பிறந்தநாள் கேக் மட்டும்தான் செய்ய முடிந்தது. இருவருக்கும் ஒரு பிறந்தநாள் சட்டை தைத்தேன். பல்லுக்கொழுக்கட்டை கொட்டுவதற்காக ஒரு பாவாடை சட்டை, பொருத்தமாக க்ளிப், கழுத்துக்கு மாலை என்று செய்திருந்தேன். பாவாடை சட்டை பற்றி - என்னிடம் பயன்படுத்தாமல் நிறைய புதிய புடவைகள் இருந்தன. மூத்தவருக்கு மென்சிவப்பு நிறச் சரிகைப் புடவையிலும் இளையவருக்கு மெல்லிய நாவல் நிற சரிகைப் புடவையிலும் தைத்தேன்.
குடை - கண்ணாடி போல இருக்கும் நிறமில்லாத ப்ளாஸ்டிக் குடை ஒன்று வாங்கி அதன் ஓரங்களுக்கு மெல்லிய லேஸ் தைத்துவிட்டேன். லேஸ் பூக்களை குடையில் இடைக்கிடையே ஒட்டிவிட்டேன். குடைக்குள்ளும் அதன் பின்னாலும் நடப்பவை எதுவும் பார்வைக்கு மறையாமல் தெரிந்தது.
சும்மா எல்லொரும் சந்தோஷமாக இருக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது. என் மருமக்கள் வீட்டார் வேற்று மொழி பேசுபவர்கள். அவர்களுக்கு இது புதினமான விடயம். இரண்டாவது பேத்தியின் கொண்டாட்டத்தின் போது பெரிய பேத்திக்கு 3 வயது. அவர் கையிலும் ஒரு தட்டை கொடுத்துக் கொட்ட வைத்தேன். இரு முறையும் மாமனார் இல்லாததால் பெரியப்பா / சிற்றப்பா தான் குடை பிடித்தார்கள். அவர்களுக்கு மட்டும் தான் ஒழுங்காக குடை சுற்றவும் தெரிந்திருந்தது. :-)

முதல் முறை ஐந்து சின்னவர்கள் வந்திருந்தார்கள். மடிக்கக் கூடிய சிறிய கூடைகள் கொண்டு போயிருந்தேன். ஆளுக்கொரு கூடையில் இனிப்புகளைச் சேகரித்தார்கள். இரண்டாவது பேத்தியின் கொண்டாட்டத்தின் போது பெரியவர்கள் மட்டும் தான் இருந்தோம். குடும்பத்திற்கொடு பெரிய பையைக் கொடுத்தேன். பெரியவர்களே பொறுக்கினார்கள். :-) பெரிய பேத்திக்கு மட்டும் ஒரு பிரம்புக் கூடை - அது அவருக்கு வசதியாக இருந்தது.

வெவ்வேறு அளவுகளில் ஸ்னப்லொக் பைகள் வாங்கி வைத்திருந்தேன். கொழுக்கட்டைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு பையில் போட்டு வைத்தேன். மீதி இனிப்புகளில் உறைகளில் இல்லாதிருந்தவற்றையும் அளவான பைகளில் போட்டு எடுத்துப் போனேன்.

கொட்டிய இனிப்புகள் - m&m & சுல்டானாஸ் (குட்டிப் பெட்டிகளில் வருபவை), கற்கண்டு, ஜெம் பிஸ்கட். மிச்சம் எல்லாம் தளகுளி போல ஏற்கனவே கடதாசியில் சுற்றி இருந்தவையாகப் பார்த்து வாங்கினோம்.

வெகு காலத்தின் பின் தமிழில் நீளமாகத் தட்டிருக்கிறேன். பிழைகள் இருக்கும். பொறுத்தருள்க. நாளை வந்து பார்த்துத் திருத்தி விடுகிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்