வல்லாரை கீரை டானிக்

ஹலோ தோழிகளே என் மகன் 3வது படிக்கிறான் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை படிப்பில் 0 மார்க் தான் வாங்குகிறான் என் பக்கத்து வீட்டு பெண் வல்லாரை கீரை டானிக் கொடுக்க சொன்னார் ஏனென்றால் இங்கு வல்லாரை கீரை கிடைப்பதில்லை யாராவது அந்த டானிக் உபயோகிக்கிறீர்களா அல்லது அதைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும்

தனியே ஞாபகசக்திதான் பிரச்சினை என்று நீங்களாக முடிவு செய்ய வேண்டாம் சங்கீதா. குறிப்பிட்ட பாடத்தில் ஈடுபாடு இல்லாமலிருக்கலாம் அல்லது ஆசிரியரைப் பிடிக்காமலிருக்கிறதோ!

நீங்கள் உங்கள் மனக்குறையைக் காட்டும்விதமாக 'பூச்சியம்' என்னும் எண்ணைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது உண்மையாகவே 0 எண்ணிக்கைதான் வாங்குகிறாரா!

பதில் எதுவும் எழுதாமல் வெற்றுத்தாளைத் தான் கையளிக்கிறார் என்றால் மருத்துவரிடம் அழைத்துப் போய் அபிப்பிராயம் கேட்பதே நல்லது.

வல்லாரை வேண்டுமானால் நீங்களே வளர்க்கலாம். கீரை வளர்ப்பதற்கு கிளைகள் அல்லது விதைகள் தேவை.

டானிக்... நீங்களாக எதையும் கொடுக்க வேண்டாம். உணவு வேறு மருந்து வேறு. ஒரு பிடி கீரையை உண்ணும் போது, அது வாயில் அரைபட்டு இரைப்பையில் அரைபட்டு பிறகு சுரப்புகளால் உடைக்கப்பட்டபிறகு குடலினால் உறிஞ்சப்படும் போது உடலுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்துக்களோ கனிமங்களோ எதுவானால் வெகு குறைவான அளவில் இருக்கும். அதையே 'டானிக்' வடிவில் எடுக்கும் போது செறிவு அதிகமாக இருக்கும். எதுவும் தேவைக்கு மிஞ்சிப் போனால் நல்லதில்லை. மருத்துவ ஆலோசனை இல்லாமல் கொடுக்க வேண்டாம்.

ஈரலில் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் வல்லாரை மாத்திரைகள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது என்று ஒருமுறை எங்கோ வாசித்திருக்கிறேன். வல்லாரையை அதிகம் உண்ணும் போது வெயிலில் செல்வதைக் குறைப்பது நல்லது என்றும் வாசித்திருக்கிறேன். சிங்களத்தில் வல்லாரையை 'கொட்டுகொல' என்பார்கள். அதே பெயரில் இங்கு மாத்திரைகள், டானிக்குகள் கண்டிருக்கிறேன். நீங்கள் gotu kola என்று கூகுள் செய்து படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்