குழந்தை சளி......உதவுங்கள்

என்னுடைய 32 நாள் குழந்தைக்கு சளி பிடித்து மிகவும் கஷ்ட படுகிறாள்.....மிகவும் கஷ்டமாக உள்ளது.உங்களுடைய ஆலோசனைகள் கூறுங்கள்.......நானும் என் கணவரும் தான் குழந்தையை பார்த்துக் கொள்கிறோம் .எனவே தயவு செய்து குழந்தை வளர்ப்பு பற்றி உங்கள் அனைத்து ஆலோசனைகள் கூறவும்,இது என்னை போன்ற புது அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

whoever having this heart get angry on bad events.

my son is 10mths old, he's offnly getting cold and ill.also he's having low weight 7 only.pls advice me to get my son's weight.also sum 'kai vaithiyam' to cure cold.

என்னாச்சுங்க காமிலா.கோவமா இருக்கீங்க போல

ஜன்னல் கதவை எல்லாம் மூடி மூடி வைக்க கூடாதுங்க..நல்ல சுத்தமான காத்து வர விடனும்.மஞ்சள் தேன் கலந்து கொடுக்கலாம்.இஞ்சி சாறு தேன் கொடுக்கலாம் ஆனால் சின்ன குழந்தை பாத்து கொடுங்க..

8 மாத குழந்தைக்கு மூக்கினுள் சளி இருந்தால் அதை நாம் அவர்கள் மூக்கினுள் ஊதி எடுக்கலாமா???இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?????pls solungalen thozhi...

என் குழந்தைக்கு 1 1/2 வயது சளி அதிகமா இருக்கு சளி சிரப் கொடுத்தால் அப்போதைக்கு நிவாரணம் கிடைக்குது திரும்ப வந்துருது மூக்கு சளி அடைக்குது அதுனாலே பால் குடிக்க சிரம படுறா இரவு மட்டும் தான் தாய்ப்பால் கொடுப்பேன் பகல் பசும்பால் ஜிப்பர்ல தான் பால் குடிப்பா அதுவே குடிக்க முடியலே சளியால சாப்பிட மாட்டேங்குற ஏதாவது கைவைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே

எங்க வீட்ல கற்பூரவல்லி ,தூதுவலை செடி இருக்கு இது குழந்தையோட சளிக்கு உதவுமா அப்படினால் எப்படி அதை கொடுப்பது

என் குழந்தைக்கு 5 மாதங்கள் ஆகிறது.குழந்தை பால் குடிக்கவே மாட்டிகிறான்.பால் கட்டி ஆகி ரொம்ப கஷ்டமா இருக்கு.உங்கள் ஆலோசனை கூறுங்கள்

என்னுடைய குழந்தைக்கு இப்போ 13நாள்..
தூங்கும் போது ஒரு விதமான சத்தம் வருது நெஞ்சுக்கு குழி உள் நோக்கி போகுது
டாக்டரிடம் காட்டிய போது குட்டி நாக்கு நீளமாக இருப்பதால் அந்த சத்தம் வருது 3மாதங்களில் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனாலும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது சில பேர் சளின்னு சொல்லுறாங்க ஒன்னுமே புரிய மாட்டேங்குது.. இதுக்கு என்ன செய்யலாம்..

பயப்பட வேண்டாம். இப்படி இருப்பது உண்டுதான். சரி ஆகிவிடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்