இரவில் தாய்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

அன்புச் சகோதரிகளே

வணக்கம்.என்னுடைய மகனுக்கு ஒரு வயது ஆகிரது.அவன் இன்னும் இரவில் நான்கு தடவை விழித்து தாய்பால் குடிக்க்கின்றான்.பகலில் குடிப்பதில்லை.இதனை நிறுத்துவது எப்படி?எனக்கு இதை தவிர்க்க வழி சொல்லுங்கள்.

நன்றி
கவிதா

இதுவரை என் மகன் புட்டிபால் குடிப்பதில்லை.ஆனால் தூக்கத்தில் கொடுத்தால் குடிப்பான்.ஆனால் மருத்துவர்கள் இரவில் பால் தேவை இல்லை என்று கூறுகிறார்கள்.அதனால் நான் குடுப்பதில்லை.இனி கொடுக்கின்றேன்.
மிகவும் நன்றி
கவிதா

மாலை நேரத்தில் தூங்க வைக்காதீர்கள்.அப்புறம் நீங்களும் அவனோடு சேர்ந்து நன்றாக ஓடி பிடித்து விளையாடுங்கள்.அப்ப நல்லா பசி எடுக்கும்.நல்லா சாப்பிடுவார்.மாலை(5 அல்லது 6 மணி) சிற்றூண்டியோ அல்லது பாலோ கொடுத்த பின் ஒரு 3 மணி நேரம் கழித்து(8 அல்லது 9 மணி) இரவு சாப்பாடு கொடுங்கள்.சரியா படுக்க போகும் முன் குழந்தைக்கு கொடுக்கும் பால்(தாய்ப்பால் அல்ல)கொடுக்க பழகி வாருங்கள்.இரவில் நடுநிசியில் எழுவதை தவிர்க்கலாம்.

மாலை நேரங்களில் நான் வாக்கிங் செல்வேன். என்னுடன் வந்து நன்றாக விளையாடுவான்.நீங்கள் சொல்வதுபோல் தான் நான் கொடுப்பேன்.இரவில் பாலுக்கு பதிலாக cerelac கொடுப்பேன்.ஆனாலும் இரவில் எழுகின்றான்.எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.இரவில் 10 மணிக்கு தான் தூங்குவான்.ஆனாலும் 12 மணிக்கு எழுந்துவிடுவான்.

நன்றி
கவிதா

ஹாய் கவிதா
கொஞ்சம் மனசை கல்லாக்கினால் 1 வாரத்தில் மாற்றலாம்.எழுந்தால் பால் கொடுக்காமல் கொஞ்சம் தண்ணீரை கொடுங்க.1 வாரம் பன்னினாலே எழுவது குறையும் நாம் எழுவதில் பலநில்லை என்பதை புரிந்து கொள்ளும்
பெரும்பாலும் அது பசியால் எழுவதில்லை சும்மா ஒரு கம்ஃபர்டுக்காக தான் எழுது.அதை முதலிலேயே பாலூட்டாமல் கொஞ்சம் தலையை வருடி தட்டி தட்டி தூங்க வைக்க முயற்சிக்கலாம் நாளடைவில் சரியாகிவிடும்.
சிறுநீரை நன்றாக இழுக்கும் படியான டயபரை போட்டு விடுங்க .சிலர் குழந்தையின் டயபர் மூட்டை போல ஆகும் வரை அப்படியே விடுவாங்க பாவமா இருக்கும் .1 முறை யூரின் போனாவே கழட்டி விடுவது தான் நல்லது.

எப்பவுமே பா நமக்கே கூட நாம சாப்பிடும் உணவு நமக்கு பத்தவில்லை என்றாலோ,திடீர்னு முழிப்பு வந்தா நமக்கே பசி எடுக்கும்.சில குழந்தைங்க அப்படி தான் இருப்பாங்க.நீங்க தான் அவன் தூங்கும் போது புட்டிபால் குடிக்கிறான்னு சொல்றீங்கல நீங்க படுக்க போகும் போது பால் ரெடியா கலக்கி வைத்துகோங்க.

அவன் அழும் போது கொடுங்க.தினமும் அவனிடம் சொல்லுங்க,பாருடா செல்லம் நீ இரவு நல்லா சாப்டா தான் நல்லா தூக்கம் வரும்.நீ நைட் 12 மணிக்கு எழுந்தாகூட அழக்கூடாது.இப்பவே பால் குடிச்சிடு.அப்பரும் உன்ன எல்லாரு badboy சொல்லுவாங்க.அப்படின்னு சொல்லி வைங்க.நாம தினம் சொல்ல சொல்ல அவனுக்கே புரிஞ்சிடும்.இப்பவே சொல்ல ஆரம்பிக்காதீங்க.ஒரு 6 மாசம் போகட்டும்.

ஏன்னா என் பொண்ணு படுக்கையில் உச்சா(பாத்ரூம்) போய்டுவா,அப்ப நான் ஒரு 2 நாள் தான் சொன்னேன்,அப்புறம் அவளே போக ஆரம்பிச்சிட்டா.அப்புறம் இன்னும் ஒன்னு இருக்கு.பாப்பா நீ ஒழுங்கா பாத்ரும்ல போய் உச்சா போனீன்னா,உனக்கு ஒரு சாக்லேட் என்று சொன்னேன்.,அதே மாதிரி அவர்கள் சரியா செய்தால்,சொன்ன வாக்கை காப்பாத்த்னும் அதான் பா(சாக்லெட்) கொடுத்துடனும்.நான் 4 நாள் தான் கொடுத்தேன்.ஆனா நாம் தினமும் சொல்லனும் அதான் முக்கியம்,இப்ப இருக்கிற குழந்தைங்க ரொம்ப புத்திசாலிங்கபா.ஆனால்,திருப்பி சொல்றேன் இதை 6-8 மாதம் கழித்து ட்ரை பண்ணுங்கள்.

ஆமாங்க சுமஜ்லா, இப்போ குழந்தைங்க எல்லாம் ரொம்ப உஷார்.நான் ஒரு நாள் அழுகட்டும் என்று விட்டு விட்டேன்.45 நிமிடம் விடாமல் அழுதான்.மறுபடியும் பால் கொடுத்துதான் தூங்க வைத்தேன்.சுகன்யா சொல்வது போல இன்னும் 2 மாதங்கள் கழித்து முயற்சி செய்யலாம் என்ரு விட்டுவிட்டேன்.புட்டி பால் கொடுத்தாலும் அவன் அழுகின்றான்.பகலில் அவனே மறந்து விட்டான்.பகலிலும் பால் குடித்துதான் தூங்கினான்.

ஆனால் இப்போ ரைம்ஸ் பார்த்து கொண்டே தூங்கி விடுகின்றான்.அதனால் இன்னும் சில நாள் போனால் பகலில் நன்றாக விளையாடி இரவில் உறங்கி விடுவான் என்று கனவு காணுகிறேன்.
நன்றி தோழிகளே
கவிதா

எனக்கும் இதே பிரச்சனை தான்..என்ன செய்வது என்றே புரியவில்லை. என் மகனுக்கு 10 மாதம் ஆகிறது. ஒழுங்காக 9 க்கு தூங்கி விடுவன். பின்பு தான் பிரச்சனை ஆரம்பம். திடீரென்று night 12/1 மனிக்கு எழுந்து அழுவான். பால் குடுத்தாலும் குடிக்க மாட்டான். காலில் போட்டு தட்டி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் நடந்து கொண்டு இருக்கனும். இல்லை என்றால் அழுவான். இப்படியெ 1.30/2 மனி நேரம் ஒடிவிடும். அப்புறம் தன் தூங்குவான். இந்த பழக்கத்தை எப்படி மாட்றுவது என்றே புரியவில்லை.

hi
me too had the same problem with my baby..
sorry to type in english.. i dont have facility to type in tamil..
now he s 1 yr..and sleep on his own..one time he will wake up at the night for bottle feed..
me too breast feeding till 1 yr..10 days back only i did stop feeding and changed to bottle..first day he had bottle milk ..after did drink milk ..he was crying for 5 min..then he woke up litterly..but he fall asleep on his own after 45min without disturbing me..second day 10 min..third day he used to bottle..
so its not a matter to change breast feed into bottle...but stopping bottle s little problem...i think so..
first he has to learn sleep on his own at the night..u may laydown with baby...and may tell story or rhymes watevevr baby likes..otherwise u can pat on his back..but dont make him sleep with bottle..me too had same problem at 10th month..he woke up 3 times at night for feeding..when he grows , it will stop..3 to 2 and 2 to 1..now he wakes up only one time..rarely 2 times..
but try to change breast feed in to bottle..because nowadays babies r brilliant..so u cant stop feeding when he feel comfortness and taste of breast milk..
i think this may help u better.
regards
kavi

hi,
இரவு சாப்பிடும் உணவு அவனுக்கு பத்தவில்லை. ஒரு வயது ஆகி விட்டால் ரசம் சாதம் கொடுக்கவும்.

படுக்க போகும் முன் குழந்தைக்கு பால் கொடுக்கவும்

இரவு எழுந்தால் பால் கொடுக்காமல் கொஞ்சம் சுடுதண்ணீர் கொடுங்க. நாக்கு dry ஆகலாம்.

தாய்பால் நிறுத்த

1) இரவில் வேப்ப எண்ணெய்யை நிப்புள் சுற்றி தடவவும்

2) ஸ் ஸா அப்பா ஸ்ஸ் அப்படி சொல்லி நிப்புள்ளை எடுத்து விடவும்

எழுந்தால் கொஞ்சம் பால் அல்லது சுடுதண்ணீர் கொடுங்க.

ஹாய் சனிதா
அந்த செகன்ட் பாயின்ட் எனக்கு புரியல..அது என்ன?

மேலும் சில பதிவுகள்