கச கசா, சப்ஜா விதை இரண்டுக்கும் என்ன வித்தியாசம். இலங்கையில் கச கசா என்பதைத்தானா இந்தியாவில் சப்ஜா விதை என்கிறார்கள்? அப்போ இந்திய கச கசா எப்படி இருக்கும்?(பொப்பி சீடையா கசகசா என்கிறார்கள்?)
??????????????????????????????????????????????????????
-நர்மதா :)
PS:ஜலீலாக்கா, இப்பதான் விக்கிபீடியாவில் சப்ஜாவிதையை தேடி பார்த்தேன். பார்த்தால் அது நாங்கள் சொல்லும் கச கசா போல உள்ளது அதுதான் பொதுவாக இந்த கேள்வியை இங்கு போட்டேன்.
கசகசா
கசகசா போப்பி சீட் தான்..அதை குருமாவுக்கு அரைத்து ஊற்றலாம்..சப்ஜா விதை எள் போலிருக்கும் அதை தண்ணியில் போட்டால் ஊறினால் சாம்பல் நிறமாக இருக்கும்.ஜூஸ்களில் போடுவார்கள்..ஃபலூடா செய்யலாம்
அன்பின்
அன்பின் தளிகா பதிலுக்கு நன்றி. ஓ.......நாங்கள் அந்த எள் போலிருப்பதைத்தான் இலங்கையில் கசகசா என்போம். அங்கு பொப்பி விதைகள் பாவனையில் இல்லை. அய்யோ! நான் மனோகரி மேடத்தின் அதிரசத்திற்கும், லண்டன் வற்றல் குழம்பிற்கும் எங்கட கசகசாவல்லோ போட்டன் :))அப்பவே யோசித்தனான். லண்டன் வற்றல் குழம்பு செய்யும்போது, இது ஏன் போட வேண்டும் என்று. பிறகு ஒரு திக்னெஸ் வாறதுக்கா இருக்கும் என்று நினைத்துவிட்டு போட்டன். :)) ஒரே சிரிப்பா வருது. :))
எனது இந்திய நண்பி ஒருவர் இடமாற்றலாகி சைனா செல்லும் பொது எனக்கு கொஞ்சம் ஸ்பைஸஸ் தந்து விட்டு சென்றவா. அதில் போப்பி ஸீடும் இருந்தது. அப்ப நினைத்தேன் அது வெள்ளை கடுகாக்கும் என்று. பிறகுதான் தெரியும் அது பொப்பி ஸீட் என்று. இப்பவும் ஒரு கெஸ்ஸிங்கில்தால் கேட்டேன், இதுதான் கசகசாவா எண்று. :)
-நர்மதா :)
sabja seed white colour
Alhamdulillah
sabja seed white colour -where is it available in Alain? plz help me sisters
Mashaallah
Alhamdulillah this is not a
Alhamdulillah
this is not a poppyseed.this one is used for rosemilk. so plz tellme sisters where is it available in alain?
Mashaallah
லிச்சி-ரம்புட்டான்
லிச்சியும், ரம்புட்டானும் ஒன்றா?
அன்புடன்
ஜெயா
லிச்சி
லிச்சியும் ரம்புட்டானும் வேற வேற ஜெயா.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா இன்னொரு கேள்வி
நன்றி கவிசிவா. இன்னொரு கேள்வி. நான் சமீபத்தில் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு வீட்டில் (பள்ளியாடி அருகில்) ஒரு மரத்தில் நிறைய பழங்களைப் பார்த்தேன். இதுவரை பார்த்திராத பழங்கள். மஞ்சள் நிறம். இலைகளே இல்லாத அளவுக்கு முழுதுமாக பழங்கள். அதன் வடிவம் ஒரு instrument-ன் வடிவம். ஜால்ரா என்று சொல்வோமே. அதன் ஒரு பக்க வடிவம். பார்க்க அழகாக plastic-கினால் செய்தது போல் இருந்தது.
நேரமின்மையால் அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் வந்துவிட்டேன். அதன் பெயர் தெரியுமா.
அன்புடன்
ஜெயா
Jeya
ஜெயா, நீங்க சொல்வது பெல் ஃபுரூட்(Bell Fruit) என்று நினைக்கிறேன்,தைவானில் இது பிரபலம்,ஆனால் எனக்கு தெரிந்து ஆப்பிள் நிறத்தில் சிவந்து காணப்படும்,இதை அங்கு வாக்ஸ் ஆப்பிள்(Wax Apple)
(பிளாஸ்டிக் போன்று பளபளப்பாக இருப்பதால்) என்றும் அழைப்பார்கள்.ஆனால் அதன் வடிவம் எல்லாம் நீங்கள் சொல்வது போன்று தான் காணப்படும்.
ஜெயா
ஜெயா நீங்கள் சொல்வது எந்த பழம்னு சரியா கண்டுபிடிக்க முடியலை. பொதுவா ஜாம்பைக்காய் நீங்க சொல்லும் ஷேப்பில் இருக்கும். வாணியும் பெல் ஃப்ரூட் னு அதைதான் சொல்லியிருக்காங்க.
ஜாம்பைக்காயில் ரெண்டு மூணு வெரைட்டி இருக்கு. இளம் பிங்க் நிறத்தில் கொஞ்சம் சைஸ் சின்னதா இருக்கும். இன்னொன்னு டார்க் பிங் நிறத்தில் கொஞ்சம் பெருசா இருக்கும். இன்னொனு க்ரீம் நிறத்தில் இருக்கும். நீங்க சொல்வதுபோல் நிறைய காய்க்கும். இந்த மூணுதான் நான் பார்த்திருக்கிறேன். மஞ்சள் நிறத்தில் பார்த்தது இல்லை.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஜாம்பக்காய்
ஜாம்பக்காய் எனக்குத் தெரியுமே. அது இளஞ்சிவப்பு, கடுஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் பார்த்திருக்கிறேன். Bell (சுரைக்காய்) வடிவத்தில் இருக்கும். அது இல்ல கவிசிவா நான் சொன்னது. இது நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேலும் அடிப்பக்கம் flat-ஆக இருந்தது.