அறுசுவையால் அடைந்தவை

அறுசுவையின் மூலம் நீங்கள் அடையும் பயன்கள் உங்கள் வாழ்வில் எற்பட்ட சிறு சிறு மாறுதல்கள் பெற்ற பாராட்டுகள் இன்னும் அறுசுவையைப்பற்றிய நல்ல நல்ல விடயங்களை இங்கே வந்து சொல்லுங்கள்.

நானே ஆரம்பிக்கிறேன்.அறுசுவை பார்ப்பதற்கு முன் எனக்கு அவ்வளவாக சமைக்க வராது.திருமணத்துக்கு முன் அக்கா தங்கைகள் என்று நாங்கள் பெரிய குடும்பம். நான் சமைக்க வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் வந்து விடும்.ஏதோ சமைத்து வைத்துவிட்டு எல்லோரும் சாப்பிடும் நேரம் பார்த்து குளிக்க போய்விடுவேன்.உள்ளே பூட்டிக்கொண்டு குளித்துக்கொண்டே இருப்பேன். அவ்வளவு ஏளனம் நடக்கும் அந்த மேசையில்.அப்படி சுவையாக இருக்கும் என் உணவு.நான்கூட பழையது கிடைக்கிறதா என்று தேடுவேன்.நாளடைவில் கண்டு பிடித்தும் விட்டார்கள்.அது இருக்க.

இப்போது அறுசுவையின் புண்ணியத்தில் என் சமையலை பார்த்த உடனேயே வாவ் என்று பாராட்டுத்தான்.பல சமயங்களில் ரெஸ்ரோறண்ட் சுவையை மிஞ்சி விடுகிறேனாம்.குடும்பத்தில் அவரவருக்கு பிடித்ததை அழகாக செய்து கொடுப்பதால் ஒருவித அணைப்பு அதிகமாவதை நீங்களும் உணருகிறீர்களா?இப்போ என் நன்கு சமைக்கத்தெரிந்த சகோதரி கூட வித்தியாசமான சுவை அறுசுவையி கிடைப்பதாக கூறி புறோக்கோலியை வாங்கி வைத்தேன் நெட் வேலை செய்யவில்லை.உடனே சரிசெய்யுங்கள் என்று அவஸ்தைப்படும் நிலையில் இருக்கிறார்.ஓவரா கதைக்கிறமோ...இனி உங்கள் முறை

சுரேஜினி

நான் மகிழ்ச்சியாய் ,துயரமாய் இருக்கும் போது எனக்கு துணையாய் வருபவள் அறுசுவை.உலா வந்தாலே மனம் இலேசாகி விடும்,சமையல் குறிப்பு கூட அப்புறம் தான்.தேடினாலும் கிடைக்காத அருமைத்தோழிகள்,அவர்களை நினைத்தாலே உள்ளம் பூரிக்கிறது.அட்மி்னுக்கு நன்றி பல கோடி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அறுசுவை மிக மிக அருமை..... இதில் நிரைய தேழிகள் கிடைத்தார்கள். என்னுடைய மனச்செர்வுக்கு நல்ல உற்ர தேழியாக , தாய்யாக, சகேதரியாக இருகிரார்கல். இதில் பயனுல்ல தகவல்கள் உள்ளது. நான் கர்பத்திர்க்கு காத்திருப்பதால் எனக்கு ஒரு நல்ல அம்மாவாக இருகிரது. என்னுடைய சந்தெகங்கலுக்கு உடனை பதில் அளிபதர்க்கு நன்றி. நானும் என் கணவரும் தனியாக இருப்பதால் அறுசுவை எங்கல் குடும்பத்தில் ஒருவராக் உள்ளது. அறுசுவை இன்னும் பல பேருக்கு உதவ வேண்டும். "அறுசுவை ஒரு ஆல மரம். இதில் குரிப்பு களை தருபவர்கல் விழது, அதை பெற்றுகேள்பவர்கள் (நாங்கள்) அந்த ஆலமரத்தில் இளைபாரும் பறவைகள்." வாழ்க வளமுடன்....... வளர்க அதன் தென்டு.....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நானும் அருசுவையும்!!!

அருசுவை வருவதற்க்கு முன் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா? இணயத்தில் யார் எப்படி செய்தாலும் நமக்கு மட்டும் ஏன் நான்வெஜ் இப்படி சொதப்புது.. என் அம்மா நான்வெஜ் சமைக்க மாட்டார்கள்... சிக்கன் சமைத்தால் கிரேவி என்னவோ குணம் மணம் எல்லாம் இருக்கு.. ஆனா சிக்கன் மட்டும் நூல் நுல்லா இருக்கும் .. பாவம் என் ஹஸ்பண்ட்... பல நாளும் கேட்பார்... ஏன் இப்படி வருதுன்னு.. அப்புறம் ஒரு நாள் ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போனோம்.. அங்க என் கணவர் சிக்கனை ரசிச்சி ருசிச்சி சாப்பிடார்.. வந்தே ஒரு வெறி.. நானா சிக்கனா... அப்ப தான் தளிகா'ஸ் சிக்கன் பார்த்தேன்... செய்தது நல்லா வந்தது. ரெண்டு வாரம் கழித்து வேறு ஒரு நண்பரின் வீட்டில் பார்டி. ஒரு பெரிய டிரே நிறைய செய்தேன்.. மொத்தமும் காலி. அதில் பலரும் எப்படி இப்படி சாப்டா இருக்கு குக்கரில் செய்ததா.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கிராஜுவேட் ஆகி மீன்.. மட்டன்.. ஈரல்.. இப்படி எல்லாம் நல்லா வர ஆரம்பிச்சிடுச்சி... அப்புறம் இருக்கவே இருகாங்க நம் சகோஸ்...

சமையலில் நான் சுமார் ரகம் இல்லை.. ஒரு முறை சுவைத்தால் அப்படியே செய்திடுவேன்.. ஆனா நான்வெஜ் மட்டும் அருசுவை வந்துதான் ஒழுங்கா சமைக்கிறேன்...

நோ மோர் திரெட் சிக்கன்...

இது சமையலை பற்றி... அப்புறம் உங்க எல்லாருக்கும் என்னை பற்றி தெரியும். ரொம்ப ஜாலியா இருக்கு இங்க வந்தா... லேட்டஸ்டா.. வின்னி அக்காவின் காமெடி கெட்டுகெதெர்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அறுசுவையால் நான் அடைந்தவை
1.அருமையான தோழிகள்
2.நன்றாக சமைப்பேன் என்றாலும் மேலும் பல பல புது ரெசிப்பிகள் கற்றுக் கொண்டேன்.
3.தனிமை மற்றும் அதனால் ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் குறைந்தது.(என் கணவர் என் தொல்லையிலிருந்து தப்பித்தார் :))
4.காமடி பதிவுகள் படித்து வாய்விட்டு சிரிக்கிறேன்.சில காலம் சிரிப்பதையே மறந்திருந்தேன்.இலாவின் motivational quotes நிச்சயம் என் எண்ணங்களில் ஒருமாற்றம் கொண்டு வந்திருக்கின்றது.தேங்க்ஸ் இலா.

நன்றி அருசுவை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருசுவையால் அடைந்தவைகள்

1.பல விதமான சமையல் குறிப்புக்கள் தெரிந்துகொள்ளமுடிந்தது.

2. நம் எந்த சந்தேகத்திற்க்கும் உடனடியாக பல தோழிகள் பதில் கொடுப்பது

3.பல ஊர்,பல நாடுகளில் இருந்தும் அறுசுவையாலும்,கடவுளின் அருளாலும் பல அருமையான்,இனிமையான் தோழிகள் கிடைத்தது.

4அருசுவை இணையதள ச்ந்தேகத்திற்க்கு அட்மின் அவரிகளின் உடனடி பதில்..

இதுபோல பல விஷயங்கள் உள்ள்ன பா.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அருசுவையில் ....

1. மனசு கணக்கும் போது லேசாகிறது.

2. எல்லோரையும் வாழ்த்த பிடித்து இருக்கு.
3. எல்லோரும் என் வீட்டு சமையல் செய்து சந்தோச படுவதும் , பாராட்டை பெறுவதும் ரொம்ப பிடித்து இருக்கு.
4.ரொம்ப போர் அடிக்கும் போது எல்லோருடனும் சிரித்து கதைப்பது பிடித்துள்ளது.
5.குறிப்பு கொடுப்பது ரொம்ப பிடித்துள்ளது.
6.நிறைய பல நாட்டு தோழிகளின் அன்பும் ஆதரவும் கலந்த பேச்சு பிடித்துள்ளது
7.காமெடி, பட்டி மன்றம், சமையல், அறட்டை என்று எல்லோரையும் அட்மின் நிறைவு படுத்துகிறார்..
8.யாரும் இல்லாமல் ஏங்கி தவிக்கும் வெளி நாட்டில் வாழும் தோழிகளுக்கு நல்ல அன்னையாகவும்,சகோதரிகளாவும், தனிமையை போக்கும் மருந்தாகவும் இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அருசுவையில் அயராது புதுப்பித்து கொண்டு இருக்கும் அட்மின் (பாபு) மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

நான் வேலை செய்வது எனது தோழியின் browsing centreல். அதனால் நிறைய டைம் கிடைக்கும். நேரம் கிடைக்கும் பொதெல்லாம் அருசுவையில் தான் எனது வேலை. டைப் பண்ணி பழகுவேன். நிறைய சமையல் பத்தி தெரிந்து கொள்வேன். எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் அவங்க யாருக்கும் என்னை தெரியாது. அதிரா, தாளிகா, இலா, கவிசிவா,மனோகரி மேம், ஜலீலா மேம், ஆசியா மேம் இப்படி பல முகம் தெரியாத பேர். சாரி, சாரி முகம் தெரியாத friends.
முதலில் அருசுவை என்றால் வெரும் சமையல் என்று மட்டுமே நினைத்திருந்த என் தோழி கூட இப்போது எதாவது சிறிய விசயமாக இருந்தால் கூட (personal problem, skin problem, receipy, etc., ) எதற்க்கும் உன் அருசுவை friends கிட்ட கேட்டு பாரேன். கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு மாறி விட்டாள்.

திருமணத்திற்கு முன்பு சமையலறையை எப்போதாவதுதான் எட்டிப்பார்ப்பேன், அதுவும் சினந்து கொண்டு வெங்காயத்தோல் உரிப்பதற்கும், பாத்திரங்கள் கழுவிக்கொடுப்பதற்கும்.
திருமணமானபின் சமைக்க வேண்டிய கட்டாயம். சோறு, பிட்டு,இடியப்பம் செய்வேன்; ஆனால் அதற்கு தேவையான சாம்பார், கறிவகை, சட்னி, எப்படி செய்வதென்றே தெரியாது. அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டுக்கேட்டே சமைத்தேன். ஆனால் பாராட்டுகள் அவ்வளவாக கிடைக்கவில்லை.
பின் இணையத்தளத்தில் தேடிய பொழுதுதான் அறுசுவையைப் பற்றி அறிந்தேன். அதிலிருந்து பல உணவுவகைகளை விதவிதமாக செய்து பாராட்டுகள் பெற்றேன். எனக்குத்தெரிந்தவர்களுக்கும் இதனைப் பற்றிக்கூறி அவர்களும் பயன் அடைந்துள்ளனர்.
சமையலில் மட்டுமல்ல, அழகுக்குறிப்புகள் மருத்துவக்குறிப்புகளும் எனக்கு நிறையவே உதவி செய்திருக்கின்றன.
முன்பெல்லாம் என் தனிமையை விரட்ட என்ன செய்வதென்றே தெரியாமல் என் கணவருக்கும் அம்மாவிற்கும் (தொலைபேசியில்) தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தேன்.
இப்பொழுது, இங்குள்ள தோழிகள் ஏனையவர்களுக்குக் கூறும் அறிவுரைப்படி தினமும் உடற்பயிற்சிகள் செய்கின்றேன் ( குறுகிய காலத்திலேயே அதனால் என் உடல் மெலிந்து ஆரோக்கியமாகியது), அழகுக்குறிப்புகள் மூலமாகவும் நிறைய மாற்றத்தை என்னுள் உணர்கின்றேன். மற்றும் உடல் நல அறிவுரைகளும் எனக்குப் பெரிதும் உதவியது. இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
இதனால் யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ வெட்டியாக நேரத்தை செலவிடுவதற்கோ நேரமில்லை.

இன்று நான் மன அழுத்தம்,தனிமை,மனக்கவலைகள் என்பவற்றில் இருந்து விடுபட்டு வாழ்கின்றேன் என்றால் அதற்கு பெரிதும் உதவியது இந்த அறுசுவை எனும் தோழிதான். அதற்காக அறுசுவைக்கும் அதன் அங்கத்தவர்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் என்று சொன்னாலும் போதாது.

(முகம் தெரியாத அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னை சமையலில் திறம்படச்செய்ததற்கும் மற்றும் ஏனைய அறிவுரைகளுக்கும் நன்றிகள்)

Mrs Kanthan

மேலும் சில பதிவுகள்