தேதி: December 12, 2008
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.
பூக்கள்
ஃபோம்
இலைகள்
மெழுகுதிரிகள் (சாதாரண ஸ்டாண்டோடு)
தடிமனான அட்டை
சிறிய குண்டூசிகள்
கத்தரிக்கோல்
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஃபோமை தேவையான அளவில் நறுக்கிக் கொண்டு பின்னர் அதன் ஒரங்களை சிறிதளவு சமப்படுத்தி விடவும்

ஒரு தடிமனான அட்டையில் ஃபோமின் அளவை விட சிறிதளவு பெரியதாக வட்டமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

வட்டமாக நறுக்கி வைத்திருக்கும் அட்டையை ஃபோமின் அடியில் வைத்து படத்தில் காட்டியுள்ளது போல் குண்டூசிகளால் குத்திக் கொள்ளவும்.

ஃபோமில் வைத்து அலங்கரிக்க எடுத்து வைத்திருக்கும் இலைகளை அதன் ஓரங்களில் சொருகி வைக்கவும்.

வேறு ஏதேனும் வித்தியாசமான கண்கவர் இலைகள் வைத்திருந்தால் எல்லாவற்றையும் சேர்த்து ஃபோமைச் சுற்றி அலங்கரிக்கவும்.

இலைகளை வைத்து அலங்கரித்த பின்னர் ஆங்காங்கே பூக்களை சேர்த்து வைக்கவும்.

ஃபோமில் மெழுகுதிரி வைப்பதற்கு அடையாளங்கள் போட்டு வைத்துக் கொள்ளவும். ஃபோம் தெரியாமல் இருக்க ஃபோமை சுற்றி பூக்கள் மற்றும் இலைகளை வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.

சாதாரணமாக வைக்கும் கப் போன்ற மெழுகுதிரி ஸ்டாண்டில் மெழுகுதிரியை வைத்து அதை ஃபோமுக்குள் அழுத்தி விடவும். மென்மையான ஃபோம் என்பதால் எளிதில் அமுங்கி விடும். கடினமான ஃபோமாக இருந்தால் சிறிய துளை போட்டுக் கொண்டு அதில் வைத்து அழுத்தவும்.

ஃபோமை சுற்றி வைத்திருக்கும் பூக்களின் நிறத்திற்கு ஏற்றாற் போல் மெழுதிரியின் வண்ணமும் இருந்தால் அழகாக இருக்கும். மெழுதிரி எரியும் பொழுது அதன் அருகில் பூக்கள், இலைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

Comments
adipoli!
அடிபொளி
க்ரிஸ்த்மஸ் ஸ்பெஷலா?
Wow
Simple idea but very wonderful.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
விசா,
எவ்வளவு திறமைகள் உங்களிடம்,மிக்க ஆச்சரியம்+மகிழ்ச்சி. நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
விசா
நன்றாக இருக்கிறது விசா. அதிலும் முகப்பிலிருக்கும் அந்தப் படம் சுப்பர்ப். ஸீஸனுக்கு ஏற்றமாதிரி வந்திருக்கிறது. ;-)
இமா
- இமா க்றிஸ்
அலங்கரித்த மெழுகுதிரி ஸ்டாண்ட்
விசா,
அலங்கரித்த மெழுகுதிரி ஸ்டான்ட் மிக அழகு. உஙகள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.
தளிகா , amarakbaranthony, ஆசியா உமர், இமா, செபா
ஹலோ தளிகா மேடம் , நன்றி :-)
ஹலோ amarakbaranthony, தாங்க்ஸ் ;-)
ஹலோ ஆசியா உமர் மேடம், நன்றிகள் :-) உங்கள் பாராட்டுக்கள் இன்னும் செய்ய ஊக்குவிக்கின்றன .
ஹலோ இமா மேடம், நன்றிகள் :-)
ஹலோ செபா, ரொம்ப நன்றி :-)
எல்லோரும் தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள், என் லாப்டொப் வேலை செய்ய மறுத்துவிட்டது.
அன்புடன்,
விசா
hai
hai visa,
unga karpanai thiran romba nalla irukku.
nan arusuvai paguthikku pudhusu ennaium ungalla oruthia sethupingala.
radhikasuresh
(bahrain)
radhikasuresh
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta