தேதி: December 2, 2007
குழந்தைகளைக் கொண்டு செய்ய வைக்கக்கூடிய இலகுவான, மிகவும் அழகான மீன் இது. இதனை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. நர்மதா அவர்கள் செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பழைய சீடீகள் - 2
ஃபோம் (foam sheets) - பிடித்த நிறங்கள்
பிளாஸ்டிக் கண்கள் - 2
ரிப்பன் / நூல் - 3"
கோந்து (glue)
வெள்ளை காகிதம் - 1
பென்சில் - 1
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராய் எடுத்து வைக்கவும்.

ஒரு வெள்ளை காகிதத்தில் சீடீயை வைத்து வட்டம் வரைந்து பின்னர் அந்த வட்டத்தை மீனின் உடம்பாக கருதி அதற்கு ஏற்றவாறு வாய், இறக்கைகள், வால் ஆகியவற்றை வரையவும்.

பின்னர் வரைந்த தாளை ஃபோமில் வைத்து தனித்தனியே (பிடித்த நிறங்களில்) பென்சிலால் அழுத்தமாக வரையவும்.

இப்போது ஃபோமில் வரைந்த உருவம் பதிந்திருக்கும்.

பின்னர் அவற்றை கத்தரிக்கோலால் வெட்டிக் கொள்ளவும். (டிஸைனர் கத்தரிக்கோலாயின் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.) பக்கச் செட்டைகளுக்கு (இறக்கைகள்) 6" X 4" நீளமான ஒரு ஃபோம் துண்டையும் வெட்டிக்கொள்ளவும்.

பின்னர் ஒரு சீடீயில் மேல் செட்டை வரும் இடத்திற்கு அருகாமையில் ரிப்பன் / நூலை மடித்து ஒட்டவும். (லூப் போல)

பின்னர் வெட்டிய வால், செட்டைகளின் ஓரத்தில் கோந்து பூசி சீடீயுடன் சேர்த்து ஒட்டவும்.

பின்னர் அதன் மேல் மற்றொரு சீடீயை வைத்து ஒட்டவும்.

பின்னர் இரு பக்கமும் கண்களை வைத்து ஒட்டவும்.

பக்க செட்டைக்கு வெட்டிய நீளமான ஃபோமை விசிறி மடிப்பாக மடித்து கட்டவும்.

பின்னர் அதை சீடீகளின் நடு துவாரத்தினூடாக கோர்த்து எடுத்து கட்டியதை கழற்றி விடவும்

இப்போது அழகான சீடீ மீன் தயார். இதனை ஒரு கயிற்றில் கட்டி விரும்பிய இடத்தில் தொங்க விடலாம். Wind Chime இன் அடியில் கட்டி sun catcher ஆகவும் வைக்கலாம்.

Comments
dear நர்மதா
என்ன சொல்ல நர்மதா?நாங்கள் நர்மதாவை இங்கு கிடைக்க பாகியம் பன்னியிருக்கோம்....மேல லெட்டூஸ் கீழ மீன் ரெண்டும் அழகோ அழகு...நீங்க அனுப்பிட்டே இருங்க நிறைய..நாங்க பே னு பாத்து ரசிக்கிரோம்(அப்பப்ப செஞ்சுபாக்குரோம்):-)
very nice
hi Narmatha how are u? really superb
ஆர்ட் & க்ராஃப்ட்
நர்மதா, வரப்போகும் ஹாலிடேஸில் என் பெண்ணை எப்படி என்கேஜ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது நல்ல ஐடியா கிடைத்துவிட்டது. இந்த மீனை செய்துபார்க்க போகிறோம். உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
மிகவும் நன்றி
பாராட்டுக்கு மிகவும் நன்றி தளிகா, ஸ்வேதா & வானதி
-நர்மதா :)
art & craft
Dear madam
really very superb thanks madam for giving such a nice cd fish
with regards
miruna
with regards
miruna
நர்மதா சூப்பர்
நர்மதா உங்கள் கற்பனை திறனுக்கு அளவே இல்லை. உங்கள் திறன் வாழ்க! வளர்க
ஜானகி
Hi Narmada,
Nice one...can keep my 5 yr old engaged. Thanks.
நர்மதா
மிக அழகாக இருக்கிறது நர்மதா. உங்கள் கற்பனை அற்புதம்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
சிடி(CD) கொண்டுமீன் செய்வது எப்படி?
நர்மதா,
சிடியில் நீங்கள் செய்த மீன் மிக மிக அழகாக இருக்கிறது. சுலபமாகச்செய்யவும் முடியும். பாராட்டுக்கள்.
செபா
சி.டி மீன்
இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த சி.டி மீனின் படம்
<img src="files/pictures/cd fish.jpg" alt="picture" />
I LOVE ARUSUVAI.COM
I LOVE ARUSUVAI.COM
I LOVE ARUSUVAI.COM
IT'S VERY NICE
IT'S VERY NICE
I LOVE ARUSUVAI.COM
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
சீடீ மீன்கள்
மீண்டும் இந்த வாரம் சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். வெகுவாக ரசிக்கிறார்கள். ஒரு சின்னவர் தன் தம்பிக்குப் பிறந்தநாட் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அன்று வகுப்பிற்கு வர இயலாது போனவர்கள், தங்களுக்குத் தனியாகச் சொல்லிக் கொடுக்க இயலாதா என்று வந்து கேட்டிருக்கிறார்கள். :-)
ஃபான்ஸ் க்ரூப்பில் இன்று படங்கள் இரண்டு பகிர்ந்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்