கேக் சைவமா? அசைவமா?

கேக் முட்டை சேர்த்து செய்யப்படுவதால், அது சைவ உணவா? அசைவ உணவா? கேக் அசைவம் என்றால் கேக் பற்றி இவ்விடம் கேள்விகள் எழுப்பலாமா?

கேக்கில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலான கேக்குகள் முட்டை சேர்த்து செய்யப்பட்டாலும், முட்டையில்லா கேக்குகள் (eggless cakes) தற்போது பேக்கரிகளில் நிறையக் கிடைக்கின்றன. கேக் அசைவமா? சைவமா? என்பது, நீங்கள் முட்டையை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்களுக்கு முட்டை அசைவம் என்றால், முட்டை சேர்த்து செய்யப்படும் கேக்குகள் அசைவம்தான். (அதுசரி, இப்பதான் முட்டையை சைவத்தில சேத்துட்டாங்களாமே! யார் சேர்த்ததுன்னு கேக்காதீங்க..)

கேக் சைவமாகவோ அசைவமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். தயவுசெய்து கேக், பிஸ்கட் சம்பந்தமான கேள்விகளை இங்கே கேட்க வேண்டாம். அவற்றுக்கென்று தனிப்பிரிவு உள்ளது. பார்வையாளர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தகவல்களை வகைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் பல பிரிவுகளாகப் பிரித்து உள்ளோம். அந்தந்த தலைப்புகளின் கீழ் அவை சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்கவும். இது அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

அசைவத்தில், ஆடு, மாடு, கோழி, முட்டை, வாத்து என்று அனைத்து அசைவ உணவுகளைப் பற்றியும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

என்னை பொருத்தவரை கேக் அசைவமே ஏனென்றால் நாம் அசைவத்துக்குள் எதை சேர்க்கின்றோம் , உயிர் ஒன்று கொல்லப்பட்டு நாம் உண்பவற்றையே , அதே போல முட்டையும் ஒரு உயிர்தான் அதில் இருந்துதானே எம்மால் ஒரு கோழியையே பெற்ருக்கொள்ள முடிகின்றது.அப்படியான உயிர் ஒன்ரை நாம் கொண்று உண்பதால் கேக்கும் அசைவத்துக்குலேயே சேர்க்கப்படும்

மேலே படிச்சு பாருங்களேன்...முட்டை சேத்தாட்டி சைவம் தான்..இந்த தளத்தில் கூட குறிப்புகள் இருக்கும்...எக்லெஸ் கேக்

மேலும் சில பதிவுகள்