இலங்கைத்தோழிகள் சங்கம் பாகம் 4

தோழிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய வருடத்தில் நிறைவான செல்வமும் ஆரோக்கியமும் நின்மதியும் சந்தோசமும் கிடைக்க்ப்பெற்று மிக உற்சாகமான வருடமாக அமைய வாழ்த்துக்கள்.BYE BYE 2008.

அனைத்துத் தோழிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விடுமுறை முடிந்து வந்துவிட்டேன். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?
ஹாய் ஜீவி பாகம் 3 பார்த்தேன். நான் நலம். விசாரித்ததற்கு நன்றி. நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நர்மதா, இமா, அம்முலு, வத்சலா,துஷி, துஷ்யந்தி,வாணி, வேணி, காயத்ரி, தாரணி, அதிரா, ப்ரியா, வானதி,ஜீவி,ஈழவன் அண்ணா,செபா,nive,ஆர்த்தி,சஞ்சய்,அஞ்சலி,லயா,நிஷ்ஹரன்,நிஷ்ஹரி எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் நிறைய நன்மைகள் பெருகி சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்.

எங்கள் நாட்டு மக்கள் இன்னல்கள் தீர்ந்து வாழ நின்மதியான வாழ்வு அளிக்கும் ஆண்டாக இவ் ஆண்டு மலரவேண்டும் என்று பிரார்த்தித்து ஈழம்வாழ் என் அன்பு உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுரேஜினி

என்னிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
2009 இந்த புத்தாண்டு பிறந்த நேரம் எங்கள் ஈழத்தில் இருந்து இன்னல் படும் சகோதரங்கள், பெற்றோர்கள் அனைவரும் நலமாகவும், போர்கள் ஓய்ந்து ஒரு நல்ல காலம் வரவும், மற்றும் அருசுவை சகோதரிகள் நலமாகவும், வேண்டிய வரங்கள், தேவைகளும் கிடைக்க பெற ஆண்டவனை மனமுருகி வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
***** தாரணி*****

நன்றி காயத்ரி, சுரேஜினி & தாரணி.
எனது பிரார்த்தனைகளும் அதுதான். எம் ஈழத்து உறவுகளுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையவேண்டும்.
சகோதரர் ஈழவனுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மனக் கவலை மாற்றல் அரிது.........
நான் பகுதி 3 இன் தலைப்பை அறுசுவையின் முகப்பிலேயே பார்த்துக்கொண்டுவந்தேன், முடிவதற்கிடையில் எப்படியாவது பார்க்கவேண்டும் என நினைத்து அங்கு கதைப்பதற்கிடையில் பாகம் 4 ஆரம்பமாகிவிட்டது, இதையும் தவற விட்டுவிடுவேனோ என்றுதான் ஆரம்பமே களம் இறங்கிவிட்டேன்.

அனைத்து தோழிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க ஆண்டவன் அருள்புரியட்டும். நன்றி சுரேஜி என்னையும் பெயர் சொல்லி வாழ்த்தியமைக்கு. காயத்திரி, இமா, தாரணி எப்படி இருக்கிறீங்கள்? மற்றும் இலங்கைத் தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,
நான் நன்றாக இருக்கிறேன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க? உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஆ... இமா இருக்கிறீங்களா? நன்றி இமா.அரட்டை என்றால் யாராவது இருந்தால்தான் கதைக்க முடியும், நான் வரும்போது பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை.

இன்று கொஞ்சம் வேளைக்கு எழும்பிவிட்டேன்.. அதனால் என்பின்னே மெல்ல மெல்ல எல்லோரும் எழும்பிவிட்டார்கள்... இனி அப்படியே ரீ...... இன்று கடைகள் பெரும்பாலும் திறக்கும் எனவே ஒரு சுற்றுப் போய்வர உள்ளோம். இமா நீங்க எங்கே போனனீங்கள் கிறிஸ்மஸ்ஸுக்கு

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இருக்கிறேன் அதிரா. இப்ப பி.ப 10 மணி. கிறிஸ்மஸுக்கு இங்கேதான் இருந்தேன். பிறகு கிறைஸ்ட்சேச் போனோம். அழகான இடம். அங்கும் ஒரு கொலொம்பொ street இருக்கிறது. இன்று என்ன ஷொப்பிங்? எனக்கு என்ன வாங்கி வருவீர்கள்? :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அதிரா..! எப்படி இருக்கிறீர்கள்? புத்தாண்டு, கிறிஸ்த்மஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டனவா? உங்களுடைய பட்டிமன்றத்தலைப்புகள் நன்றாக இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்