கணவன் மனைவி அன்னியேனியம்

ஹிய் தேழிகளே,,,,, நான் பிரபாதாமு. அரட்டைக்கு ஒரு கருத்தை முன் வைக்கிரென். தவறூ இருந்தால் மன்னிக்கவும்.
அதாவது கணவன் மனைவி அன்னியேனியமாக இருக்க உங்களது சில டிப்ஸ். (இக்கருத்து அதிகமான தேழிகலுக்கு உதவும்).
கணவன் மனைவி இடைஎ சிரு பூசல்கல் கூட இதனால் சரிஆகும்.
இது பற்றி உங்கல் கருத்துக்கலை தெரிவியங்கல்.

ஹிய் தேழிகளே,,,,, நான் பிரபாதாமு. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து மணம் விட்டு பேசி அரிந்துக்கேள்வதுதான் என நான் நினைகிரேன். சரியே தவறே அவரை அப்படியே எற்றுக்கேள்வதுதான் வாழ்க்கை. என் கணவரிடம் நான் எந்த விசயத்தையும் மரைக்க மாட்டென். ஆனால் எல்லா ஆண்கலும் அப்படி இருப்பார்கள் என கூறாமுடியாது. அவர்வர் கணவரின் கூனாதிசைகலை கண்டு விட்டுக்குடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. இக் கருத்தை ஒவ்வருவர் வீட்டிலும் கூருவார்கள். என் விட்டிலும் கூரினர். என் வாழ்க்கை சுகமாக் இருக்கிரது. எனக்கு தெரிந்த தேழிகள் வாழ்க்கை நன்ராக் இல்லை என் கூறுகின்றானர். அதர்க்காகத்தான் இக்கருத்தை முன் வைத்தென். இதனால் டைவஸ் தடுக்கப்படலாம்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கணவன் - மனைவி ரெண்டு பேரும் குழந்தைகளாவும்-பெற்றோர்களாவும் மாறிட்டா சந்தோஷத்துக்கு குறைவு இருக்காதுனு நினைக்கிறேன். குழப்பறேனோ?

அதாவது:
சின்ன சின்ன விஷயங்கள்/ சந்தோஷங்கள்/ துக்கங்கள் எல்லாம் கூட எப்படி சின்ன குழந்தைகள் பேசிக்குமோ அப்படியே பேசிக்கணும்.

பொய் சொன்னாலும் அது பொய்னு அப்பட்டமா தெரியும் க்யூட்டான பொய்கள் சொல்லணும்.

அப்பா அம்மாக்கள் குடுமி சண்டை போட்டா கூட குழந்தைகள் சந்தோஷமா சேர்ந்து திரியும், அப்படியே திரியணும்.

இதெல்லாம் ஒரு விஷயமானு பெரியவங்க நினைக்கும் சமாச்சாரத்துக்கு எல்லாம் குட்டீஸ் ஆனந்தத்துல மூழ்குமே (சீரியல் இல்ல, சந்தோஷம்னு சொல்ல வர்றேன்..) அதே போல சந்தோஷ படணும்.

ஒரு குழந்தை எப்படி அம்மா/அப்பா பின் சுற்றி கொண்டே இருக்குமோ அப்படி சுத்தணும் (அதாவது எனக்கு இது செஞ்சு தா அது செஞ்சு தானு கேக்கணும்).

குழந்தைகள் நாளெல்லாம் விளையாடி விட்டு அவரவர் வீட்டிலும் சிறிது நேரம் இருப்பது போல, சிறிது பிரிந்தும் இருக்க வேண்டும், பிரிவுனா பிரிவு இல்ல, கொஞ்சம் ப்ரைவேட் டைம், அவ்வளவு தான்.

பெற்றோர் எப்படி குழந்தைக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்வார்களோ அப்படியே நம் ஸ்பௌஸுக்கு (தமிழ் வார்த்தை என்னப்பா..) செய்யணும்.

பெற்றோர் எப்படி ஊக்குவிக்கும் நேரத்தில் ஊக்குவித்து, கண்டிக்கும் நேரத்தில் கண்டித்தும் வைப்பார்களோ அப்படி செய்யணும்.

கணவன் - மனைவி இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு டீம், வண்டியின் சக்கரங்கள் என்பதை இருவரும் உணர்ந்து விட்டால், சண்டையாவது சச்சரவாவது! இருவரில் ஒருவர் உணரவில்லையானால் கொஞ்சம் கஷ்டபட்டு உணர வைக்க வேண்டியது தான். இருவருமே உணரவில்லையானால் அவங்களை பெத்தவங்க 4 சாத்து சாத்தி புரிய வைக்கலாம் (குழந்தைகள் தானே, அடிச்சு தான் புரிய வெக்கணும் ;D)

ஸ்ஸப்பா... கல்யாணம் ஆனதால் என்னலாம் பேச வேண்டியிருக்கு சாமி.. டூ மச் டூ மச்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹாய் ஹேமா
உங்கலின் கருத்து வாசிக்க மிகவும் அருமையாக இருக்கின்ரது. நடைமுரையில் எந்த அளவுக்கு எல்லோருக்கும் சாத்தியம் என்று விளங்கவில்லை.ஆனால் மிகவும் அருமையாக இருக்கிறது.
நன்றியுடன் அதி......

ஹ்ம்ம்..மிக்க நன்றி இப்படி ஒரு த்ரெட் தொடங்கியதற்கு

1) சண்டை சச்சரவு என்றால் யாராவது ஒருவர் விட்டுகொடுக்க வேண்டும் அப்படியென்றால் பூம் பூம் மாடு போல தலையாட்ட வேண்டும் என்பதல்ல...வாயை மூடிக் கொண்டு மவுனமாக இருக்கலாம் இதனால் வீனாக வார்த்தைகளை கொட்டுவதை தவிர்க்கலாம்
2)மனதுக்கு பிடிக்காத விஷயங்களை கணவனும் மனைவியும் பகிர்ந்து கொள்ள தகுந்த இடம் படுக்கையரை தான் அங்கு கூட நல்ல நிலையில் தான் இருக்கிறார்களா நல்ல மூட் தானா என்று பார்த்து நாசுக்காக சொல்லிவிடலாம்..அஐ ஊஇ என்று கத்தி கதறாமல் பொறுமையாக எடுத்து சொல்லலாம்
3)எக்காரணம் கொண்டு உங்களுக்கு என் மேல் பாசமே இல்லை என்று சொல்லவே கூடாது..அப்படி சொல்லிவிட்டால் ஆமா ஏற்கணவே இப்படிபட்ட பேர் தானே இனி என்ன பாசம் காட்டி என்னங்கர மாதிரி ஆகிவிடும்
4)சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டலாம்...போட்ட ட்ரெஸ் வாங்கி தந்த கிஃப்ட் அப்படி
5)நான் உங்களை அடைய எவ்வளவு கொடுத்துவச்சிருக்கேன் என்பதை நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் பேச்சுவார்த்தையில் நைசாக சொல்லிவிடலாம்...சுற்றிதிரியும் ஜென்மங்கள் கூட இப்படி வார்த்தையை கேட்டால் ஓஹ் நமக்காக ஒரு ஜீவம் உண்டு என்று நம்பி நல்ல வழிக்கு திரும்புவார்கள்
5)முடிந்த அளவு கணவனின் அம்மாவையும் அப்பாவையும் நம் சண்டைக்குள் இழுக்காமல் இருப்பது நல்லது..என்ன தான் நமக்கு கொடூரமான தோன்றினாலும் அவருடைய அப்பா அம்மாவை அவரால் விட்டுகொடுக்க முடியாதல்லவா அதை புரிந்து கொள்ள வேண்டும்
6)அதே போல் கணவன் தொட்டதுகெல்லாம் என் அம்மா சமையல் ஆஹா ஓஹோ என் அம்மா கவனிப்பு ஆஹா ஓஹோ என்று பினாத்தாமல் இருப்பது நல்லது
7)எல்லாத்திலும் கொண்டு போய் மூக்கை நுழைக்காமல் அவரவருடைய காரியங்கள் செய்ய கொஞ்சம் நேரம் கொடுத்து தள்ளி இருப்பது நல்லது
8)பாப்பர்சூட்டான நைட்டியை எல்லாம் தூக்கி கடாசி விட்டு அவங்களுக்கு பிடிக்கும் மாதிரி உடுப்பில் உலா வரலாம்.

iam very happy to join in this.a very nice topic.both huband and wife ,first they should love each other.iam newly married.i will give my sujjestion later

கணவன் மனைவி அன்னியோன்யமாக இருக்க,
1.முதலில் இருவரும் எப்பொழுதும் முகம் பார்த்து ,கனிவாக பேச வேண்டும்.
2.ஒருவரை எதிர்பார்த்து மற்றொருவர் சேர்ந்து சாப்பிட வேண்டும்,ஒன்றாக இருக்கும் சமயம்.
3.ஒருவரை எதிர்பார்த்து மற்றவர் உறங்கச்செல்லுதல் நல்லது.இது எல்லாவற்றையும் கலந்து பேசி மகிழ உதவியாக இருக்கும்.
4.கணவருக்கு மனைவியும்,மனைவிக்கு கணவரும் உடை தேர்வு செய்ய வேண்டும்,இது அவர்களின் மனதிற்கும்,கண்ணிற்கும் குளிர்ச்சியை தரும்.
5.இருவரின் மத்தியில் ஈகோ இருக்கக்கூடாது,யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்று போட்டி போட வேண்டும்,இதனால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
6.இருவரின் தகுதியறிந்து ஆசைப்பட வேண்டும்,அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
7.யாரையும் யாரோடும் compare பண்ணக்கூடாது.
8.எந்த விஷயத்தையும் compel பண்ணக்கூடாது,பிடிக்கலை என்றால் விட்டு விட வேண்டும்.அவரவருக்கு தனி குணாதிசயங்கள் இருக்கும்.
9.பிரச்சனைகளை பேசி தீர்க்க தயங்கக் கூடாது,ஒழிவு,மறைவை தவிர்ப்பது நல்லது.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இது மிகவும் அவசியம்.தேவையானதை கேட்டு பெறுவதில் தப்பில்லை,எல்லாம் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் தோன்றாது.கேட்டால் அவரவருக்கு தேவையானது கிடைக்கும்,அதை விட்டுட்டு,நான் நினைத்தேன்,இதை எதிர்பார்த்தேன் என்ற பேச்சே வேண்டாம்.
10.அவங்க அவங்க பொறுப்பை அவர்கள் சரியாக செய்ய வேண்டும்.
11.ஊடலும்,கூடலும் அவசியம்.வாழ்க்கை இன்பமாக அன்னியோன்யமாக இருக்க,இதற்கு மேல் எதுவும் தெரிந்தால் பின் எழுதுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தோழிகளே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என் தோழி எவ்வளவு செல்லியும் கேட்க மாட்டேன் என்கிராள்.
எப்பேதும் அவள் கணவனுடன் சண்டை. அதனால் தான் இந்த தலைப்பை ஆரம்பித்தேன்.
அவலுக்கு புரிய வைக்க என்னுகிரேன்.
எதிர் பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிரது.
இக்கருத்து அனைவருக்கும் உதவும்மாரு செய்தர்க்கு நன்றி.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிராபாதாமு,
நல்ல ஒரு டாப்பிக் ஆரம்பிச்சுயிருக்கேங்க
அதுக்கு முதல என் நன்றிகள்.

பொதுவா, ஆண்களை கு.மு, கு.பி என்று பிரிக்கலாம்
குழந்தைக்கு முன், குழந்தைக்கு பின்
குழந்தை வறுவதற்கு முன் affection எல்லா நமக்குத்தான்,அப்புறம் எல்லாம் பாப்பாவுக்கு போய்டும்
சிலசமயம் தோனும் 'ச்சே நாம குட்டிமாவா(என் மகள்) இருக்ககுடாதானு'.
எல்லார் வீட்டீலும் இப்படித்தானா?

e healthy

be healthy

ஹாய் பிரபா,
நல்ல டாபிக் ஆரம்பித்திங்க.
ஹாய் be healthy (உங்க பேர் என்னங்க). சரியா சொன்னிங்க. கு.மு,கு.பி என்று கணவரின் ஏக்கம் சரியே.
விசு ஒரு திரைப்படத்தில் கூறியது "என் பொண்டாட்டி இப்போ இல்ல ,பிள்ளைக்கு அம்மாதான் இருக்காங்க"
அதுபோல் பெண்களும் கு.மு கணவரை மட்டும் கவனித்துவிட்டு கு.பி கவனிப்பை குறைத்து விடுவதால் அன்னியோன்யம் மிகவும் குறைந்து விடுகிறது.
எனவே, கு.பின்பும் பெண்கள் சின்ன விஷயங்களிலாவது கணவர்களை விடாது கவனிக்கவேண்டும் என்பது என் கருத்து.
////
2.ஒருவரை எதிர்பார்த்து மற்றொருவர் சேர்ந்து சாப்பிட வேண்டும்,ஒன்றாக இருக்கும் சமயம்.
3.ஒருவரை எதிர்பார்த்து மற்றவர் உறங்கச்செல்லுதல் நல்லது.இது எல்லாவற்றையும் கலந்து பேசி மகிழ உதவியாக இருக்கும்.
4.கணவருக்கு மனைவியும்,மனைவிக்கு கணவரும் உடை தேர்வு செய்ய வேண்டும்,இது அவர்களின் மனதிற்கும்,கண்ணிற்கும் குளிர்ச்சியை தரும்.///
ஆசியா உங்களின் ideas சரியானது

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

கணவன் மனைவி இருவரும் முதலில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
என்ன பிரச்சனை வந்தாலும் இருவரும் பிரிந்து தூங்குதல் கூடாது.
இது இருவரும் மனம் விட்டுப் பேச வழி வகுக்கும்
அன்புடன் அதி

மேலும் சில பதிவுகள்