உதவி செய்யிங்க.உதவி.please.

என் பையனுக்கு இப்போ19 மாதம் ஆகுது,ஆனா நேத்திலிருந்து ஒரு கண்ணில் இருந்து லேசா பூளை(வெள்ளை கலர்ல இருக்குமெ)வருகிறது.இன்னைக்கு காலையில கண் லேசா சிவப்பா இருக்கு.இதுக்கு கை வைத்தியம் தெரிந்தா சொல்லுங்கோ.நன்றி

இது சூட்டினால் வருவதுதான் தலைக்கு ஊற்றுங்கள் ரோஸ் வாட்டர் ஒரு சொட்டு போட்டால் போதும் இதுக்கு சரியாகலைன்னா மெட்ராஸ் கண்வலியாக இருக்கும் மருந்து கடையில் ஒரு சிறிய ட்யூப் மருந்து கிடைக்கும் வாங்கி போடுங்கள்சரியாகிடும்

ஹாய் ரம்பா.குழந்தைக்கு உடம்பு சூடானாலும் இந்தமாதரிவரும் தலயில் என்னை வைத்து குலிக்க வய்யிங்கள் தினமும். நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கிரேர்களா? உங்கல் உடம்பில் அதிக சூடு இருந்தாலும் உங்கல் மூலமாகவும் குழந்தைக்கு போகும்.தாயிம் குழந்தையிம் என்னை வய்த்து குழிதால் சரியாகும்.

எனக்கு குழந்த பிறந்த முதல் மாசமே என் பையனுக்கு அப்படி இருந்தது நான் அவ்வாரு செய்யவும் எனக்கு அந்த ப்ரச்சனயே இல்லய்.பயப்படாதிங்க தோழி ஒன்ரும் செய்யாது.

ரொம்ப நன்றிங்க.நான் ரொம்ப பயந்துட்டேன்.இப்பொ அவனுக்கு 2 கன்னுமே சிவந்திருக்கு.இந்நேரம் தலைக்கு ஆயில் வைத்து தலைக்கு குளிக்கலாமா?சந்தேகமாக இருக்கு.அவன் மருந்து போடவே விடமாட்டான் .அதான் கவலையா இருக்கு.

ramba

தோழிகள் சொல்வதுபோல் இது உடல் சூட்டின்னால் வரும் பிரச்னைதான். தேங்காய் எண்ணெயுடன் சிறிது சுத்தமான விளக்கெண்ணெயும் கலந்து தலைக்கு தடவவும். அத்துடன் கண்ணிலும் 1 சொட்டு விடலாம். ஆனால், விளக்கெண்ணெய் மிகவும் சுத்தமானதாக இருக்கவேண்டும்.
அன்புடன்,
கீதாலஷ்மி!

ரொம்ப நன்றிங்க.நான் தாய்ப்பால் கொடுக்கவில்லை.பாட்டில் பால் தான்ங்க.குளிர்ச்சியான் சாப்பாடு எதாவது கொடுக்கலாமா.நன்றி

ramba

நாம் நெற்றியில் வைக்கும் குங்குமம் தெரியாமல் குழந்தை கண்ணில் விழுந்திருந்தாலும், இதுபோல் கண்கள் சிவந்துபோக வாய்ப்புண்டு.
அது தானாகவே சரியாகிவிடும். தொடர்ந்து 2 நாட்களுக்கு குறையாமல் இருந்தால் தாமதிக்காமல் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது
அன்புடன்,
கீதாலஷ்மி!

குழந்தைக்கு கொஞ்ஜமா தயிர் விட்டு நிரய பால் சேர்து சீர்புளிப்பாக நன்கு பிசந்து சாதம் கொடுங்கல்.பேபி யோகர்ட் அதுவும் கொடுக்கலாம்.முதலில் நீங்கல் டாக்டரிடம் கேலுங்கல் குழந்தை விஷயதில் அதுதான் நல்லது நல்லது என்ரு நினைகிரேன் தோழி.

என் பையனுக்கு 13 மாசம் இருக்கும் போது, இதே மாதிரி தான் காலைல பார்த்தா கண்ணுல பூளையா இருக்கும் கண்ணுக் கூட திறக்க முடியாது.hot water ல பஞ்சு வைத்து clean பன்னுவேன். கண்ணு எல்லாம் சிகப்பா இருந்தது..4 நாட்கள் அப்படி தான் இருந்தது.Dr கிட்ட காமிச்சேன் கண்ணுல போடுவதற்கு ointmentகொடுத்தாங்க 2,3 நாளும் அப்படியே தான் இருந்த்து..எங்க அம்மா கிட்டே சொன்னேன் , அவுங்க body heat டா இருந்தா இந்த மாதிரி வரும். கண்ணுல தாய்ப்பாலை விடு சொன்னாக ..அவன் துங்கும் போது தாய்ப்பாலை இரண்டு கண்ணுலையும் ஒவ்வொரு சொட்டு விட்டோன் 2 நாலுலே சரியாயிட்டு..இப்போ 22மாசம் ஆகுது, போன மாசம் இதே மாதிரி வந்தது இரண்டாவது நாளே தாய்ப்பால் விட்டேன் சரியானது..என் பையணுக்கு நான் பன்னதால் தான் உங்க கிட்ட சொல்லுறேன்..

மேலும் சில பதிவுகள்