பிளாஸ்டிக் போத்தல்களும் பயங்கரமும்

நாங்கள் சில நேரம் ஒரே பிளாஸ்டிக் போத்தலை தண்ணீர் குடிக்க பாவிக்கின்றோம். ஆனால் இதனால் வரும் பயங்கரம் நமக்கு தெரிவதில்லை.
ஒரு பள்ளிச் சிறுமி திடீரென இறந்தமைக்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் கண்டு பிடித்த விடயம் என்னவென்றால், அந்த சிறுமி பதினாறு மாதங்களாக ஒரே பிளாஸ்டிக் போத்தலை வெளியில் அழகாக பெயிண்ட் பண்ணி தண்ணீர் குடிக்க பாவித்து வந்து இருக்கிறாள். எப்படி இது நடந்தது? அநேகமான பிளாஸ்டிக் போத்தல்கள் PET (Polyethylene terephthalate) என்ற ரசாயன பொருள் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றது. இப்படி தயாரிக்கப்படும் போத்தல்கள் ஒரு தரம் பாவிப்பதற்கு ஏற்றவாறு தான் தயாரிக்கப் படுகின்றன. காரணம் நாளாந்தம் கழுவி கழுவி பாவிப்பதால் குறிப்பிட்ட ரசாயானம் தரமிழந்து உருகும் நிலையை அடைகின்றது. அவ்வாறே அந்த ரசாயனமே அந்த சிறுமியின் குடி நீரில் நாளாந்தம் கசிந்து அவளின் உயிரை பறித்தது.

மேலும் நாட்கணக்கில் வாகனத்தில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தலிலுள்ள (உடைக்கப்படாத நிலையில் இருந்தாலும் கூட) நீரை அறவே குடிக்கக் கூடாது என்றே அறிவுறுத்தப்படுகின்றது. காரணம் பிளாஸ்டிக் போத்தல்கள் வெயிலினாலோ அல்லது ஏதோ ஒரு வகையில் சூடாகும் போது ரசாயனங்கள் உருகி அதிலுள்ள நீரில் கலந்து விடும். இவற்றால் cancer போன்ற நோய்கள் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஆகக் கூடியது மூன்று நாட்களுக்குள் நாங்கள் போத்தலை பாவித்து விட்டு எறிந்து விட வேண்டும். அவ்வாறு பாவிக்கும் நிலை ஏற்பட்டால் வெயில் படவோ அல்லது சூடான இடங்களிலோ வைத்தல் கூடாது. அவற்றுள் சூடான நீரை விடாது நன்கு ஆறிய நீரை தான் விட வேண்டும்.

லக்ஷ்மி ராஜா
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

நல்ல பயனுள்ள கருத்துக்கல். பொதுவாகவே பாலித்தீன் பாட்டில்கள், கவர்கள் அதிகம் உபயோகிப்பது நல்லதல்ல. ஆனாலும் நாம் அதனைத்தான் அதிகம் விரும்பி உபயோகிக்கின்றோம். நாகரீக வளர்ச்சியில் இதெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

can u anyone help me.i want that home based online job.i searched online most of that r scammed.they want to paid some money.once they got money no response. i have 1.6years child so i will do online jobs.

can u anyone help me.i want that home based online job.i searched online most of that r scammed.they want to paid some money.once they got money no response. i have 1.6years child so i will do online jobs. plz reply me

மேலும் சில பதிவுகள்