சிரிய நாடு - பகுதி 2

தோழிகள் பலரும் சிரிய (Syria) நாடு பற்றி தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை பார்த்து எனக்கும் இந்த நாட்டை பற்றி எழுத ஆசை வந்துவிட்டது. :) எனக்கு தெரிந்த விஷயங்களை என் அனுபவங்களை இங்கே எழுதுகிறேன். உங்களுக்கு சுவாரச்யாமாக இருந்தால் சந்தோஷம்... இதுவரை எழுதிய அனுபவம் இல்லை, இதுவே முதன் முறை, பிழைகளுக்கு மன்னிக்கவேண்டும்.

பகுதி 1, 100 பதிவுகளை தாண்டியதால் ஓப்பன் செய்ய தாமதமாகும்.... ஆகவே தோழிகள் அனைவரும் "சிரிய நாடு - பகுதி 2"ல் தொடர வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன். இதையும் 100 பதிவு ஆக்குங்கோ, என் சந்தோஷத்தை பலமடங்காகுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ளாஸ் செய்வது எப்படின்னு நான் டிஸ்கவரி சேனலில்தான் பார்த்தேன். அவர்கள் அதை ஊதி ஊதி சேப்கொண்டுவருவது பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
சவுதி செல்வி

சவுதி செல்வி

சிரியாவின் சொகுசு ராணியே! :) நலமா? உங்க எல்லா பதிவுகளையும் தொடர்ந்து படிக்கிறேன். உங்க எழுத்திலேயே நுழைந்து, கலந்து, அப்படியே சிரியாவை சுற்றிக்கொண்டிருக்கிறேன், உங்களோடு :-) எந்தளவுக்கு என்றால், உங்க ஆரம்ப பதிவுகளைப் பார்த்த அன்றே, மல்லிகை பூக்கள் இருபுறமும் பூத்து குலுங்கி, நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் ஒரு பாலவனச்சோலையில் மெய்மறந்து நடந்து போவதுபோல் ஒரு கனவு! :) ரொம்ப சூப்பரா ஒவ்வொரு காட்சியும் கண்முன்னால் கொண்டு வர்றீங்க வனிதா! வாழ்த்துக்கள், நன்றிகள்! அராபிக் எக்ஸாம்காக (எங்களுக்கிருந்த சிலபஸில்) சிரியாவை பற்றிய பாடங்கள் படித்திருக்கிறேன். உங்கள் மூலம் மறக்க முடியாதபடி இன்னும் அதிகமாக தெரிந்துக்கொண்டேன்பா! எப்படியும் வாழ்நாளில் ஒரு முறையாவது சிரியாவை பார்த்தே ஆகணும் என்று ஆவலாக உள்ளது! இறைவன் நாடினால் உங்க வீட்டுக்கு... அதாம்ப்பா, சிரியாவுக்கு வருவேன். எப்படிதான் இந்த அறுசுவையிலிருந்து வரும் கூட்டத்தை சமாளிக்கப்போறீங்களோ, பாவம்ப்பா நீங்க :-)

ஐ ! ஷாப்பிங்,நமக்கு பிடித்த பகுதி,என்னோட பொழுது போக்கே விண்டொ ஷாப்பிங் தான்,எப்பவும் எங்கேயாவது போனால் கற்பனையில் பையை நிரப்பி வருவேன்.இப்ப எனக்கு blown glass jar வாங்கனும்,வாங்கியாச்சு.ரொம்ப அழகு.இனி global village போனால் syria stall போய் இந்த ஜார் வாங்கனும்.பார்ப்போம்.என்னோட ஷோகேஷில் ஊரில் கூட குட்டி குட்டி ஜார் வைத்து இருக்கிறேன்..
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்வி... நீங்க சொல்றது ரொம்ப சரி, நானும் அதை பார்த்தேன், இதுவும் அதே போல் தான் இருக்கும்... ஆனாலும் இவர்கள் இன்னும் சின்ன அடுப்பு போல் வைத்து அதிக நவீன வசதிகள் இல்லாது குட்டி கடைகளில் செய்வது பார்க்க வியப்பாக இருக்கும். :)

நான் நலம் ஆஸ்மா... நீங்க நலமா? ஊரை அப்படியே சுத்தி பார்க்க கூடாது, இங்க வாங்க, நான் காட்டறேன் ஊரை.... அறுசுவையே படை திரண்டு வந்தாலும் அடியேனுக்கு மகிழ்ச்சியே. :)

ஆசியா... நீங்க வெச்சிருக்கர்து சிரியன் க்லாஸ்'ஆ??! இல்லன்னா நிச்சயம் ஒன்னு வாங்குங்க. ஏன்னா ப்லோன் கிளாஸின் பிறப்பிடமே சிரியா தான்... வேறு எந்த நாட்டுடையது இருந்தாலும் சிரியாவினுடையது இருந்தால் அது ஒரு சிறப்பு. :)

அனைவருக்கும் மிக்க நன்றி. நாளை காலை வந்து பதிவை தொடருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை நேரம்... 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி நானும் இன்னும் ஒரு இந்திய தோழியும் சூக் மாதத் பாஷா (Straight Street)'கு சென்றோம். அங்கே மற்ற நாட்டு தோழிகள் எல்லாம் காத்திருந்தனர். இனி கார் செல்ல முடியாத பாதை, நடந்து தான் போக வேண்டும் என்றார்கள். சரி என்று கிளம்பினோம்... காலையில் சாப்பிடாம பசியோட நடக்க விடுதுங்க பாவிங்க'னு நினைச்சுகிட்டு போனேன். அவங்க அழைத்து போனது பழைய டமாசியன் வீடுகள்.

சின்ன சின்ன தெரு... அதில் பெரிய கதவுகள்... மிக அழகான வேலைப்பாடுகளுடன். உள்ளே நுழந்தோம்... ஆகா... திறந்த வாசல், நிறைய ரோஜா பூச்செடிகள், ஆரஞ்சு மரங்கள், மல்லிகை பூக்கள், இவற்றின் நடுவே அழகான நீர் தொட்டி (ஸ்விம்மிங் பூல் போல இருக்கும்). அதன் ஒவ்வொரு பக்கத்திலும் கரு நாகத்தின் சிலை இருக்கும்... அதன் வாயில் இருந்து நீர் ஊற்றுவது போன்ற அமைப்பு. பார்க்க வித்தியாசமா இருந்தது. அந்த காலத்து ராஜ வாழ்க்கை. அந்த இடத்தை சுற்றி இருந்தது வீடு. தோட்டத்தின் நடுவே வீட்டை பார்த்து கொண்டே நடந்தேன், காலில் ஏதோ பட்டது.... கீழே பார்த்து பயந்து போனேன்... குட்டி ஆமை!!! என்னை கண்டதும் அவர் அவருடைய வழக்கமான வேகத்தில்(நடையில்) பூச்செடிகளுக்குள் போய் மறைந்து கொள்ள போனார். சிரிப்பு வந்துட்டுது அது போவதை பார்த்ததும். எங்க இருந்து வந்தது இந்த ஆமைன்னு கேட்டேன்... யாருக்கும் தெரியவில்லை.

சில நிமிடங்களில் அந்த வீட்டை இப்போது உணவு விடுதியாக மாற்ற வேலை பார்க்கும் பெண் ஒருவர் வந்தார். எங்களுக்கு அவர் தான் கைடு. அவர் சொன்ன விஷையங்கள் புதிதாக இருந்தது. அதாவது சிரிய நாட்டு மக்கள் பெரிய பணம் படைத்தவர்களாக இருந்தாள் அவர்கள் வீட்டில் உள்ளே நுழைந்ததும் இது போன்ற தண்ணீர் தேங்கும் தொட்டி இருக்குமாம்.. அதில் நாகத்தின் சிலை இருந்தால் அது அவர்களின் வசதியை காட்டுமாம். ஆமைகள் சுற்றி திரிந்தாள் அவர்கள் செல்வந்தர்களாகவும், பெரிதும் மதிக்க படுபவர்களாகவும் இருப்பார்களாம். அட பாவமே... இதை என்னன்னு சொல்ல??!! நம்ம ஊருல ஆமை பூந்த வீடுன்னா உடனே வித்துட்டு ஓடியே போவாங்களே... நாகம் பூந்தா கெட்ட சகுனம்'னு சொல்லுவாங்களே... ஒரெ குழப்பம்.

அப்போது என்னுடன் வந்த இந்திய தோழி சொன்னார்.. "இதுக்கு தான் சூக் பக்கத்தில் ஒரு தெருவில் பாட்டிலில் நிறைய பாம்பு குட்டி, பெட்டியில் குட்டி குட்டி ஆமை எல்லாம் விக்கறாங்க போல"னு. அவர் சொன்ன போது நான் அந்த இடத்தை பார்த்திருக்க வில்லை... ஆனல் பின்பு பல சமையம் அந்த கடைகளையும் அவர்கள் விர்ப்பதையும் பார்த்து இருக்கேன். பிடி உள்ள மூடி போட்ட ப்லாஸ்டிக் பாட்டிலில் நிறைய பாம்புகள் விளையாடும். பார்க்க.... சொல்லும்போதே உடல் உதருது... அப்போ எப்படி இருக்கும்'னு நினைச்சு பாருங்க. நம்ம ஊரில் கிளி விக்கும் கூடு போல் ஒன்றில் நிறைய குட்டி ஆமைகள் இருக்கும். இவர்களுக்கு இவை தான் செல்ல பிராணிகள். இதுவரை இங்கு இருந்த 2 வருடங்களில் நான் 5 அல்லது 6 நாய் குட்டிகள் மட்டுமே பார்த்து இருக்கேன். வாங்க ஆசை பட்டபோது அவங்களுக்கும் நம்ம போல் பாஸ்போர்ட் வீசா'னு சொல்லி மொத்தமா 5000 ஆகும்'னு சொன்னாங்க... நாய் குட்டி வாங்கும் ஆசையே போச்சு.

இப்படி அந்த முற்றம் பார்த்து விட்டு... வீட்டை பார்க்க உள்ளே போனோம்.... ஒரு பக்கம் சமையல் அரை. நம்ம ஊர் கிராமத்து வீடு போல் இருந்தது. ஒரு பக்கம் விருந்தினர் உட்காரும் இடம்... மொஸைக் வேலைப்பாடு உள்ள சோபாக்கள்.... பிரம்மான்டமான சான்லியர்கள்.... பார்க்க வியப்பாய் இருந்தது. அதன் அருகே ஒரு அரை... சின்னதாக.... வெளி ஆண்கள் வந்தால் பெண்கள் அங்கு தான் மறைந்து கொள்வார்களாம். மற்றொரு பக்கம் இவர்கள் தொழும் திசையை பார்த்தார்போல் ஒரு அரை முழுக்க தரைவிரிப்போடு.... அது தான் அனைவரும் தொழும் இடமாம். இப்படியாக வீட்டை பார்த்து முடித்தோம்.

இன்னும் ஒரு வீட்டுக்கு அழைத்து போனார்கள்... அங்கு நுழைந்ததும் ஒரு குட்டி தொட்டி, தண்ணீர் தேங்கவில்லை... அது ஏழ்மையானவர்கள் வீடாம். அதில் ஒரு குழாய் இருந்தது, பராதா நதியின் நீர் அந்த காலத்தில் எல்லா வீடுகளுக்கும் வந்த குழாயாம் அது. இப்போது காய்ந்து கிடக்கிறது. இதுவும் எல்லா வீடுகளிலும் இருக்குமாம். எல்லாம் பார்த்த எனக்கு வரக்கூடாத சந்தேகம் வந்தது... பணம் படைத்தவர் வீட்டிலும் சரி, ஏழையின் வீட்டிலும் சரி.... குளியலரை எங்கே??!!! தாங்க முடியாம கேட்டே விட்டேன். அந்த பெண் "அவர்கள் ஹமாமில் குளிப்பார்கள்"என்றாள். ஒரு நிமிஷம் நம்ம மக்கு மண்டை வழக்கம் போல... "ஐ... நம்ம ஊர் போல் இங்கும் ஹமாம் சோப் இருக்கு போல"னு சந்தோஷ பட்டுச்சு. உடனே மண்டையில் குட்டு வைப்பது போல் அந்த பெண் விளக்கம் குடுத்தார்.. "ஹமாம் என்றால் குளியல் அரை என்று அர்த்தம். இங்கு ஊருக்குள் ஆங்காங்கே பொதுவான குளியலரை உண்டு, அங்கு தான் குளிப்பார்கள்" என்று. அதையும் அழைத்து சென்று காட்டினார்.... நடுவில் ஒரு தொட்டி போலும், சுற்றி தடுப்பு வைத்து தடுப்பு வைத்து சின்ன சின்ன அரை போலும் இருந்தது.... இவர்கள் வாழ்க்கை முறை எனக்கு வியப்பாக இருந்தது !!! ஆனால் இதை விடவும் வியப்பான விஷையங்கள் பல காத்திருந்தன !!!

- நாளை தொடர்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா, வனிதா, இந்த ஹமாம் சோப்பிற்கு பெயர் காரணம் இதுதானா? அது சிரியாவிலிருந்து இறக்குமதி ஆன பெயரா?
நம் நாட்டு மூடபழக்கவழக்கங்கள் சில நாடுகளில் ஒத்துவராது.. இங்கு கூட நிறைய பூனைகள் சுற்றிட்டு இருக்கும். நம் ஊர் மாதிரி பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லேன்னு நினைச்சு நின்னா, நின்னுட்டே இருக்க வேண்டியதுதான். ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து வெளியில் போக முடியாது.

அடடா சாய் கீதா.... அங்கும் இதுக தொல்லை தானா??? இங்கையும் நிறைய பூனை சுத்தும்... பாரக்கவே பயங்கரமா இருக்கும், பெரிய பெரிய போத்து பூனைகள். :( இவங்க நாகமெல்லாம் சிலையா தான் வெக்கிறாங்க. வளர்க்க இந்த குட்டி ஆமையும், சின்ன வகை தண்ணி பாம்பும் தான். நம்பிக்கை எப்படியோ.... பாம்புன்னா படையும் நடுங்குமே!!! :) இவங்க மட்டும் பயப்படமா இருப்பங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் ஊருக்கு போயிட்டு வந்தபின், உங்கள் தொடரைப் படிக்கிறேன்ப்பா.

அன்புடன் :-)
உத்தமி :-)

வனிதா,

சிறிதும் சுவை குன்றாமல் எழுதுறீங்க.

நம்ம ஊரில் "ஆமை புகுந்த வீடு விளங்காது" என்று சொல்லுவது உண்மையில் பொறாமை, அறியாமை, இயலாமை, முயலாமை போன்றவற்றைதான் என்று படித்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்